என் மலர்

  செய்திகள்

  குடிக்க கூடாது என மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
  X

  குடிக்க கூடாது என மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் அருகே குடிக்க கூடாது என மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  சேலம்:

  சேலம் அருகே உள்ளது குப்பனூர். இந்த ஊரை சேர்ந்தவர் முருகன்(வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். முருகனுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வார். இவரை அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வந்தனர்.

  இதுபோல் சில நாட்களுக்கு முன்பு முருகன் மது குடித்து வந்தார். இதை அறிந்த அவரது மனைவி அவரை கண்டித்தார். இதில் அவர்கள் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்டு முருகனின் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் வாழ்க்கை வெறுப்படைந்த முருகன் செடிகளுக்கு அடிக்க வைத்து இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை அறிந்த உறவினர்கள் முருகனை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் அதற்குள் முருகன் இறந்து விட்டார்.

  இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட வீராணம் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய மூர்த்தி மற்றும் போலீசார் முருகனின் உடலை மீட்டு விசாரித்து வருகிறார்கள்.

  Next Story
  ×