search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்யாண பந்தலில் அமர போகும் மாப்பிள்ளை பன்னீர்செல்வம் தான்: துரைமுருகன்
    X

    கல்யாண பந்தலில் அமர போகும் மாப்பிள்ளை பன்னீர்செல்வம் தான்: துரைமுருகன்

    தமிழகத்தில் தற்போது பரபரப்பான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க. துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தனது பாணியில் கலகலப்பாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    தமிழகத்தில் தற்போது பரபரப்பான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க. துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தனது பாணியில் கலகலப்பாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசியல் சூழல் பற்றி. பாட்டாவே பாடிடுறேனே... "நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனாலே முழிக்குது அம்மா பொண்ணு... நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு..."

    கல்யாணப் பந்தல் ரெடி, மாப்ள யாருன்னு தமிழ்நாடே கவனிக்குது. மாப்ளையே மாப்ளையாக இருக்கப் போறாரா? இல்ல பொண்ணு மாப்ளையாகப் போகுதாங்கிறது தான் பிரச்சினை.

    எங்களுக்கு இன்விடே‌ஷன் வெச்சா, வழக்கம்போலப் போய் கல்யாணத்தைப் பாப்போம். அவ்வளவு தான். மாப்ள ஓ.பி.எஸ். தான்கிறது என் கணிப்பு.

    நான் 60 வரு‌ஷமா அரசியல்ல இருக்கிறேன். நேரு இறந்ததும், காங்கிரஸ் இண்டிகேட்டு, சிண்டிகேட்டுன்னு உடைஞ்சுது. கம்யூனிஸ்ட்டும் ரெண்டாச்சு.

    எம்.ஜி.ஆர். மறைஞ்சதும் ஜானகி அணி, ஜெ அணி, எம்.ஜி.ஆர். கழகம் அது இதுன்னு ஒரு நூறு கட்சி உருவாச்சு, அப்படித்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் நடக்கும்னு கணிச்சேன். நடக்குது.

    அதே சமயம், எங்க கட்சியைப் பாருங்க... கல்லுல இருந்து கூட நார் உரிக்கலாம். கழகத்துல இருந்து யாரையும் கிளப்பிக்கிட்டுப் போக முடியாது. நம்மாளுங்க மந்தையும் கெடையாது, லாரியிலேயும் ஏத்த முடியாது.

    சமூக வலைதங்களில் என்னையையே கலாய்ச்சாலும், நல்லாயிருந்தா சிரிப்பேன். நம்மால சிரிக்காம எல்லாம் இருக்க முடியாது. சிரிக்கவே கூடாதுன்னு சின்ன மம்மி சொல்றாங்க. அடுத்தவாட்டி ஜைனத் துறவிங்க மாதிரி, வாயில துணியைக் கட்டிக் கிட்டுத்தான் சட்டசபைக்குப் போகணும் போல.

    சட்டசபையில் பன்னீரைப் பார்த்து நான் என்ன சொன்னேன்? உங்களுக்கு எங்களால பிரச்சினை இல்ல, பின்னாடி ஜாக்கிரதைன்னு சொன்னேன். திரும்பி பார்த்து வி‌ஷயத்தை புரிஞ்சிக்கிட்டவரு நேரா சமாதிக்கே போயிட்டாரு. எனக்குத் தெரிஞ்சி நாட்டையே ஆண்ட மன்னன், சுடுகாட்டுக்குப் போய் உட்கார்ந்தது அரிச்சந்திரனுக்கு அப்புறம், நம்ம பன்னீர்செல்வம் தான். அவரு அழுத்தமான ஆளு. நல்லா யோசிச்சிட்டுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கார்.

    ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு கவர்னரும் எதுக்கு? ன்னு கேட்டவங்க நாங்க. நம்ம கவர்னருக்கு வேகம் பத்தாது. நான் கவர்னரா இருந்திருந்தா, சட்டசபையையே கலைச்சிட்டு, புதுசா தேர்தல் வெச்சிருப்பேன். அப்புறம் என்ன... கழக ஆட்சிதான்.

    தற்போது தமிழகத்தில் நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் அவர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×