search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் தேங்காய் விலை சரிவு: கிலோ ரூ.11–க்கு விற்பனை
    X

    குமரி மாவட்டத்தில் தேங்காய் விலை சரிவு: கிலோ ரூ.11–க்கு விற்பனை

    குமரி மாவட்டத்தில் தேங்காய் விலை கிலோ ரூ.11–க்கு விற்க்கப்படுவதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் முக்கிய பயிர்களில் ஒன்றான தென்னை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் தேங்காய்கள் கேரளா, கர்நாடகா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் தேங்காய் எண்ணிக்கையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    தற்போது கிலோவின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பெரிய தேங்காய் ஒன்று 700 கிராம் முதல் 800 கிராம் வரையிலும், நடுத்தர தேங்காய் கிராம் 600 முதல் 700 வரையிலும், சிறிய தேங்காய்கள் 450 முதல் 600 கிராம் வரையிலும் இருக்கும்.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.28–க்கு விற்கப்பட்டது. தேங்காயின் விலை கடந்த சில நாட்களாக படிப்படியாக சரிந்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.20–க்கு விற்கப்பட்டது.

    கடந்த 2 மாதமாக தேங்காயின் விலை சரிந்து ரூ.15–க்கு விற்பனையாகி வந்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.12–க்கு விற்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தேங்காயின் விலை சரிந்து கிலோ ரூ.11–க்கு விற்பனையாகிறது.

    தொடர்ந்து தேங்காயின் விலை சரிந்து வருவதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், தேங்காய் விலை சரிந்து வருவதால் தென்னை விவசாயிகள் பெரும் நஷ்ட மடைந்துள்ளனர். ஒரு தென்னை மரத்தில் தேங்காய் வெட்டுவதற்கு ரூ.15 முதல் ரூ.20 வரை கூலி ஆகிறது.

    தேங்காய் விலை தற்போது கிலோ ரூ.11–க்கு விற்கப்படுகிறது. அப்படியானால் ஒரு தேங்காயின் விலையை பார்க்கும்போது ரூ.5–க்கு தான் விற்பனை ஆகிறது. இனிவரும் காலங்களிலும் தேங்காய் விலை சரிந்தால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே அரசு தேங்காயிற்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.

    Next Story
    ×