search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. விரைவில் ஆட்சிக்கு வரும்: கனிமொழி எம்.பி. பேச்சு
    X

    தி.மு.க. விரைவில் ஆட்சிக்கு வரும்: கனிமொழி எம்.பி. பேச்சு

    மக்கள் விருப்பப்படி தி.மு.க. ஆட்சி விரைவில் மலரும் என்று தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. கூறினார்.
    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 18-வது நிகழ்ச்சியாக எழும்பூரில் கவிஞர் நந்தலாலாவை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடந்தது.

    இதனை தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்து பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலினிடம் எனக்குப்பிடித்தது அவரது உழைப்பு.

    சட்டமன்ற விவாதம், கட்சிப் பணிகள், சுற்றுப் பயணம் என்று ஓய்வில்லாத மக்கள் பணிகளால் தன்னை செதுக்கியிருக்கிறார். 1967-ல் அரசியலுக்கு வந்த அவர் கட்சிக் கொடியேற்றாத கிராமமே இல்லை. காலடிப்படாத இடமேயில்லை. அன்றிலிருந்து இன்று வரை உழைத்துக் கொண்டேயிருக்கிறார். பதவியை ஒரு பொறுப்பாகவே அவர் கருதுகிறார்.

    மு.க.ஸ்டாலினை பார்த்து சிரித்ததற்காக ஒருவருடைய முதல்வர் பதவியே பறிபோய் விட்டது. மு.க.ஸ்டாலின் எப்போதும் மக்களையே நம்புகிறார். சட்டமன்றத்தில் இருந்து அவரை வெளியேற்றியதும் காந்தி சிலை முன்னால் அமர்ந்து மக்களிடம் தான் நியாயம் கேட்டார். அரசியல் கட்சி தலைவர்களிடையே நல்லுறவு இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். நல்ல அரசியல் தலைவராகவும் உருவெடுத்திருக்கிறார். பொதுமக்கள் திமு.க. ஆட்சி விரைவில் உருவாக வழி செய்யுங்கள். அப்போது தான் நாட்டிற்கு விடியல் பிறக்குமென்று பேசுகிறார்கள். அவர்கள் விருப்பங்கள் நிறைவேறும். தி.மு.க. ஆட்சி விரைவில் மலரும்.

    இவ்வாறு கனிமொழி பேசினார்.

    கே.எஸ்.ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. பகுதிச் செயலாளர் விஜயகுமார், வட்ட செயலாளர் மொய்தீன், தமிழ் நெஞ்சன், அருள் பிரகாசம், முத்துலட்சுமி,, அன்னலட்சுமி, எம்.கே.ரவிவர்மன் டி.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
    Next Story
    ×