என் மலர்

  செய்திகள்

  தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது
  X

  தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ஒரு சவரன் ரூ.23,720-க்கு விற்பனையாகிறது.
  சென்னை:

  தங்கம் விலை பவுனுக்கு ரூ.288 குறைந்து திடீர் சரிவை சந்தித்துள்ளது.

  சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை கடந்து விற்றது. நேற்று முன்தினம் பவுன் ரூ.23 ஆயிரத்து 912 ஆக இருந்தது. நேற்று ரூ.96 அதிகரித்து ரூ.24 ஆயிரத்து 8-க்கு விற்றது.

  இன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.288 குறைந்தது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 720 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.36 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,965-க்கு விற்கிறது

  பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பால் தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் நிலவரம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளது.

  வெள்ளி கிலோவுக்கு ரூ.1610 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.47 ஆயிரத்து 255 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.50-60-க்கு விற்கிறது.
  Next Story
  ×