search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் வாழை மரங்களை நாசமாக்கிய காட்டு யானைகள்
    X

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் வாழை மரங்களை நாசமாக்கிய காட்டு யானைகள்

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் வாழை மரங்களை காட்டு யானைகள் நாசப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
    பெரும்பாறை:

    திண்டுக்கல் அருகே கொடைக்கானல் கீழ் மலையில் உள்ள பெரியூர் பகுதியில் காப்பி, வாழை, ஆரஞ்சு, மிளகு, அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக யானைகள் பெத்தேல்புரம், சிறுவாட்டு, கோம்பை, தலையூத்து வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரியூர், பள்ளத்துக்கால்வாய், ஆசாரிப்பட்டி, கருவாட்டுவயல் பகுதியில் உள்ள 8-க்கும் மேற்பட்ட தோட்டங்களுக்குள் புகுந்தன.

    காப்பி தோட்டங்களில் உள்ள முள்வேலி, சோலார் வேலி போன்றவைகளை சேதமாக்கி தோட்டங்களுக்குள் புகுந்து காப்பி, வாழை, ஆரஞ்சு, மிளகு. அவரை, பீன்ஸ், சவ்சவ் போன்ற பயிர்கள் மற்றும் பலா, கூந்தப்பனை மரங்களை வேரோடு சாய்த்து நாசப்படுத்தியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
    Next Story
    ×