search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுந்தப்பாடி அருகே உள்ள காந்தி கோவிலில் வரும் 2-ந் தேதி ஜெயந்தி விழா நடக்கிறது
    X

    கவுந்தப்பாடி அருகே உள்ள காந்தி கோவிலில் வரும் 2-ந் தேதி ஜெயந்தி விழா நடக்கிறது

    கவுந்தப்பாடி அருகே உள்ள காந்தி கோவிலில் வரும் 2-ந்தேதி ஜெயந்தி விழாவை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடக்கிறது. அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    ஈரோடு :

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம்பாளையத்தில் தேசப்பிதா மகாத்மா காந்திக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலில் காந்தி மற்றும் கஸ்தூரிபாய் சிலைகள் (விக்கிரகங்கள்) உள்ளது. காந்தி மற்றும் கஸ்தூரிபாய் சிலைகளுக்கு பூஜையும் வழிபாடும் நடந்து வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ந்தேதி இந்த காந்தி கோவிலில் காந்தி ஜெயந்தி திருவிழா சிறப்பாக நடக்கும். இதேபோல் இந்தாண்டும் வரும் (அக்டோபர்) 2-ந் தேதி ஜெயந்தி விழா உற்சாகத்துடன் கொண் டாடப்படுகிறது.

    விழாவையொட்டி வரும் 1-ந் தேதி மாலை 4மணிக்கு வாணி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வருகிறார்கள். தீர்த்தத்துடன் ஊர்வலமாக வரும் பக்தர்கள் காந்தி கோவிலை அடைந்ததும் அங்கு மகாத்மா காந்தி அன்னை கஸ்தூரிபாய் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மறுநாள் (2-ந் தேதி) காலை 9 மணி முதல் 11 மணிவரை சிறப்பு அலங்கார பூஜை தீபாராதனைகள் நடக்கிறது.

    விழாவில் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு காந்தி - கஸ்தூரிபாயை வழிபடு கிறார்கள்.அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    காலை 11 மணிக்கு மேல் மகாமாரியம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. விழாவையொட்டி அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×