என் மலர்

செய்திகள்

பொள்ளாச்சி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் மனைவியுடன் தற்கொலை
X

பொள்ளாச்சி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் மனைவியுடன் தற்கொலை

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பொள்ளாச்சி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 65). இவரது மனைவி சாந்தி (55). இவர்களுக்கு ராம்குமார் (35) என்ற ஒரு மகன் உள்ளார்.

ராம்குமார், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

நடராஜ் சென்னையில் கடந்த சில வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். பின்னர் ஊருக்கு திரும்பி விவசாயமும் , ரியல் எஸ்டேட் தொழிலும் பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை நடராஜ் வீட் டின் முன்பக்க கதவு நீண்ட நேரமாக சாத்தி கிடந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேக மடைந்து ஜன்னல் வழியே பார்த்தனர்.

அப்போது நடராஜ், அவரது மனைவி சாந்தி ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கினர். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கணவன்-மனைவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் நடராஜ் மனைவியுடன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story