search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை-அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை 18-ந்தேதி நடத்த வேண்டும்: கலிங்கப்பட்டியில் வைகோ பேட்டி
    X

    தஞ்சை-அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை 18-ந்தேதி நடத்த வேண்டும்: கலிங்கப்பட்டியில் வைகோ பேட்டி

    தஞ்சை-அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை 18-ந்தேதி நடத்த வேண்டும் என்று கலிங்கப்பட்டியில் வைகோ பேட்டி அளித்தார்.
    சங்கரன்கோவில்:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
    அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் பண பிரளயம் நடத்தி உள்ளனர். இதை எடுத்து காட்டும் வகையில் இந்தியாவிலேயே தமிழகம் தலைக்குனியும் வகையில் அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 2 தொகுதிகளின் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் 23-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்ற முடிவை தேர்தல் ஆணையம் கைவிட்டு வருகிற 18-ந்தேதியே நடத்த வேண்டும்.

    ஏனென்றால் 19-ந்தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நடக்கும் தேர்தல் இன்னொரு இடைத்தேர்தல் போல் ஆகிவிடும். எந்த கட்சி ஆளும் கட்சியாகிறதோ அந்த கட்சிக்கு தேர்தல் முடிவுகள் சாதகமாகி விடும். சென்னை ஆவடி தொகுதியில் அனைத்து வாக்காளர் செல்போன்களுக்கும் அ.தி.மு.க.வினர் ரூ. ஆயிரம் ரீசார்ஜ் செய்துள்ளனர்.
     
    இதுகுறித்து ம.தி.மு.க. வேட்பாளர் அப்பகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்தார். அப்போது அந்த தேர்தல் அதிகாரி செல்போனுக்கும் ரூ.ஆயிரம் ரீசார்ஜ் ஆகி இருந்தது. அந்த அளவுக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளனர்.

    திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் பிடிபட்ட ரூ.570 கோடி கோடநாட்டில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பப்பட்ட பணம். மேலும் கூடுதலாக அந்த லாரியில் பணம் உள்ளதா? என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் வைகோ இன்று கலிங்கப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.
    Next Story
    ×