என் மலர்

  செய்திகள்

  வத்தலக்குண்டு அருகே தாய் கண்முன் சிறுவன் வேன் மோதி பலி
  X

  வத்தலக்குண்டு அருகே தாய் கண்முன் சிறுவன் வேன் மோதி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வத்தலக்குண்டு அருகே வேன் மோதியதில் தாய் கண் முன்னே சிறுவன் பலியானான்.

  வத்தலக்குண்டு:

  தேனி மாவட்டம் ஜெயமங்கலம் அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார். ஜே.சி.பி. டிரைவராக உள்ளார். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு கிஷோர் என்ற 2½ வயது மகன் மற்றும் 8 மாத பெண் குழந்தை உள்ளது. இன்று காலை வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி இருளப்பன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்தனர். பஸ்சில் இருந்து இறங்கி சாலையை கடக்கும்போது தாயின் கையை உதறிவிட்டு கிஷோர் சென்றான்.

  அப்போது பெரிய குளத்தில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி வந்த வேன் சிறுவன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கிஷோர் பலியானான்.

  இது குறித்து தகவல் அறிந்ததும் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  வேனை ஓட்டி வந்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×