என் மலர்
செய்திகள்
- 11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
- நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும்.
தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 13-ந் தேதி வரை தரிசிக்கலாம்.
11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.
நேற்று நள்ளிரவு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணா முலையம்மன் சமேத ஸ்ரீஅருணாச லேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.
தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.
- கடந்த திங்கட்கிழமை தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கு விற்பனையானது.
- நேற்று அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. கடந்த வாரமும் இதே நிலை நீடித்தாலும், வார இறுதிநாளான கடந்த 29-ந்தேதி ஒரு சவரன் 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதன் பின்னர் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,020-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96,160 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
நேற்று அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 200 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
03-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,480
02-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
01-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,560
30-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,840
29-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
03-12-2025- ஒரு கிராம் ரூ.201
02-12-2025- ஒரு கிராம் ரூ.196
01-12-2025- ஒரு கிராம் ரூ.196
30-11-2025- ஒரு கிராம் ரூ.192
29-11-2025- ஒரு கிராம் ரூ.192
- சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
வயது மூப்பின் காரணமாக இன்று காலை உயிரிழந்த சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- இவை மணிக்கு 60-99 கிமீ வேகத்தில் இயக்கும் திறன் கொண்டவை.
- பேட்டரி வரம்புகள் மாடலுக்கு மாடல் வேறுபடுகின்றன.
இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு புதுவரவு நிறுவனம் வின்ஃபாஸ்ட். சமீபத்தில் இந்தியாவில் VF 6 மற்றும் VF 7 மின்சார எஸ்.யூ.வி.க்களை அறிமுகப்படுத்திய வின்ஃபாஸ்ட், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார ஸ்கூட்டர் பிரிவிலும் களமிறங்க தயாராகி வருகிறது.
2026 ஆம் ஆண்டில் தனது முதல் மின்சார ஸ்கூட்டரை இங்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. அதன் உலகளாவிய வரிசையில் இருந்து எந்த மாடல்களை உள்ளூர் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள அந்நிறுவனம் ஏற்கனவே ஆய்வு நடத்தியது.
வின்ஃபாஸ்ட் தற்போது ஃபெலிஸ், கிளாரா நியோ, ஈவோ கிராண்ட், வெரோ எக்ஸ், வென்டோ எஸ் மற்றும் தியோன் எஸ் உள்ளிட்ட பல மின்சார ஸ்கூட்டர் மாடல்களை சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்கிறது. இந்த ஸ்கூட்டர்களில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட அல்லது ஹப்-மவுண்டட் மோட்டார்கள் உள்ளன.

இவை மணிக்கு 60-99 கிமீ வேகத்தில் இயக்கும் திறன் கொண்டவை. பேட்டரி வரம்புகள் மாடலுக்கு மாடல் வேறுபடுகின்றன, சுமார் 160 கிமீ வரை செல்லும். இந்த விவரங்கள் வியட்நாமிய சந்தைக்கானவை. இவற்றில் சில இந்தியாவிற்காக மதிப்பீடு செய்யப்படலாம்.
அங்கு இந்த நிறுனம் ஸ்கூட்டரின் அன்றாட பயணத்திற்கு ஏற்ற தன்மை, மாறுபட்ட சாலை நிலைமைகளை சமாளிக்கும் திறன் மற்றும் இந்தியாவின் தட்பவெப்ப நிலைகளின் கீழ் பவர்டிரெய்னின் ஆயுள் ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது.
வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் இந்திய வெளியீடு 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை புதிய மாடல்கள் 2026 பண்டிகை காலத்தை குறிவைத்து அறிமுகம் செய்யப்படலாம். இந்தப் பிரிவில் தற்போது டிவிஎஸ், ஏத்தர் எனர்ஜி, பஜாஜ் ஆட்டோவின் செட்டக் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா போன்ற பிரான்டுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
நாட்டுப் பற்றுமிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். பிள்ளைகள் நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். தொழில் ரீதியாக சிலர் உங்களைத் தொடர்பு கொள்வீர்கள்.
ரிஷபம்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
யோகமான நாள். அதிகாலையிலேயே அலைபேசி மூலம் நல்ல தகவல் கிடைக்கும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
கடகம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு உண்டு.
சிம்மம்
செல்வாக்கு உயரும் நாள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். தொலைபேசி வழியில் நல்ல செய்தி வந்துசேரும். பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
கன்னி
வீண்பழிகள் அகலும்நாள். வியாபார விருத்தியுண்டு. கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச்செல்வது நல்லது.
துலாம்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்தையும் இப்போதே செய்வோமா பிறகு செய்வோமா என்றுயோசிப்பீர்கள். நண்பர்கள் மீது நம்பிக்கை குறையும்.
