search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. வேட்பாளர் பட்டியல் எப்போது?: மு.க.ஸ்டாலின் பேட்டி
    X

    தி.மு.க. வேட்பாளர் பட்டியல் எப்போது?: மு.க.ஸ்டாலின் பேட்டி

    தி.மு.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்பதற்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள்

    கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:-உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்:- தி.மு.க.வை பொறுத்தவரைக்கும், ஏற்கனவே கூட்டணியில் இருக்க கூடிய கட்சிகளோடு, அந்தந்த மாவட்ட

    நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பணிகள் தொடர்ந்து நடந்துக்

    கொண்டிருக்கிறது. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பு நேற்று(நேற்று முன்தினம்) மாலை ஆறேகால் மணி அளவிற்கு

    வெளியிடப்பட்டிருக்கிறது. மறுநாள்(நேற்று) காலை 10 மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என அறிவிப்பு

    வெளியிடப்பட்டிருக்கிறது. ஆக, இதிலிருந்தே மிகத்தெளிவாக தெரிகிறது.

    ஆளுங்கட்சியினுடைய தலையீடு, ஆளுங்கட்சியினுடைய அராஜகம், ஆளுங்கட்சியினுடைய அட்டூழியமெல்லாம் இந்த

    தேர்தலில் நடப்பதற்கு, இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிற தேதியும், வேட்பு மனு தாக்கல் செய்ய வெளியிடப்பட்டிருக்கும்

    தேதியும் ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த தேர்தலை ஆளுங்கட்சிக்கு சாதகமாக எப்படியாவது நடத்திட வேண்டுமென்ற

    திட்டத்திலே தேர்தல் ஆணையம் ஈடுப்பட்டிருக்கிறது. எது எப்படியிருந்தாலும், அதையெல்லாம் சந்திக்க தி.மு.க., தயாராக

    இருக்கிறது.

    கேள்வி:- தி.மு.க. தரப்பில் தேர்தலுக்கு தடை பெற முயற்சிகள் ஏதாவது செய்கிறீர்களா?

    பதில்:- நாங்கள் தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. தேர்தலை ஒழுங்காக நடத்துவதற்கான முயற்சியில் இந்த அரசு ஈடுபட வேண்டும் என்றுதான் நாங்கள் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். உச்ச நீதிமன்றத்திலே அதற்காக மனு செய்திருக்கிறோம்.

    கேள்வி:- ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கில் அவரது தந்தையார் சொல்லுகின்ற தனியார் டாக்டரை நியமிக்க வேண்டும்

    என்ற கோரிக்கை குறித்து?

    பதில்:- உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலே விசாரிக்க வேண்டும் என்று தொடர்ந்து தலைவர் கருணாநிதி இது குறித்து

    சொல்லியிருக்கிறார்.

    கேள்வி:- திமு.க., சார்பில் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?

    பதில்:- பட்டியல் தயாரான பிறகு வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    Next Story
    ×