என் மலர்tooltip icon

    செய்திகள்

    • அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
    • மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்துகொள்ளவுள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.

    அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.

    இந்நிலையில் மலேசியாவில் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், முதல்ல நான் போட்டோ எடுக்க முயற்சி பண்ணப்போ அஜித் சார் என்ன திட்டிட்டாரு. ஆனா அதுக்கு அப்புறம் அவரே கூப்பிட்டு ஒரு செல்பி எடுத்து கொடுத்தாரு. என் வாழ்நாள் கனவு நனவாகிடுச்சி. அந்த ஒரு நொடி எனக்கு உலகத்தையே மறக்க வச்சிருச்சு'' என்று ஆனந்த கண்ணீருடன் மலேசிய ரசிகை பேசியுள்ளார்.

    • உயிரிழந்த சரவணனின் உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

    வயது மூப்பின் காரணமாக இன்று காலை உயிரிழந்த சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    • அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட் வீழ்த்தி 16-வது இடத்தில் உள்ளார்.
    • ஸ்டார்க் 102 டெஸ்டில் 414 விக்கெட் கைப்பற்றி அவரை சமன் செய்துள்ளார்.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஸ் தொடரின் 2-வது டெஸ்ட் பகல் இரவாக பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க்கின் அபாரமான பந்து வீச்சால் தொடக்க வீரர் பென் டக்கெட் , ஒலி போப் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்கள். 5 ரன்னில் இங்கிலாந்து 2 விக்கெட்டை இழந்தது.

    2 விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) சாதனையை ஸ்டார்க் சமன் செய்தார். அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட் வீழ்த்தி 16-வது இடத்தில் உள்ளார். ஸ்டார்க் 102 டெஸ்டில் 414 விக்கெட் கைப்பற்றி அவரை சமன் செய்துள்ளார்.

    மேலும் டெஸ்ட் போட்டிகளில் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை (26) வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (19) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெமர் ரோச் (10) உள்ளனர்.

    • கருமேகங்கள் திரண்டு வானம் இருண்டு கனமழை கொட்டி தீர்த்தது.
    • சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை கடந்த 30-ந்தேதி முதல் வட தமிழகத்தில் பெய்தது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மட்டுமின்றி ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 3 நாட்கள் பலத்த மழை பெய்தது.

    30-ந் தேதி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 1-ந் தேதி முதல் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது. பகலும் இரவாக காட்சிஅளித்தது. கருமேகங்கள் திரண்டு வானம் இருண்டு கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் சென்னை வாசிகள் வீடுகளில் முடங்கினர். டிட்வா புயல் சென்னை அருகே மையம் கொண்டதால் விட்டு விட்டு கனமழை பெய்தது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    இன்று காலை 7 மணி வரை மழை தூறிக் கொண்டே இருந்தது. சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி நின்றதாலும், ஒரு சில பகுதிகளில் மழைநீர் வடியாததாலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று மழை நின்றதால் சூரிய பிரவேசம் இருந்தது. சென்னை மக்கள் வெயிலை இன்று பார்த்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். தினமும் பயன்படுத்திய துணிமணிகள் எல்லாம் வீடுகளில் உலர வைக்க முடியாமல் இருந்தனர்.

    வெயில் இன்று தலைகாட்டியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். பயன்படுத்திய உடைகளையெல்லாம் துவைத்து வெயிலில் காய வைத்தனர்.

    மழையால் சாலையோர கடைகள் காணாமல் போனது. காய்கறி, பழங்கள் விற்கும் சிறு வியாபாரிகள் இன்று மீண்டும் விற்பனையை தொடங்கினர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் கனமழை மற்றும் குளிரால் வெயிலை தேடும் நிலை ஏற்பட்டது.

    • யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
    • அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடனப் புயல்- இசைப்புயல் இணைந்துள்ள படம் 'மூன்வாக்'. அதாவது பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ள இப்படத்தை என்.எஸ்.மனோஜ் இயக்கி உள்ளார். 'மூன்வாக்' என்பது 'பாப்' இசை உலகின் மன்னர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும். இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.

    இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப பொழுதுபோக்காக, நகைச்சுவை கலந்து உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு உரிமையை 'லஹரி மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, 'மூன்வாக்' படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.



    • ஒரு நாள் போட்டியில் இரு இந்திய வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதம் அடிப்பது இது 44-வது நிகழ்வாகும்.
    • விராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது இது 8-வது முறையாகும்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் பல சாதனைகளை படைத்துள்ளது. அதேசமயம் சோதனைகளையும் சந்தித்துள்ளது.

    அதன்படி கோலி- ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய ஜோடி ஒன்றின் சிறந்த பார்ட்னர்ஷிப் இதுவாகும். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு குவாலியரில் நடந்த ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர்- தினேஷ் கார்த்திக் இணை 2-வது விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

    விராட் கோலி 33 முறை 150 ரன்களுக்கு மேலான பார்ட்னர்ஷிப்புக்கு பங்களித்துள்ளார். அதிக தடவை 150 ரன்னுக்கு மேலான பார்ட்னர்ஷிப்புக்கு உதவியதில் அவர் டெண்டுல்கரை (32 முறை) முந்தியுள்ளார்.

    ஒரு நாள் போட்டியில் இரு இந்திய வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதம் அடிப்பது இது 44-வது நிகழ்வாகும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-வது முறையாகும்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 135 ரன்கள் விளாசிய விராட் கோலி, 2-வது ஆட்டத்தில் 102 ரன்கள் எடுத்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் கோலி சதம் காண்பது இது 11-வது முறையாகும். இச்சாதனையில் அவரை நெருங்க கூட ஆளில்லை. அவருக்கு அடுத்தபடியாக தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் 6 முறை அடுத்தடுத்த ஆட்டங்களில் சதம் கண்டுள்ளார்.

    ராய்ப்பூர் மைதானத்தில் விராட் கோலி அடித்த சதம், அவரது 53-வது சதமாகும். இதையும் சேர்த்து ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் 34 இடங்களில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் அதிக வெவ்வேறு இடங்களில் சதம் அடித்தவரான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (இவரும் 34 இடத்தில் சதம்) சமன் செய்தார்.

    ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி சேர்த்து) விராட் கோலி எடுத்த சதங்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. இந்த சாதனை பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு (100 சதம்) அடுத்த இடத்தில் தொடருகிறார்.

    ருதுராஜ் கெய்க்வாட் 77 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய வீரர் ஒருவரின் 2-வது அதிவேக சதமாக இது பதிவானது. 2011-ம் ஆண்டு செஞ்சுரியனில் நடந்த ஆட்டத்தில் யூசுப் பதான் 68 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக தொடருகிறது.

    2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இருந்து ஒரு நாள் போட்டியில் இந்திய அணி டாசில் ஜெயிக்கவில்லை. நேற்றைய போட்டியுடன் தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் டாசை இழந்துள்ளது. விராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது இது 8-வது முறையாகும்.

    இந்திய அணிக்கு எதிராக அதிகபட்ச சேசிங்காக ஆஸ்திரேலியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்கா சமன் செய்துள்ளது. 

    • PM SHRI நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார்.
    • சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

    மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.

    இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.

    இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதம் தெரிவித்து பின்னர் எழுந்த எதிர்ப்பினால் பின்வாங்கியது.

    இந்நிலையில், மக்களவையில், PM SHRI நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபந்தனைகளை ஏற்கும் பட்சத்தில், நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்று தெரிவித்தார்.

    • டேர்ம் காப்பீடு என்பது தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆயுள் காப்பீட்டு வடிவமாக மாறியுள்ளது.
    • முக்கியமாக இணையத்தின் மூலம் காப்பீடு வாங்கும்போது பல நன்மைகள் கிடைக்கின்றன.

