Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 2 ஜனவரி 2026: அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 2 ஜனவரி 2026: அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு மார்கழி-18 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சதுர்த்தசி இரவு 6.43 மணி வரை பிறகு பவுர்ணமி

நட்சத்திரம் : மிருகசீர்ஷம் இரவு 8.16 மணி வரை பிறகு திருவாதிரை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்

ஆருத்ரா அபிஷேம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் பஞ்ச பிரகார உற்சவம். இரவு வெள்ளி ரதத்தில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு.

லால்குடி ஸ்ரீ பெருந்திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஷ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவிலில் சிறப்பு அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை சிறப்பு பாலபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பெருமை

ரிஷபம்-பக்தி

மிதுனம்-செலவு

கடகம்-இன்பம்

சிம்மம்-வரவு

கன்னி-ஆதாயம்

துலாம்- அன்பு

விருச்சிகம்-ஜெயம்

தனுசு- லாபம்

மகரம்-சுகம்

கும்பம்-மகிழ்ச்சி

மீனம்-உண்மை

X

Maalai Malar
www.maalaimalar.com