search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட 46 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
    X

    நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட 46 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

    நாகர்கோவிலில் 27 கடைகளில் சோதனை செய்து தடை செய்யப்பட்ட 46 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகரில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக கலெக்டருக்கு ஏராளமான புகார்கள் சென்றது.
    இதைதொடர்ந்து இதுபற்றி நடவடிக்கை எடுக்கும் படி நாகர்கோவில் நகராட்சிக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவிட்டார்.

    நாகர்கோவில் நகராட்சி நகர்நல அலுவலர் வினோத் ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், சுரேஷ், சத்தியராஜ், மாதேவன் பிள்ளை, ரத்தினகுமார் ஆகியோர் இன்று நாகர்கோவில் நகர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் வடசேரி, கோட்டார், செட்டிகுளம் உள்பட நாகர்கோவில் நகரில் 27 கடைகளில் சோதனை செய்தனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. மொத்தம் 46 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து இதுபோல சோதனை நடத்தப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
    Next Story
    ×