    இன்றைய வேகமான வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் எப்போது நேரும் என்பதை யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது. குடும்பத்தின் நிதி பாதுகாப்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை தூண்களில் ஒன்று.

    அந்தப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று கால காப்பீட்டுத் திட்டம் ஆகும். குறிப்பாக, குறைந்த பிரீமியத்தில் அதிக பாதுகாப்பு வழங்கும் தன்மை காரணமாக, டேர்ம் காப்பீடு (Term Insurance) என்பது தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆயுள் காப்பீட்டு வடிவமாக மாறியுள்ளது.

    அதோடு, ஆன்லைன் காப்பீட்டு தளங்களின் வளர்ச்சியால், பலரும் சில நிமிடங்களில் ACKO Term Insurance போன்ற திட்டங்களை ஒப்பிட்டு வாங்க முடிகிறது.

    கால அடிப்படையிலான காப்பீடு என்றால் என்ன?

    காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு வழங்கும் வாழ்க்கை காப்பீட்டை கால காப்பீடு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பாதுகாப்பு அளிக்கும் ஒப்பந்தமாகும். அந்தக் காலத்திற்குள் காப்பீடு வாங்கிய நபர் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு முன்னதாக ஒப்புக்கொண்ட தொகை வழங்கப்படும்.

    இது ஒரு முதலீட்டு திட்டம் இல்லாததால், முழுக்க முழுக்க பாதுகாப்பையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அதனால் பிரீமியம் குறைவாகவும் பாதுகாப்பு அதிகமாகவும் இருக்கும். குடும்பத்திற்கு நிதிச் சுமை ஏற்படாமல் காக்கும் மிக வலுவான ஓர் ஆதாரமாக இது செயல்படுகிறது.

    ஏன் டேர்ம் காப்பீடு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது?

    குறைந்த செலவில் அதிக பாதுகாப்பு

    மற்ற வாழ்க்கை காப்பீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது, கால காப்பீட்டுத் திட்டங்களில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை மிகவும் குறைவு. காப்பீட்டு நிறுவனத்துக்கு முதலீட்டு சுமை இல்லாததால், முழு பாதுகாப்பையும் சிறிய பிரீமியத்தில் வழங்க முடிகிறது.

    உதாரணமாக, மாதம் சில நூறு ரூபாய்களில் கூட ஒரு குடும்பம் கோடிக்கணக்கான பாதுகாப்பை பெற முடியும். இதுவே இந்த திட்டத்தை சாதாரண வருமானம் உள்ளவர்கள் முதல் நடுத்தர குடும்பங்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாக மாற்றுகிறது.

    குடும்பத்திற்கான நிதி பாதுகாப்பு

    ஒரு குடும்பத்தின் வருமானம் வழங்கும் நபர் திடீரென இல்லாமல் போனால், அது ஒரு பெரிய உணர்ச்சி இழப்பாக மட்டுமல்லாமல் நிதி ரீதியாகவும் பெரும் சுமையாகிவிடும்.

    கால காப்பீடு இருப்பதால் குடும்பம்:

    ●தினசரி வாழ்க்கைச் செலவு

    ●வீட்டுக் கடன் தொகை

    ●குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி செலவுகள்

    ●அவசர மருத்துவச் செலவுகள்

    ●நெருக்கடி நேர நிதித் தேவைகள்

    இவற்றை சமாளிக்க தேவையான பாதுகாப்பு பெறும்.

    அத்தகைய பாதுகாப்பு இல்லாத குடும்பங்கள் மிகப்பெரிய சிரமங்களை சந்திக்க நேரிடும்.

    வெளிப்படையான ஒப்பந்தம்

    இந்த திட்டம் முழுக்க பாதுகாப்பைக் மட்டுமே வழங்குவதால், இதில் மறைமுக நிபந்தனைகள் இல்லை. எந்த சூழ்நிலையில் எவ்வளவு பாதுகாப்பு கிடைக்கும், claim செய்யும்போது என்ன செய்ய வேண்டும், எத்தகைய ஆவணங்கள் வேண்டும் ஆகிய தகவல்கள் தெளிவாக இருக்கும்.

