என் மலர்

  செய்திகள்

  திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பெண் படுகாயம்
  X

  திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பெண் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.
  பூதலூர்:

  திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள முல்லக்குடி அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 35). இவர் தனது மனைவி லதாவுடன் திருக்காட்டுப்பள்ளி வந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். கடுங்கால் ஆற்றின் கரைஅருகில் சென்ற போது பின்னால் ஜானகிராமன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.

  இதில் கீழே விழுந்து லதா படுகாயமடைந்தார். உடனடியாக திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×