என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பட்டினப்பாக்கத்தில் மூடப்பட்டுள்ள மதுக்கடை முன்பு பெண்கள் தீக்குளிக்க முயற்சி பட்டினப்பாக்கத்தில் மூடப்பட்டுள்ள மதுக்கடை முன்பு பெண்கள் தீக்குளிக்க முயற்சி](https://img.maalaimalar.com/Articles/2016/Jul/201607071259320843_women-self-immolation-attempt-before-pattinapakkam-Tasmac_SECVPF.gif)
X
பட்டினப்பாக்கத்தில் மூடப்பட்டுள்ள மதுக்கடை முன்பு பெண்கள் தீக்குளிக்க முயற்சி
By
மாலை மலர்7 July 2016 7:29 AM GMT (Updated: 7 July 2016 7:29 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பட்டினப்பாக்கம் மதுக்கடை முன்பு பெண்கள் அமைப்பினர் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ம.க. மகளிர் அணியை சேர்ந்த ஆக்னஸ் என்பவர் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
சென்னை:
சென்னை பட்டினப்பாக்கத்தில் வழிப்பறி சம்பவத்தின் போது ஆசிரியை நந்தினி மற்றும் சாகர் என்ற முதியவர் ஆகியோர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருணாகரன் என்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு அங்குள்ள மதுக்கடையே காரணம் என்று கூறி அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக பிரச்சனைக்குரிய மதுக்கடை மூடப்பட்டுள்ளது.
அந்த கடை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார் வசதி இல்லாத பட்டினப்பாக்கம் மதுக்கடைக்கு மதுவாங்க வருபவர்கள் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் வைத்தே மது அருந்துவதாகவும் இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில் பட்டினப்பாக்கம் மதுக்கடை முன்பு பெண்கள் அமைப்பினர் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ம.க. மகளிர் அணியை சேர்ந்த ஆக்னஸ் என்பவர் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
தனது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றையும் தீ வைத்து எரிக்க போவதாகவும் அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் மண்எண்ணை கேனை பிடுங்கி எரிந்தனர். தீக்குளிக்க முயன்ற ஆக்னசின் உடலில் தண்ணீரை ஊற்றினர். மேலும் சில பெண்களும் தீ குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்களை கைது செய்தனர். இதனால் பட்டினப்பாக்கத்தில் பரபரப்பு நிலவியது.
கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)