search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் குறைந்தபட்ச வாக்குப்பதிவு: ராஜேஷ் லக்கானி பேட்டி
    X

    சென்னையில் குறைந்தபட்ச வாக்குப்பதிவு: ராஜேஷ் லக்கானி பேட்டி

    தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைந்திருப்பதாகவும், குறிப்பாக சென்னையில் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று ஒரேகட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் தவிர மற்ற 232 தொகுதிகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

    வாக்குச்சாவடி உள்ள பகுதியில் ஒருசில அடிதடி சம்பவங்கள் நடைபெற்றபோதிலும் போலீசார் அதனை முறியடித்ததால் வாக்குப்பதிவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

    6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், “கிராமப்புறங்களில் அதிக அளவிலும், நகர்ப்புறங்களில் குறைவாகவும் வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னையில் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகியிருக்கிறது. குறிப்பாக மாலை 3 மணிக்கு பிறகே வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது.

    இந்த தேர்தலில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடக்கவில்லை. அமைதியான முறையில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை இரவு 7 மணிக்குப் பிறகு வெளியிடலாம்” என்றார்.
    Next Story
    ×