search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளை முடிகிறது
    X

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளை முடிகிறது

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மாலையுடன் முடிகிறது.
    ராயபுரம்:

    ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., ஓ.பி.எஸ்.அணி, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை, தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி போன்றவை போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் 8 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லோகநாதன் ஆகியோர் ஏற்கனவே மனுதாக்கல் செய்துள்ளனர். தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயரிடம் அவர்கள் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று மாலை வரை சுயேட்சைகள் உள்பட 24 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக் கோட்டுதயம் ஆகியோர் இன்று மனுதாக்கல் செய்கிறார்கள்.



    அ.தி.மு.க. வேட்பாளர் தினகரன், ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனன், தீபா, பா.ஜனதா வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.

    நாளை (23-ந்தேதி) மாலையுடன் மனுத்தாக்கல் முடிகிறது. நாளை மறுநாள் (24-ந்தேதி) வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற இறுதி நாள் வருகிற 27-ந்தேதி ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அதன் பிறகு வேட்பாளர்கள் பிரசாரம் சூடுபிடிக்கும்.

    ஏப்ரல் 12-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஏப்ரல் 15-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
    Next Story
    ×