search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணத்திற்கு சிறிது நேரத்திற்கு முன் வாக்குச்சாவடிக்கு சென்ற கேரள மணப்பெண்
    X

    திருமணத்திற்கு சிறிது நேரத்திற்கு முன் வாக்குச்சாவடிக்கு சென்ற கேரள மணப்பெண்

    தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக கேரளாவை சேர்ந்த மணப்பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு சிறிது நேரத்திற்கு முன் வாக்குச்சாவடிக்கு வேகமாக சென்று வாக்கு அளித்துள்ளார்.
    கொச்சி:

    தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இன்று பலத்த பாதுகாப்புடன் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் வாக்கு அளிக்காதவர்களை கேட்டால் ஏன் வாக்கு அளிக்கவில்லை என்று ஆயிரம் காரணம் சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே வாக்கு அளிக்கவேண்டும் என்று விரும்புவர்களுக்கு எதுவுமே தடையில்லை. இதற்கு சிறந்த உதாரணம் கேரளாவை சேர்ந்த அனு என்ற 25 வயது பெண்.

    அனுவுக்கு இன்று காலை திருமணம். திருமணத்திற்கு தயாராகும் பொருட்டு காலையிலேயே அழகு நிலையத்திற்கு சென்று அலங்காரம் செய்துக்கொண்டுள்ளார். ஆனால் அங்கு கொஞ்சம் கால தாமதம் ஆகிவிட்டது. ஆனாலும் இதுவரை வாக்கு அளித்திராத அனு, இன்று நடைப்பெறும் கேரள சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு அளிக்க ஆர்வமாக இருந்தார்.

    திருமணத்திற்கு சில மணி நேரங்களே இருந்த போதும், பட்டுப்புடைவை, நகைகளை அணிந்துக்கொண்டு மணக்கோலத்தில் காரில் வாக்குச்சாவடிக்கு வந்த அனு தனது வாக்கை பதிவு செய்தார். ஜனநாயக கடமையை முடித்துவிட்டு அவசர அவசரமாக திருமண மண்டபத்தை நோக்கி ஓடிய அனுவை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.
    Next Story
    ×