    இதனால் குழப்பமும் தவறான புரிதலும் இல்லாமல், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் தேர்வு செய்ய முடிகிறது.

    கிளைம் வழங்கும் விகிதம் உயர்வு

    இன்றைய காப்பீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் கிளைம் வழங்கும் விகிதத்தில் மிக உயர்ந்த நிலையைப் பெற்று வருகின்றன.

    இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றது. குடும்பம் claim செய்யும்போது தாமதம் இல்லாமல் நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகாலமானவர்களை இந்த காப்பீடு வாங்க தூண்டும் முக்கிய காரணமாக உள்ளது.

    சரியான கால காப்பீட்டு திட்டத்தைத் தேர்வு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை

    காப்பீட்டு தொகை

    இது திட்டத்தின் மைய அம்சம். குடும்பத்தின் எதிர்கால நிதி தேவைகளைப் பாதுகாக்கும் அளவிற்கான பாதுகாப்பு தொகையைத் தேர்வு செய்ய வேண்டும். வருட வருமானத்தின் குறைந்தது பத்து முதல் பதினைந்து மடங்கு வரை பாதுகாப்பு வைத்துக்கொள்வது நல்லது.

    காப்பீட்டு காலம்

    உங்கள் வயது மற்றும் நிதி பொறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு காலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இளம் வயதில் வாங்கினால் பிரீமியம் மிகவும் குறைவாக இருக்கும். வயது அதிகரிக்கும்போது பிரீமியம் அதிகரிக்கும்.

    பிரீமியம் தொகை

    உங்கள் குடும்ப வருமானத்திற்கும் மாதாந்திர செலவுகளுக்கும் பொருந்தும் அளவில் பிரீமியத்தைச் செலுத்தக்கூடிய திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பலர் பிரீமியம் அதிகம் என தவறாக நினைக்கும் போதிலும், உண்மையில் இந்த திட்டம் மிகவும் ஏற்றது.

    கூடுதல் பாதுகாப்பு (ரெய்டர்) சேர்த்தல்

    தீவிர நோய் பாதுகாப்பு, விபத்து மரண பாதுகாப்பு, வருமான மாற்று பாதுகாப்பு போன்றவை சேர்த்தால் குடும்பத்திற்கு கூடுதல் நன்மை கிடைக்கும்.

    கிளைம் வழங்கும் விகிதம்

    உயர்ந்த கிளைம் விகிதம் கொண்ட நிறுவனத்தைத் தேர்வு செய்வது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

    நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் சேவை

    காப்பீட்டு நிறுவனம் எவ்வளவு விசுவாசத்துடன் செயல்படுகிறது, வாடிக்கையாளர் சேவை எப்படி உள்ளது, claim செய்யும் போது ஆதரவு கிடைக்குமா என்பதைப் பாருங்கள்.

    ஏன் பலரும் இணையத்தின் மூலம் டேர்ம் காப்பீடு வாங்குகின்றனர்?

    நவீன காலத்தில் பெரும்பாலானவர்கள் life insurance online வாங்குவதையே விரும்புகிறார்கள், ஏனெனில் அதில் வேகமும் வசதியும் அதிகம், செலவும் குறைவு. இதற்கு முக்கிய காரணம், டிஜிட்டல் வழியில் கிடைக்கும் வசதியும் வெளிப்படைத்தன்மையும். முன்னொரு காலத்தில் காப்பீடு வாங்குவதற்கு முகவரை சந்திக்க வேண்டும், பல ஆவணங்களை உடன் கொண்டு செல்ல வேண்டும், பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று அது சில நிமிடங்களுக்குள் முடியும் தன்மைக்கு மாறியுள்ளது.

