search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேமுதிக செயற்குழு கூட்டத்தில் சந்திரகுமார் நீக்கத்துக்கு ஒப்புதல்
    X

    தேமுதிக செயற்குழு கூட்டத்தில் சந்திரகுமார் நீக்கத்துக்கு ஒப்புதல்

    விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க. செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சந்திரகுமார் நீக்கத்துக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    தே.மு.தி.க.வின் செயற் குழு கூட்டம் கோயம் பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று கூடியது.

    செயற்குழு உறுப்பி னர்கள், மாவட்ட செயலா ளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 600 பேர் பங்கேற்றனர்.

    செயற்குழுவில், கட்சி யில் தற்போது நிலவும் பிரச்சினை, தேர்தல் வியூகம் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    தே.மு.தி.க. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

    09.01.2016 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், 2016 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரத்தையும், நிறுவனத்தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்துக்கு அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்பட்டது.

    அதனடிப்படையில் தேர்தலில் ஒரு நல்ல ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் வகையில் தே.மு.தி.க. தலைமையில் ம.தி.மு.க., த.மா.கா., சி.பி.ஐ.(எம்), வி.சி.க, சி.பி.ஐ, ஆகிய கட்சிகளுடன் ஒரு மெகா கூட்டணி அமைத்த தலைவர் கேப்டனுக்கு இச்செயற்குழு நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

    கொள்கை பரப்பு செயலாளர் வி.சி. சந்திரகுமார், கழக துணைச் செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.எச்.சேகர், சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், வேலூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் ஜெ.விஸ்வநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.கார்த்தி கேயன், ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் இமயம் என்.எஸ்.சிவகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.செந்தில்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொருளாளர் செஞ்சி சிவாஆகியோர் உடனடியாக கழக பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தமைக்கு இச்செயற்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது, மேலும் விரைந்து நடவடிக்கை எடுத்த உயர்மட்ட குழுவையும், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த்தையும் பாராட்டுகிறது.

    தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுத்தும், ஆளும் ஆட்சியாளர்கள் ஆதரவாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து இப்பொதுத் தேர்தலை நடுநிலையோடு நடத்தவேண்டுமென இச்செயற்குழு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது.

    ஜெயலலிதாவினுடைய அரசியல் வாழ்க்கை உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில்தான் உள்ளது. ஜெயலலிதா செய்த தவறுக்கு உச்சநீதிமன்றம் உரிய தண்டனை வழங்கும் என்று இச்செயற்குழு நம்புகிறது.

    தமிழக மக்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பொதுத் தேர்தலில் பொதுமக்களை சந்தித்து தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறோம். முழுமையாக கழக அனைத்து நிர்வாகிகளும், தொண் டர்களும், மகளிரணியை சார்ந்த சகோதரிகளும், சார்பு அணியை சார்ந்த நிர்வாகிகளும் தேர்தல் களத்தில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து வாக்குகள் சேகரித்து கழகத் தலைவர் அறிவிக்கின்ற கழக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர் களையும் முழுமையாக வெற்றிபெறச்செய்து கழகத் தலைவர் கேப்டனை தமிழக முதலமைச்சராக்குவோம் என்று இச்செயற்குழு உறுதி ஏற்கிறது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×