search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    15 மாரியம்மன் கோவில்களில்  கம்பம் நிறைவு விழா
    X

    விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட காட்சி.

    15 மாரியம்மன் கோவில்களில் கம்பம் நிறைவு விழா

    • திருச்செங்கோடு பழைமையான பெரியமாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளது.
    • நகரை சுற்றி உள்ள 15 மாரியம்மன் கோவில்களிலும் கடந்த 1-ம் தேதி பூச்சாட்டுதலுடன் பண்டிகை தொடங்கி கம்பங்கள் நடப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பழைமையான பெரியமாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளது. இது தவிரமண்ணுக்குட்டை மாரியம்மன், தொண்டிக்கரடு மகர மாரியம்மன், சேலம் ரோடு சாட்டை மாரியம்மன், அண்ணா பூங்கா விளையாட்டு மாரியம்மன், நாமக்கல் ரோடு சமயபுரத்து மாரியம்மன், 5ரோடு அழகு முத்து மாரியம்மன், சிஎச்பிகாலனி மாரியம்மன் கோவில் என நகரை சுற்றி உள்ள 15 மாரியம்மன் கோவில்களிலும் கடந்த 1-ம் தேதி பூச்சாட்டுதலுடன் பண்டிகை தொடங்கி கம்பங்கள் நடப்பட்டது.

    தினமும் ஏராளமான பெண்கள் கம்பத்திற்கு நீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர். இதனை தொடர்ந்து தீர்த்தகுடம் எடுத்தல், மாவிளக்கு போடுதல், பொங்கல் வைத்தல் என பல நிகழ்வுகள் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இரவு அக்கனி சட்டி எடுத்தல், வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தது.

    பண்டிகையின் நிறைவாக இன்று அனைத்து கோவில்களிலும் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலில் பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கியதும் தொடர்ந்து அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் கம்பம் பிடுங்கப்பட்டு தெற்கு ரத வீதியில் ஒன்றாக இணைந்து ஊர்வலமாக சென்று திருச்செங்கோடு ஈரோடு ரோட்டில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் கம்பங்கள் விடப்பட்டது. கம்பங்களுக்கு முன்பாக பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து சென்றனர். வழி நெடுகிலும் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பங்களின் மீது உப்பு, மிளகு போட்டு அம்மனை வழிபட்டனர்.

    Next Story
    ×