search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் குடிநீர் சுகாதார விழிப்புணர்வு பேரணி
    X

    திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் குடிநீர் சுகாதார விழிப்புணர்வு பேரணி

    திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பிரச்சார பேரணியை கலெக்டர் ஜெயந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாநகராட்சி மேயர் விசாலாட்சி மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக மாவட்ட அளவிலான பேரணி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இப்பேரணியானது ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி ரெயில் நிலையம் வழியாக டவுன் ஹால் மைதானத்தை வந்தடைந்தது.

    இதில் சுமார் 500 மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு குடிநீர் பராமரிப்பு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு கோ‌ஷமிட்டு சென்றனர்.

    நிகழ்ச்சியில் போது திருப்பூர் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், கிருத்திகா, மாநகராட்சி ஆணையாளர் அசோகன், தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் நிசார் அகமது, மாமன்ற உறுப்பினர்கள் பி.கே.எம்.முத்து, கீதா, வசந்தாமணி, லட்சுமி, சபரிஸ்வரன், மாநகராட்சி அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×