விருச்சிகம்
புதியபாதை புலப்படும் நாள். பொதுநலத்தில் ஆர்வம் கூடும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். மாற்றினத்தவர்கள் மூலம் மனதிற்கினிய செய்தி கிடைக்கும்.
தனுசு
தேசப்பற்றும் தெய்வப்பற்றும் மேலோங்கும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். கூட்டுத்தொழிலில் லாபம்உண்டு. தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.
மகரம்
மனக்குழப்பம் அகலும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். வருமானம் போதுமானதாக இருக்கும்.
கும்பம்
பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தேகநலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு.
மீனம்
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். கற்றவர்களின் பாராட்டுக்களால் கனிவு கூடும். மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
- கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
- நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
சென்னை:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சிலநாட்களாக மழை பெய்து வந்தது. இதனிடையே, தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, ஈரோடு, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் ஏ.வி.எம். சரவணன்.
- பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் தொடரையும் தயாரித்து உள்ளது.
புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். நிறுவன உரிமையாளர் சரவணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த ஏ.வி.எம். சரவணனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது.
வயது மூப்புக்காரணமாக ஓய்வில் இருந்து வந்த இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் ஏ.வி.எம். சரவணன்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான, ஏ.வி.எம். புரொடக்சன்ஸ் இதுவரை 180-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து இருக்கிறது. மேலும் பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் தொடரையும் தயாரித்து உள்ளது.
- இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 தினங்களாக கன முதல் மிதமான மழை பெய்து வந்தது. இதனால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் சற்று ஓய்ந்திருந்த மழையானது தற்போது பெய்து வருகிறது. மணலி, ராயபுரம், புதுவண்ணாரப்பேட்டை, எழும்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர்.
- பதிவு செய்த அடுத்த நிமிடங்களிலேயே அந்த ஆவணங்களின் சான்றிட்ட நகல் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு வருகிறது.
- குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்களை பதிவு செய்வதற்கும் ஒரு புதுமையான மென்பொருளை பதிவுத்துறை வடிவமைத்து இருக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் 590 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் சொத்து பரிமாற்றப்பதிவு, திருமணப்பதிவு, கடன் ஆவணங்கள் பதிவு, உயில், குடும்ப ஏற்பாடு (செட்டில்மென்ட்) உள்ளிட்ட பல ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
பொதுவாக இதுபோன்ற ஆவணங்களை பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பதிவு செய்த ஆவணங்களை பெற காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படும்.
இதனை தவிர்க்க பதிவுத்துறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பதிவுத்துறை தலைவர் (ஐ.ஜி.) தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்பார்வையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மக்கள் எளிதாக பத்திரப்பதிவு செய்வதற்கு ஏதுவான வசதிகளை ஏற்படுத்தும் வகையில், இப்போது பதிவுத்துறை அலுவலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ஒரு சீர்திருத்தமாக 'ஸ்டார் 3.0' என்ற திட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பதிவுத்துறை உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கான பத்திரப்பதிவு சேவைகள் விரைவாகவும், இருந்த இடத்திலேயே கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.
இதன்மூலமாக புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், மனைப்பிரிவுகளை வாங்கவும், விற்கவும் வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யலாம்.
அதற்கான புதிய மென்பொருள் மூலம் சொத்துகளை வாங்குபவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும், விற்பவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும், சொத்துகளின் விவரங்களையும் பதிவேற்றம் செய்தால் போதும். மென்பொருளே தானாக பத்திரங்களை உருவாக்கிவிடும்.
பின்னர் ஆதார் எண்ணை அதில் பதிவு செய்தால், 'ஓ.டி.பி.' எண் கேட்கும். அதனையும் அதில் குறிப்பிட்டால், தொடர்ந்து விரல் ரேகைப்பதிவு செய்ய வேண்டும். இந்த விரல் ரேகைப் பதிவு செய்வதற்கான எந்திரங்கள் இப்போது கடைகளில் ரூ.1,500-க்கு கிடைக்கிறது. அதனை வாங்கி அதில் விரல் ரேகையை பதிவு செய்தால்போதும். அனைத்து பணிகளையும் இருந்த இடத்திலேயே செய்து முடித்துவிடலாம்.
இதற்காக செலவிடும் மொத்த நேரம் அதிகபட்சமாக 10 நிமிடம்தான். அதற்குள் நம்முடைய கையில் பத்திரப் பதிவு செய்ததற்கான ஆவணங்களும் கிடைத்துவிடும். இதன் மூலம் இனி அலைய வேண்டிய நிலையும், காத்திருக்க வேண்டிய அவசியமும் மக்களுக்கு நிச்சயம் இருக்காது.
இதுமட்டுமா? ஆவணங்களின் நகல் பெறுவதற்கு இப்போது பத்திரப்பதிவு அலுவலகங்களில் காத்துக்கிடக்கும் நிலைமை இனி இல்லாத சூழ்நிலையை பதிவுத்துறை மேற்கொள்ள இருக்கிறது.
