search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிக உதயம்
    X

    சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிக உதயம்

    தேமுதிக அதிருப்தியாளர் சந்திரகுமார் தலைமையில் மக்கள் தே.மு.தி.க. என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டது.

    சென்னை:

    சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விஜயகாந்த்திடம் வற்புறுத்தி வந்தனர். ஆனால் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்த நிலையில் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் தலைமையில் 3 எம்.எல்.ஏ.க்கள், 5 மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை விஜயகாந்த் கட்சியை விட்டு நீக்கினார்.

    இந்த நிலையில் தே.மு. தி.க.வில் உள்ள அதிருப்தியாளர்களை ஒன்று திரட்டி முக்கிய முடிவு எடுக்கப் போவதாக சந்திரகுமார் கூறியிருந்தார்.

    அதன்படி தியாகராய நகரில் உள்ள மண்டபத்தில் தே.மு.தி.க. அதிருப்தி யாளர்கள் கூட்டம் சந்திர குமார் தலைமையில் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பார்த்திபன், சி.எச்.சேகர், 4 மாவட்ட செயலாளர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். அனைவரும் தனி அணி தொடங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

    அதன்பிறகு தே.மு.தி.க. உள்கட்சி விவகாரத்தில் வைகோ தலையிடக்கூடாது. அ..தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர மறைமுகமாக உதவி வரும் வைகோவின் செயலை தடுத்து நிறுத்துவோம், மக்கள் தே.மு.தி.க. என்று புதிய அமைப்பு தொடங்குவது என்பன உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் சந்திரகுமார் பேசியதாவது:–

    எங்களுக்கு விஜயகாந்த் மீது எந்த வருத்தமும், கோபமும் கிடையாது. பிரேமலதா தான் தவறான முடிவு எடுத்து இருக்கிறார். அவரைத் தான் நாங்கள் குறை சொல்கிறோம்.

    சட்டசபை தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய அமைப்பை தொடங்க முடிவு செய்துள்ளோம்.

    இந்த புதிய அமைப்புக்கு மக்கள் தே.மு.தி.க. என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தே.மு.தி.க. அதிருப்தி நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவு. இது அரசியல் சார்பற்ற அமைப்பாக செயல்படும்.

    தே.மு.தி.க.வை உடைக்க வேண்டும் என்பதற்காக இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மக்களையும் ஒருங்கிணைந்து ஆட்சி மாற்றம் கொண்டு வருதற்காக புதிய இயக்கம் தொடங்கி இருக்கிறோம்.

    இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.

    Next Story
    ×