search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் 1133 வழக்குகளுக்கு சமரச தீர்வு
    X

    நீலகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் 1133 வழக்குகளுக்கு சமரச தீர்வு

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1133 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
    ஊட்டி :

    சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி ஒவ்வொரு தாலுகா மற்றும் மாவட்ட அளவில் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நீலகிரியில் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) சர்வமங்களா உத்தரவுபடி மாவட்ட மற்றும் தாலுகா கோர்ட்டுகளில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. ஊட்டி மாவட்ட கோர்ட்டில் மக்கள் நீதிமன்றத்தை சார்பு நீதிபதி தங்கவேல் தொடங்கி வைத்தார். இதில் குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்வகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் ஆகியோர் முன்னிலையில் வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

    கோத்தகிரியில் குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரபாதாமஸ் தலைமையிலும், குன்னூரில் உரிமையியல் நீதிபதி எழிலரசி, குற்றவியல் நீதித்துறை நடுவர் சவுந்திரராஜன் ஆகியோர் தலைமையிலும், கூடலூரில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலும், பந்தலூரில் குற்றவியல் நீதித்துறை நடுவர் பாலமுருகன் தலைமையிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    சமரச தீர்வு

    இந்த மக்கள் நீதிமன்றத்தில் தேசிய வங்கிகளில் நிலுவையில் உள்ள வாராக்கடன் சம்பந்தமான வழக்குகள் தொழிலாளர் சம்பந்தமான வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து, நஷ்டஈடு கோரும் வழக்குகள், சிவில் மற்றும் குற்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் வங்கிகளின் வராக்கடன் சம்பந்தமான வழக்குகளும் அடங்கும்.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்காக மொத்தம் 1669 வழக்குகள் எடுத்துகொள்ளப்பட்டன. இதில் 1133 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.1 கோடியே 22 ஆயிரத்து 581 இழப்பீடாக பெற்று வழங்கப்பட்டது.
    Next Story
    ×