என் மலர்
செய்திகள்
- மகாராஷ்டிரா மாநிலத்தில் 38 புலிகளும், கேரளாவில் 13 புலிகளும், அசாமில் 12 புலிகளும் இறந்துள்ளன.
- கடைசியாக, கடந்த 28-ந்தேதி, மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு ஆண் புலி உயிரிழந்தது.
உலகிலேயே அதிகமான புலிகள் கொண்ட நாடு, இந்தியா. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 2025-ம் ஆண்டில் 166 புலிகள் இறந்துள்ளன. இவற்றில் 31 புலிக்குட்டிகளும் அடங்கும்.
அதற்கு முந்தைய 2024-ம் ஆண்டில் 126 புலிகள்தான் இறந்தன. அதனுடன் ஒப்பிடுகையில், 2025-ம் ஆண்டில் 40 புலிகள் அதிகமாக உயிரிழந்துள்ளன.
இவற்றில் புலிகள் மாநிலம் என்று அழைக்கப்படும் மத்தியபிரதேசத்தில் அதிகபட்சமாக 55 புலிகள் இறந்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 38 புலிகளும், கேரளாவில் 13 புலிகளும், அசாமில் 12 புலிகளும் இறந்துள்ளன.
கடந்த ஆண்டு, முதலில் புலி பலியான சம்பவம், ஜனவரி 2-ந்தேதி, மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி வனக்கோட்டத்தில் நடந்துள்ளது. அது ஒரு ஆண் புலி ஆகும். அதற்கு 3 நாட்கள் கழித்து, மத்தியபிரதேச மாநிலம் பெஞ்ச் புலிகள் சரணாலயத்தில் ஒரு பெண் புலி இறந்தது. கடைசியாக, கடந்த 28-ந்தேதி, மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு ஆண் புலி உயிரிழந்தது.
இடப்பற்றாக்குறை காரணமாக ஏற்படும் மோதல்தான் புலிகள் இறப்புக்கு முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். வேட்டையாடுதல், மின்சார தாக்குதல், இயற்கை மரணம் ஆகிய காரணங்களும் இருப்பதாக கூறுகிறார்கள்.
- ரசிகர்களின் வேண்டுகோளை படக்குழுவினர் புறந்தள்ளினார்கள்.
- எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்ற நிலையில் ‘பராசக்தி' படக்குழு உள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்த 'பராசக்தி' படம் விரைவில் திரைக்கு வருகிறது. ஏற்கனவே தணிக்கை வாரியத்தின் சிக்கலை கடந்து வந்திருக்கும் 'பராசக்தி' படத்துக்கு இந்த முறை சிவாஜி ரசிகர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நடிகர் திலகம் சிவாஜி நடித்த 'பராசக்தி' படத்தின் பெயரை மீண்டும் அதேபெயரில் எடுக்கவேண்டாம் என்று ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளை படக்குழுவினர் புறந்தள்ளினார்கள்.
இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தீ பரவட்டும் என்று சிவாஜியிடம் இருந்து சிவகார்த்திகேயன் தீப்பந்தம் பெறுவது போல ஒரு போஸ்டர் தயாரித்து, அதை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து 'பராசக்தி' படத்துக்கு விளம்பரம் செய்துள்ளார்கள். சிவாஜிகணேசன் வாரிசுகளாக பிரபு, அவரைத்தொடர்ந்து விக்ரம் பிரபு இருக்கையில், அவரது வாரிசு என்ற ரீதியில் இப்படி விளம்பரம் தேடிக்கொள்ள யார் அனுமதி கொடுத்தது? எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்ற நிலையில் 'பராசக்தி' படக்குழு உள்ளது. 'பராசக்தி' பெயரை அபகரித்ததோடு, சிவாஜி புகைப்படத்தை வணிக நோக்கம் மற்றும் சுயலாபத்துக்காக பயன்படுத்துவதை அவரது ஆன்மா மன்னிக்காது'', என்று குறிப்பிட்டுள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வருகிற 5-ந்தேதி ஸ்ரீரங்கத்தில் ‘மோடி பொங்கல்' நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
- ஜனவரி 4-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுக்கோட்டைக்கு வர உள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தித்திக்கும் பொங்கலுடன் தொடங்க இருக்கிறது. தொடர்ந்து 2 மாதங்களுக்கு தீவிர பிரசாரத்தை முன்னெடுக்கவும் பா.ஜ.க. வியூகங்கள் அமைத்து வருகிறது.
