என் மலர்
செய்திகள்
- முனைவர் பட்டத்துக்காக போஸ் போலாரன்ஸ் இன் சூப்பர்புளூயிட்ஸ் மற்றும் சூப்பர் சாலிட்ஸ் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை லாரன்ட் சிமன்ஸ் சமர்ப்பித்தார்.
- மிகக் குளிர்ந்த சூழலில், எலக்ட்ரான் மற்றும் அணுக்களின் நடத்தை எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஆழமான ஆய்வு அது.
பிரஸ்சல்ஸ்:
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சிறுவன் லாரன்ட் சிமன்ஸ் (வயது 15). குட்டி ஐன்ஸ்டீன் என்று அழைக்கப்படும் லாரன்ட் தனது 11 வயதிலேயே இளங்கலை இயற்பியல் பட்டத்தை முடித்தார். அடுத்த ஆண்டே அதில் முதுகலை பட்டத்தையும் பயின்றார். இந்தநிலையில் முனைவர் பட்டத்துக்காக போஸ் போலாரன்ஸ் இன் சூப்பர்புளூயிட்ஸ் மற்றும் சூப்பர் சாலிட்ஸ் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை அவர் சமர்ப்பித்தார். அதாவது, மிகக் குளிர்ந்த சூழலில், எலக்ட்ரான் மற்றும் அணுக்களின் நடத்தை எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஆழமான ஆய்வு அது. இதன்மூலம் உலகிலேயே மிக இளம் வயதில் முனைவர் பட்டம் பெற்ற சாதனைக்கு சொந்தக்காரராக மாறி உள்ளார்.
இதற்கிடையே அமெரிக்கா, சீனாவில் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு சலுகை வழங்கி அவருக்கு வேலை அளிக்க முன் வந்தன. ஆனால் அதனை மறுத்த அவர் சூப்பர் மனிதர்களை உருவாக்குவது, மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதே தனது கனவு என தெரிவித்துள்ளார்.
- பான்மசாலாவுக்கு தொடர்ந்து 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.
- பான் மசாலா உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறனுக்கு சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் விதிக்கப்படும்.
புதுடெல்லி:
புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி (செஸ்) காலாவதியாவதை தொடர்ந்து, இந்த வரிக்கு பதிலாக கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் 2 மசோதாக்கள் கடந்த 1-ந்தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் பான் மசாலா போன்ற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சுகாதாரம் மற்றும் தேச பாதுகாப்பு செஸ் மசோதா நேற்று மக்களவையில் விவாதத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
விவாதத்தை தொடங்கி வைத்து நிதி மந்திரி நிர்மலா சீதராமன் பேசும்போது கூறியதாவது:-
பான் மசாலாவுக்கு கலால் வரி விதிக்க முடியாத நிலையில், பான் மசாலா உற்பத்திக்கு வரி விதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நுகர்வுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து, அரசு ஒரு தனி செஸ் மசோதாவைக் கொண்டுவருகிறது.
பாவப்பொருட்கள் என்ற முறையில் பான் மசாலா அலகுகளின் உற்பத்தி திறனின் மீது வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பதன் மூலம் இந்த பொருட்களின் நுகர்வு குறையும் என எதிர்பார்க்கிறோம்.
அதேநேரம் அத்தியாவசிய பொருட்களுக்கு இந்த சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் வரி விதிக்கப்படாது.
பான் மசாலா மீது விதிக்கப்படும் இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி, சுகாதார விழிப்புணர்வு அல்லது பிற சுகாதாரம் சார்ந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மாநிலங்களுக்கு பகிரப்படும்.
பான்மசாலாவுக்கு தொடர்ந்து 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். அதற்கு மேல் பான் மசாலா உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறனுக்கு சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் விதிக்கப்படும்.
இந்த செஸ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 2 களங்களான சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அர்ப்பணிப்பு மற்றும் கணிக்கக்கூடிய வளத்தை உறுதி செய்யும் என்று கூறினார்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை...
- இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம்,
"மக்களால் நான்; மக்களுக்காவே நான்" என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த நம் ஒப்பற்ற தலைவி,
நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை,
இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்,
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, அவர்தம் 9-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை, அ.தி.மு.க. தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நிறுவி, மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி! என்று கூறியுள்ளார்.
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 2 குழுவாக பிரித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
- தி.மு.க.வின் மக்களவைக்குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவாகரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி தி.மு.க. சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் மக்களவைக்குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
- அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்த நிலையில், த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.
- சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- பிற இடங்களில் இருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவையும் ரத்து.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது.
மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் 3-வது நாளாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.
இந்த நிலையில், 4-வது நாளாக இன்று சென்னையில் 65 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிற இடங்களில் இருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவை என நேற்று இரவு 8 மணி முதல் தற்போது வரை 65 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்களுக்கும் கொடுத்துதவுவீர்கள். வெளியுலகத் தொடர்பும் விரிவடையும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
ரிஷபம்
கல்யாண முயற்சி கை கூடும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க இயலும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மிதுனம்
யோகமான நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தூர தேசத்திலிருந்து வரும் தகவல் ஆதாயம் தரும்.
கடகம்
அலைபேசி மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செல்லும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
சிம்மம்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ்மிக்கவர்கள் போன் மூலம் தொடர்பு கொள்வர்.
கன்னி
மகிழ்ச்சி கூடும் நாள். அத்தியாவசியப் பொருட்கள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.
துலாம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வேலைப்பளு கூடும். குடும்பத்தினர்களின் ஆதரவு குறையும். உடல் நலத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்
புதுமுயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாங்கல் கொடுக்கல்கள் ஆதாயம் தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
தனுசு
மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சி லாபம் தரும். ஆரோக்கியக் குறைபாடுகள் படிப்படியாக மாறும். உத்தியோக உயர்விற்கான அறிகுறிகள் தென்படும்.
மகரம்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வீடு, இடம், வாங்க எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.
கும்பம்
பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.
மீனம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாகத் தீட்டிய திட்டம் நிறைவேறும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திருமண முயற்சி கைகூடும்.
- எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.
- சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரெயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16866), கொல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22662), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16752) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16865) நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 15-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.
* எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22661), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16751), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.42 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), மேற்கண்ட தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 'பிக் டிக்கெட்' அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கேரளாவைச் சேர்ந்த பி.வி. ராஜன் 25 மில்லியன் திர்ஹாம்களை வென்றார்.
- தனது 15 சக ஊழியர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஜன் கூறினார்.
சமீப காலமாக வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் லாட்டரியில் வெற்றி பெறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் சவுதி அரேபியாவில் வசிக்கும் மற்றொரு இந்தியருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற 'பிக் டிக்கெட்' அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கேரளாவைச் சேர்ந்த பி.வி. ராஜன் 25 மில்லியன் திர்ஹாம்களை (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 61.37 கோடி) வென்றுள்ளார்.
அவர் 15 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார், இறுதியாக இந்த மிகப்பெரிய ஜாக்பாட்டைப் பெற்றுள்ளார்.
இந்தப் பரிசுத் தொகையை தனியாக வைத்திருக்கப் போவதில்லை என்றும், தனது 15 சக ஊழியர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதாகவும் ராஜன் கூறினார்.
அதே டிராவில், மேலும் 10 பேர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 திர்ஹாம்கள் (ரூ. 2.45 லட்சம்) கிடைத்தன. அவர்களில் மூன்று பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்தச் குலுக்கலில் முந்தைய தொடரின் வெற்றியாளர், சரவணன் என்ற மற்றொரு இந்தியர் ஆவார்.