    முக்கியமாக இணையத்தின் மூலம் காப்பீடு வாங்கும்போது பல நன்மைகள் கிடைக்கின்றன:

    திட்டங்களை ஒரே இடத்தில் ஒப்பிடும் வசதி

    ஒரே இணையப் பக்கத்தில் பல நிறுவனங்களின் கால காப்பீட்டு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கலாம். பாதுகாப்பு தொகை, பிரீமியம், காலம், நிபந்தனைகள், கூடுதல் பாதுகாப்புகள் போன்றவற்றை ஒரே பார்வையில் அறிந்து கொண்டு முடிவு எடுக்க இயலும். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பொருத்தமானதாகவும், பட்ஜெட்டுக்கு ஏற்றதாகவும் உள்ள திட்டத்தை எளிதில் தேர்வு செய்ய முடிகிறது.

    ஆவணங்களை எளிதில் பதிவேற்றும் சுலபம்

    இணையத்தின் மூலம் ஆவணங்களை சில நொடிகளில் பதிவேற்ற முடியும். அடையாள அட்டை, முகவரி சான்று, புகைப்படம் போன்றவை தனித்தனி அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே சமர்ப்பிக்கலாம். இதனால் நேரம் மிச்சமாகும்.

    முழு செயல்முறை வெளிப்படையானது நிபந்தனைகள், வரம்புகள், விலக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெளிவாக இணையத்தில் காண்பிக்கப்படுவதால் குழப்பம் ஏற்படாது. முகவர் கூறும் தகவலையே மட்டும் நம்ப வேண்டிய நிலை இல்லாமல், ஒவ்வொரு தகவலையும் நேரடியாக புரிந்து கொண்டு முடிவு செய்யலாம்.

    இந்த வெளிப்படைத்தன்மை பலரையும் இணைய வழியை விரும்ப வைக்கிறது.

    நடுவண் முகவர் கட்டணம் இல்லாததால் செலவு குறைவு

    இணையத்தின் மூலம் நேரடியாக நிறுவனம் இருந்து திட்டத்தை வாங்கும் போது நடுவண் முகவர் கமிஷன் இருக்காது. இதனால் பிரீமியம் தொகை மேலும் குறைவாக இருக்கும். குறைந்த செலவில் அதிக பாதுகாப்பு கிடைப்பது பெரிய நன்மையாகும்.

    விரைவான அங்கீகாரம்

    முன்னொரு காலத்தில் காப்பீடு அங்கீகரிப்பதற்கு பல நாட்களோ வாரங்களோ எடுத்துக்கொள்ளும். இப்போது e-KYC செயல்முறை மூலம் சில மணிநேரங்களில் அல்லது சில சமயங்களில் சில நிமிடங்களிலேயே அங்கீகாரம் கிடைக்கிறது. இதனால் பாதுகாப்பு அவசியம் உள்ளவர்கள் உடனடியாக திட்டத்தைப் பெறலாம்.

    முழுநேர வாடிக்கையாளர் சேவை

    வரிகள், நிபந்தனைகள், claim செயல்முறை போன்றவற்றை பற்றி சந்தேகம் எழும்போது 24 மணி நேரமும் உதவி கிடைக்கிறது. வாடிக்கையாளர் சேவை எப்போதும் கிடைப்பதால் நம்பிக்கை அதிகரிக்கிறது.

    அணுகுவதற்கும் மேலாண்மை செய்வதற்கும் சுலபம்

    இணையத்தில் வாங்கிய காப்பீட்டுகளை:

    ●புதுப்பிக்க

    ●பிரீமியம் செலுத்த

    ●ஆவணங்களைப் பதிவிறக்க

    ●மாற்றங்களைச் செய்ய

    ●claim நிலையைச் சரிபார்க்க

    எல்லாம் மொபைல் கைப்பேசியில் இருந்து கூட செய்ய முடியும். இதனால் நேரில் அலுவலகத்தில் சென்று உட்கார வேண்டிய அவசியம் இல்லாமல் விடுகிறது.