அந்த வகையில் வருகிற 5-ந்தேதி ஸ்ரீரங்கத்தில் 'மோடி பொங்கல்' நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜனவரி 4-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுக்கோட்டைக்கு வர உள்ளார். அன்றைய தினம் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற யாத்திரையின் நிறைவு விழா நடக்கிறது. இந்த விழாவில் அவர் பங்கேற்று பேசுகிறார்.
இதில், சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்க இருக்கின்றனர். இதையடுத்து, திருச்சியில் அமித்ஷா தங்குகிறார். பின்னர், மறுநாள் (5-ந்தேதி) திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார். இதையடுத்து காலை 11 மணி அளவில் மன்னார்புரம் ராணுவத்திடலில் ஏறக்குறைய 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் "மோடி பொங்கல்" விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.
அமித்ஷா கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பியூஸ் கோயல், பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள், மேலிட பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில் 4-ந்தேதி தமிழகம் வரும் அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 5-ந்தேதி திருச்சியில் வைத்து இருவரின் சந்திப்பு நடக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமித்ஷாவுடனான சந்திப்பில் தொகுதி பங்கீடு, கூட்டணி விரிவாக்கம், தேர்தல் வியூகம், ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் இணைப்பு, குறித்து ஆலோசிக்க வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 5-ந்தேதி திருச்சியில் நடக்கும் பொங்கல் விழாவிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
- இலவச தரிசனத்தில் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
- சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதையொட்டி 30-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முதல் 3 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய மொத்தம் 25 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அதில், குலுக்கல் முறையில் 1 லட்சத்து 76 ஆயிரம் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வான பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய எஸ்.எம்.எஸ். மற்றும் இ.மெயில் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டன. அதில், 30-ந்தேதி 57 ஆயிரம் பக்தர்களும், 31-ந்தேதி 64 ஆயிரம் பக்தர்களும், ஆங்கிலப் புத்தாண்டான நேற்று 55 ஆயிரம் பக்தர்களும் டோக்கன்கள் மூலம் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கான சொர்க்க வாசல் தரிசனம் முழுமையாக நிறைவடைந்தன.
இந்தநிலையில் இன்று முதல் 8-ந்தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்துக்கான டோக்கன்கள் தேவையில்லை, டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் வருகிற 8-ந்தேதி வரை சாதாரணமாக இலவச தரிசனத்தில் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
அதற்காக கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம், ஆர்ஜித சேவைகள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கான தரிசனம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனங்கள் ஆகியவை இன்று முதல் 8-ந்தேதி வரை நடக்காது, அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன்கள் (டைம் ஸ்லாட் டோக்கன்கள்) வழங்கும் கவுண்ட்டர்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் கவுண்ட்டர்கள், வி.ஐ.பி. பிரேக் தரிசன டோக்கன் கவுண்ட்டர்கள் இந்த நாட்களில் மூடப்பட்டு இருக்கும். இதற்காக எந்தவிதமான பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்பட மாட்டாது.
சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும். ஆண்கள் வேட்டி அல்லது பைஜாமா அணிய வேண்டும். பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிய வேண்டும். சாமி தரிசனத்துக்கு வரும் அனைத்துப் பக்தர்களும் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், தேவஸ்தான ஊழியர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
அதேநேரத்தில் திருமலை, திருப்பதி, ரேணிகுண்டா மற்றும் சந்திரகிரி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் உள்ளூர் பக்தர்களுக்காக 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இ.குலுக்கல் முறையின் மூலம் தினமும் 5 ஆயிரம் தரிசன டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 4 ஆயிரத்து 500 டோக்கன்கள் திருப்பதி, ரேணிகுண்டா மற்றும் சந்திரகிரி ஆகிய உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 500 டோக்கன்கள் திருமலை பாலாஜிநகரில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் இன்று முதல் 8-ந்தேதி வரை இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி என்பதால் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
- ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.
- ‘வைபை நெட்வொர்க்’ மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும், பெறவும் இது உதவுகிறது.
இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நாடு தழுவிய அளவில் 'வைபை' அழைப்பு எனப்படும் 'வாய்ஸ் ஓவர் வைபை' சேவையை இந்த புத்தாண்டில், அறிமுகம் செய்துள்ளது.
இந்த மேம்பட்ட சேவை இப்போது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். இது சவாலான சூழல்களிலும் தடையற்ற, உயர்தர இணைப்பை உறுதி செய்யும்.
'வைபை நெட்வொர்க்' மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும், பெறவும் இது உதவுகிறது. வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் போன்ற பலவீனமான 'மொபைல் சிக்னல்' உள்ள இடங்களில் தெளிவான மற்றும் நம்பகமான இணைப்பை இது உறுதி செய்கிறது. இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை.
வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன்களில் 'வைபை காலிங்' என்பதை மட்டும் 'செட்டிங்ஸ்' அமைப்பில் இயக்க வேண்டும்.
இந்த தகவல்களை தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு செல்லலாம் அல்லது 18001503 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
- இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
லட்சத்தீவு- குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 46 குழந்தைகள் பிறந்தன.
- தென்காசியில் 20 குழந்தைகள் பிறந்துள்ளன.
சென்னை:
நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆண்டின் முதல் நாளில் பிறப்பவர்கள் ஆங்கில புத்தாண்டோடு தங்களது பிறந்தநாளையும் சேர்த்து கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் பிறந்துள்ளன.
சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 46 குழந்தைகள் பிறந்தன. அதன்படி, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 15 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் என மொத்தம் 21 குழந்தைகள் பிறந்தன. இதில், 2 தாய்மார்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
இந்த குழந்தைகளை ஆஸ்பத்திரியின் உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் சித்ரா மற்றும் டாக்டர் சந்திரகலா உள்ளிட்ட மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் கைகளை தட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
மேலும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 7 குழந்தைகள் பிறந்தன. இதில் 4 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தை ஆகும். திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி ஆஸ்பத்திரியில் 6 குழந்தைகள் பிறந்தன. ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 12 குழந்தைகள் பிறந்தன. இதில் 5 ஆண் குழந்தைகள் மற்றும் 7 பெண் குழந்தைகள் ஆகும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு தினமான நேற்று அரசு ஆஸ்பத்திரிகளில் 4 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் என 8 குழந்தைகள் பிறந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் புத்தாண்டு தினமான நேற்று 9 ஆண் குழந்தைகள், 11 பெண் குழந்தைகள் என 20 குழந்தைகள் பிறந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 11 (ஆண்-5, பெண்-6), குழந்தைகளும், நீலகிரியில் 6 (ஆண்-3, பெண்-3), திருப்பூரில் 13 (ஆண் -5, பெண்-8), வேலூரில் 8 (ஆண்-6, பெண்-2), குழந்தைகளும், திருவண்ணாமலையில் 22 (ஆண்-12, பெண்-10) குழந்தைகளும், திருப்பத்தூரில் 12 (ஆண் - 4, பெண்-8) குழந்தைகளும், ராணிப்பேட்டையில் 6 (ஆண் 2, பெண் 4) குழந்தைகளும் பிறந்துள்ளன.
குமரி மாவட்டத்தில் 6 (ஆண் 1, பெண் 5) குழந்தைகளும், ஈரோட்டில் 12 குழந்தைகளும், திண்டுக்கல்லில் 20 (ஆண்-6, பெண்-14) குழந்தைகளும், தேனியில் 13 (ஆண் 7, பெண் 6) குழந்தைகளும், கடலூரில் 13 (ஆண் 6, பெண் 7) குழந்தைகளும், கள்ளக்குறிச்சியில் 47 (ஆண்-24, பெண்-23) குழந்தைகளும், விழுப்புரத்தில் 27 (ஆண் 15, பெண்-12) குழந்தைகளும், மதுரையில் 22 குழந்தைகளும், சிவகங்கையில் 7 குழந்தைகளும், ராமநாதபுரத்தில் 6 குழந்தைகளும், விருதுநகரில் 6 குழந்தைகள் பிறந்து உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் 24 குழந்தைகளும் (ஆண் - 9, பெண் -15), தூத்துக்குடியில் 12 (ஆண்-4, பெண்-8) குழந்தைகளும், தென்காசியில் 20 குழந்தைகளும் பிறந்துள்ளன.
திருச்சியில் 13 (ஆண்-8, பெண்-4), பெரம்பலூரில் 10 (ஆண்-7, பெண்-3), அரியலூரில் 3 (ஆண்-2, பெண்-1), புதுக்கோடடையில் 14 (ஆண்-9, பெண்-5), கரூரில் 4 குழந்தைகள் (ஆண்-4) பிறந்துள்ளன. கிருஷ்ணகிரியில் 15 (ஆண் 7, பெண்8), தர்மபுரியில் 13 (ஆண் 7, பெண் 6), நாமக்கல்லில் 10 (5 ஆண், 5 பெண்), சேலத்தில் 29 குழந்தைகள் பிறந்துள்ளன. தஞ்சையில் 22 குழந்தைகளும், திருவாரூரில் 3 குழந்தைகளும், நாகையில் 6 குழந்தைகளும், மயிலாடுதுறையில் 16 குழந்தைகள் பிறந்துள்ளன.
இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை சுமார் 545 குழந்தைகள் பிறந்துள்ளன.
புதுச்சேரியை பொறுத்தவரை புத்தாண்டான நேற்று 26 குழந்தைகள் (ஆண்-12, பெண்-14) பிறந்துள்ளன.
- குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வந்தது.
- ஐந்தருவிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளில் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு குறைந்ததால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. அனைத்து அருவிகளிலும் பாறையை ஒட்டி மிகவும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்தது.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு பண்டிகை கால விடுமுறை மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமானது குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணி முதல் தென்காசி நகரப்பகுதி குத்துக்கல்வலசை, மேலகரம், குற்றாலம், வல்லம், மத்தளம்பாறை, திரவியநகர் உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.
இரவு 11 மணிக்கு மேல் மிகக் கனமழையாக கொட்டி தீர்த்ததால் முக்கிய அருவியான குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது
மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளமானது பாதுகாப்பு வளைவைத் தாண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் நிற்கும் பகுதி வரையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் இரவில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.இன்று காலையில் மழைப்பொழிவு சற்று குறைந்ததால் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்தும் சற்று குறைய தொடங்கியது.
தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் சீராக விழ தொடங்கியது. எனினும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு காலையில் மெயின் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.
ஐந்தருவிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஐந்தருவி மற்றும் புலியருவில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
- ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
- கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-18 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தசி இரவு 6.43 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம் : மிருகசீர்ஷம் இரவு 8.16 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்
ஆருத்ரா அபிஷேம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் பஞ்ச பிரகார உற்சவம். இரவு வெள்ளி ரதத்தில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு.
லால்குடி ஸ்ரீ பெருந்திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஷ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவிலில் சிறப்பு அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை சிறப்பு பாலபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-பக்தி
மிதுனம்-செலவு
கடகம்-இன்பம்
சிம்மம்-வரவு
கன்னி-ஆதாயம்
துலாம்- அன்பு
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- லாபம்
மகரம்-சுகம்
கும்பம்-மகிழ்ச்சி
மீனம்-உண்மை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வரவு திருப்தி தரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். செல்வாக்கு அதிகரிக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டு.
மிதுனம்
மகிழ்ச்சி கூடும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட மனக் கலக்கங்கள் அகலும். நண்பர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோக உயர்வு உண்டு.
கடகம்
சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் நாள். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். வரவு திருப்தி தரும்.
சிம்மம்
யோகமான நாள். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை அதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
கன்னி
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். பல நாட்களாக வசூலாகாத கடன் இன்று வசூலாகலாம். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோக நீடிப்பு உண்டு.
துலாம்
காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு. கூட்டாளிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்
அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எதிர்பாராத விதத்தில் விரயங்களைச் சந்திக்க நேரிடலாம். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது.
தனுசு
வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள்.. மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
மகரம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
கும்பம்
நெருக்கடி நிலை அகலும் நாள். அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். தொழிலில் புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக் கொள்வீர்கள்.
மீனம்
வளர்ச்சி கூடும் நாள். பணியில் இருந்த தொய்வு அகலும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.
- நாய் குறுக்கே வந்ததால் டிரைவர் திடீரென காரை திருப்பினார்.
- இதனால் பின்னால் வேகமாக வந்த கார் மந்திரியின் கார் மீது மோதியது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் மீன்வளத்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் சஞ்சய் நிஷாத். இவர் கோரக்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆக்ரா நோக்கி நேற்று காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் அதன்மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் காரை திருப்பியுள்ளார். இதையடுத்து பின்னால் வேகமாக வந்த கார் மந்திரியின் கார் மீது மோதியது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மந்திரி சஞ்சய் நிஷாத் காயமின்றி தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாய் மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாக திருப்பிய மந்திரி கார் விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த வாரம் சீனா தைவான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியது.
- தைவானுடன் வேறு எந்த நாடும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்தது.
பீஜிங்:
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனி நாடாகப் பிரிந்தது. ஆனால் தைவானை இன்னும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வருகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைப்பதற்காக சீனா போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் சீனா பதற்றத்தைத் தூண்டுகின்றது.
தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தையும் தூண்டுகிறது. கடந்த வாரம் சீனா தைவான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
தைவானை தனது நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாகவே சீனா கருதுகிறது. தற்போது அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே தைவான் விரைவில் சீனாவுடன் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.






