search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் 2-வது அணு உலையில் விரைவில் மின்உற்பத்தி தொடங்கும்: இந்திய அணுசக்தி கழக உறுப்பினர் பேட்டி
    X

    கூடங்குளம் 2-வது அணு உலையில் விரைவில் மின்உற்பத்தி தொடங்கும்: இந்திய அணுசக்தி கழக உறுப்பினர் பேட்டி

    கூடங்குளம் 2-வது அணு உலையில் விரைவில் மின்உற்பத்தி தொடங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது என இந்திய அணுசக்தி கழக உறுப்பினர் பேட்டியில் கூறியுள்ளார்.
    சென்னை:

    இந்திய அணுசக்தி கழக உறுப்பினர் சேகர்பாசு, மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:–

    கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தியை தொடங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது. மின்உற்பத்திக்கான கருவி அணுஉலையுடன் இணைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. கூடிய விரைவில் அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கப்படும்.

    3-வது மற்றும் 4-வது அணுஉலைகள் அமைப்பதற்கான ஆய்வு பணிகள், கட்டுமான பணிகள் வருகிற 2017-ம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது. 5 மற்றும் 6-வது அணுஉலைகளை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை 2017-ம் ஆண்டு மத்தியில் நிறைவடைந்து ஆய்வு பணிகள் தொடங்கும்.

    கல்பாக்கத்தில் மின்உற்பத்தியை தொடங்க அதிநவீன கருவிகள் கொண்ட மின்உலை அமைக்கும் பணி நடக்கிறது. விரைவில் கல்பாக்கத்தில் இருந்து மின்சார உற்பத்தி தொடங்கப்படும். இந்தியாவில் அணுஉலைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×