    பாதுகாப்பான பண பரிமாற்றம்

    எல்லா நிறுவனங்களும் உயர் பாதுகாப்பு முறைமை, குறியாக்கம் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் சரிபார்ப்புகளை பயன்படுத்துவதால், பண பரிமாற்றம் பாதுகாப்பாக இருக்கும். இதனால் இணையத்தில் காப்பீடு வாங்குவதில் பயம் அல்லது சந்தேகத்திற்கான இடம் இருப்பதில்லை.

    முடிவுரை

    டேர்ம் காப்பீடு என்பது குறைந்த செலவில் அதிக பாதுகாப்பை வழங்கும் மிக நம்பகமான வாழ்க்கை காப்பீட்டு திட்டமாகும். குடும்பத்தின் எதிர்பாராத நிதிச் சுமைகளை சமாளிக்க இது உறுதியான பாதுகாப்பு வலையமைப்பாக செயல்படுகிறது.

    வெளிப்படையான நிபந்தனைகள், எளிய ஆன்லைன் செயல்முறை, குறைந்த பிரீமியம் மற்றும் விரைவான அங்கீகாரம் ஆகிய காரணங்களால், இது இன்று பெரும்பாலான குடும்பங்களின் முதன்மையான தேர்வாக மாறியுள்ளது. குடும்பத்தின் எதிர்கால நன்மைக்காக, உங்களுக்கு ஏற்ற கால காப்பீட்டு திட்டத்தை இன்றே தேர்வு செய்வது ஒரு பொறுப்பான முடிவாகும்.

    • ஏ.வி.எம். சரவணன் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
    • ஏ.வி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு.

    சென்னை:

    ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏ.வி.எம். நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏ.வி.எம். சரவணன் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ் திரையுலகின் பாதையை தீர்மானித்து உருவாக்கியதில் ஏ.வி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு ஏ.வி.எம். நிறுவனத்தின் பாதையை தீர்மானித்ததில் சரவணன் பங்கும் அளப்பரியது.

    புதல்வராகவும், திரைத்துறை ஆளுமையாகவும் "அப்பச்சி" என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை ஏ.வி.எம்-க்குப் புகழ் சேர்த்தவர் சரவணன். பேரறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு", தலைவர் கலைஞரின் "பராசக்தி", முரசொலி மாறனின் "குலதெய்வம்" என ஏ.வி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏ.வி.எம்.சரவணன்.

    கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் ஏ.வி.எம்-ன் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏ.வி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதேபோல பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் 'தமிழ்த் திரை உலகில் பல புதுமைகளை புகுத்துவதற்கு காரணமாக இருந்த ஏ.வி.எம்.சரவணன் ஏராளமான கலைஞர்கள் தமிழ்த் திரை உலகில் நுழைவதற்கு காரணமாக இருந்தவர் என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

    • 11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
    • நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும்.

    தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 13-ந் தேதி வரை தரிசிக்கலாம்.

    11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

    நேற்று நள்ளிரவு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணா முலையம்மன் சமேத ஸ்ரீஅருணாச லேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.

    தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன. 

    • கடந்த திங்கட்கிழமை தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கு விற்பனையானது.
    • நேற்று அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. கடந்த வாரமும் இதே நிலை நீடித்தாலும், வார இறுதிநாளான கடந்த 29-ந்தேதி ஒரு சவரன் 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதன் பின்னர் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,020-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96,160 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    நேற்று அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 200 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    03-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,480

    02-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

    01-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,560

    30-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,840

    29-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    03-12-2025- ஒரு கிராம் ரூ.201

    02-12-2025- ஒரு கிராம் ரூ.196

    01-12-2025- ஒரு கிராம் ரூ.196

    30-11-2025- ஒரு கிராம் ரூ.192

    29-11-2025- ஒரு கிராம் ரூ.192

    • சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

    வயது மூப்பின் காரணமாக இன்று காலை உயிரிழந்த சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    ×