என் மலர்

  செய்திகள்

  மதுரை சிந்தாமணியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
  X

  மதுரை சிந்தாமணியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை சிந்தாமணியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலியானார்.

  மதுரை:

  மதுரை சிந்தாமணி புதுத் தெருவைச் சேர்ந்தவர் சந்திரா (வயது63). இவர், தனது மகன் மதியழகனுடன் மோட்டார் சைக்கிளில் மடப்புரத்தில் உள்ள பத்ர காளி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

  அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். சிந்தாமணி ரிங்ரோட்டு விலக்கில் வரும்போது ரோட்டோரத்தில் கிடந்த மணலில் மோட்டார் சைக்கிள் சறுக்கியது. இதில் சந்திரா கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.

  உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சந்திரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து மதுரை மாநகர் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×