search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த் தலைமையை ஜி.கே.வாசன் ஏற்பதா? முன்னாள் எம்.பி. விசுவநாதன் போர்க்கொடி
    X

    விஜயகாந்த் தலைமையை ஜி.கே.வாசன் ஏற்பதா? முன்னாள் எம்.பி. விசுவநாதன் போர்க்கொடி

    காமராஜர் ஆட்சி என்று சொல்லி விட்டு விஜயகாந்த் தலைமையை ஜி.கே.வாசன் ஏற்றது தவறானது என்று முன்னாள் எம்.பி. விசுவநாதன் கூறியுள்ளார்.

    சென்னை:

    காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறிவிட்டு விஜயகாந்தை முதல்–அமைச்சர் ஆக்கும் தலைமையை எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை என்று ஜி.கே.வாசன் அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    ஜி.கே.வாசனின் ஆதரவாளரான முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் இதுகுறித்து மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:–

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று எடுத்த தேர்தல் கூட்டணி முடிவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

    பொதுவாக காங்கிரஸ் கட்சியாக இருக்கட்டும், த.மா.கா.வாக இருக்கட்டும் குமரிஅனந்தனின் கா.க. தே.க., மூப்பனாரின் த.மா.கா. இவை எல்லாவற்றையும் நாங்கள் காங்கிரஸ் கட்சியாகத்தான் பார்க்கிறோம்.

    எங்களை பொறுத்தவரை எங்கள் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம்தான். காங்கிரஸ் என்று சொன்னாலே பெருந்தலைவர் காமராஜர்தான் நினைக்கு வருவார்.

    காமராஜர் ஆட்சி அமைப்போம். அவரது லட்சியங்களை நிறைவேற்றுவோம். அவரது கொள்கை கோட்பாடுகளை பின்பற்றுவோம் என்று த.மா.கா. தொடங்கும்போது ஜி.கே.வாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பேசினார்.

    ஆனால் இப்போது அந்த கொள்கை கோட்பாட்டிற்கு நேர் எதிராக மக்கள் நலக்கூட்டணி தே.மு.தி.க.வை சேர்ந்த தலைமையிலான விஜயகாந்தை முதல்– அமைச்சர் வேட்பாளராக சொல்லும் இந்த கூட்டணியில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது.

    இவ்வளவு நாட்களாக ஒரு தலைமையின் இருட்டறையில் இருந்தோம். ஜி.கே.வாசன் எடுத்த முடிவு தவறானது. நாங்கள் காங்கிரஸ்காரர்கள். காமராஜர் வழியில் வந்த வர்கள்.

    தலைமை எடுத்த தவறான முடிவால் பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம் உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் த.மா.கா.வில் இருந்து வெளியேறுகிறோம். ஒத்த கருத்துடைய நாங்கள் ஓரிரு நாட்களில் நல்ல முடிவை எடுத்து அறிவிப்போம்.

    காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேருவது பற்றியோ, தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுப்பது பற்றியோ இன்னும் முடிவு செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×