என் மலர்

  செய்திகள்

  அவனியாபுரத்தில் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
  X

  அவனியாபுரத்தில் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சரியாக படிக்காத 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  மதுரை:

  மதுரை அவனியாபுரம் வாசுகி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மீனாட்சி. இவர்களது 2-வது மகன் சுப்பையா (வயது13). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

  இந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் இருந்த சுப்பையா தனி அறைக்குள் சென்றான். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் அவனது தாய் மீனாட்சி கதவை தட்டினார். அப்போதும் கதவு திறக்கப்பட வில்லை.

  பின்னர் கதவை திறந்து பார்த்தபோது மாணவன் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பிணத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, முதல் கட்ட விசாரணையில் மாணவன் சுப்பையா சரியாக படிக்காமல் இருந்துள்ளான். இதனால் வீட்டில் கண்டித்தனர்.

  மேலும் இன்று பள்ளியில் பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், எனவே பெற்றோரை அழைத்து வரும்படியும் பள்ளி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. பெற்றோரை பள்ளிக்கு அழைத்து சென்றால் மேலும் கண்டிப்பார்களோ என்ற பயத்தில் தூக்குப் போட்டு இறந்து இருப்பதாக தெரியவந்தது.

  இது குறித்து மாணவனின் தாய் மீனாட்சி கொடுத்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லு, சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×