தற்போது ஆன்லைன் மூலமாக ஆவணங்களின் நகல் பெற பதிவு செய்யும்போது, சார் பதிவாளர் 'லாக்கினு'க்கு அந்த அனுமதிப்பதிவு சென்று, அதனை அவர் பார்த்து ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற சூழ்நிலை இருந்தது.
அவ்வாறான நகலை பெறுவதற்கு குறைந்தது 2 நாட்களோ அல்லது ஒரு வாரமோ காலம் எடுக்கும். அதனையும் தவிர்க்கும் நோக்கில், ''சிஸ்டம் ஜெனரேட்டர் சிக்னேச்சர்'' என்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்மூலம் பதிவு செய்த அடுத்த நிமிடங்களிலேயே அந்த ஆவணங்களின் சான்றிட்ட நகல் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்களை பதிவு செய்வதற்கும் ஒரு புதுமையான மென்பொருளை பதிவுத்துறை வடிவமைத்து இருக்கிறது. இந்த சங்கங்களை பதிவு செய்ய இப்போது நேரடியாக அலுவலகத்துக்கு வரவேண்டிய சூழல் இருக்கிறது. அதற்கும் தீர்வு காணப்பட்டு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே அதற்கான பதிவுகளை மேற்கொண்டு, ஒப்புதல் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை வாங்குபவர்கள் அதனை பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வீட்டு வசதி வாரிய அலுவலகத்திலேயே பதிவுசெய்து கையில் பத்திரப்பதிவுக்கான ஆவணங்களை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதுபோன்ற பல்வேறு சேவைகளை பதிவுத் துறை 'ஸ்டார் 3.0' என்ற திட்டத்தின் கீழ் இன்னும் சில நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்க இருக்கிறார்.
- திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் சந்திரசேகரர் தெப்ப உற்சவம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-18 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தசி காலை 7.54 மணி வரை பிறகு பவுர்ணமி பின்னிரவு 3.55 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : கார்த்திகை பிற்பகல் 3.08 மணி வரை பிறகு ரோகிணி
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பவுர்ணமி, நத்தம் மாரியம்மன் கோவிலில் லட்ச தீபக்காட்சி, திருவல்லிக்கேணி ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்
இன்று பவுர்ணமி. ஸ்ரீ பாஞ்சராத்திரி தீபம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் சந்திரசேகரர் தெப்ப உற்சவம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் லட்ச தீபக்காட்சி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீகுருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-பொறுமை
மிதுனம்-பொறுப்பு
கடகம்-பெருமை
சிம்மம்-ஆதரவு
கன்னி-நட்பு
துலாம்- உதவி
விருச்சிகம்-பாராட்டு
தனுசு- அன்பு
மகரம்-பக்தி
கும்பம்-ஆக்கம்
மீனம்-போட்டி
- அவரின் பாதுகாப்பு கவச வாகனமான 'அராஸ் செனட்' சொகுசு கார் மாஸ்கோவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.
- புதின் தங்கியிருக்கும் ஹோட்டலைத் தவிர, ராஜ்காட், ஐதராபாத் ஹவுஸ் மற்றும் பாரத் மண்டபம் போன்ற அவர் செல்லும் அனைத்து இடங்களையும் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வருகிறார்.
இந்த சூழலில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் புதினுக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில் ரஷிய அதிபர் பாதுகாப்புப் படையினர், இந்திய தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோக்கள், ஸ்னைப்பர்கள், டிரோன்கள், சிக்கினல் ஜாமர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக ரஷியாவிலிருந்து 48 உயர்மட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஏற்கனவே டெல்லியை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி காவல்துறை மற்றும் NSG அதிகாரிகளுடன் புதினின் பயணத்தின் அனைத்து வழிகளையும் அவர்கள் முழுமையாகச் சரிபார்த்து வருகின்றனர்.
NSG,டெல்லி காவல்துறை, ரஷிய அதிபர் பாதுகாப்புப் படையினர் சுற்றியிருக்க பிரதமர் மோடி புதினுடன் இருக்கும்போது சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG) கமாண்டோக்களும் இந்தப் பாதுகாப்பில் பணியாற்றுவர்.
இந்தப் பயணத்தின் புதின் சாலை மார்க்கமாக பயணிக்க அவரின் பாதுகாப்பு கவச வாகனமான 'அராஸ் செனட்' சொகுசு கார் மாஸ்கோவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.
புதின் தங்கியிருக்கும் ஹோட்டலைத் தவிர, ராஜ்காட், ஐதராபாத் ஹவுஸ் மற்றும் பாரத் மண்டபம் போன்ற அவர் செல்லும் அனைத்து இடங்களையும் பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.






