என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் தொடரும் மழை...
- இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 தினங்களாக கன முதல் மிதமான மழை பெய்து வந்தது. இதனால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் சற்று ஓய்ந்திருந்த மழையானது தற்போது பெய்து வருகிறது. மணலி, ராயபுரம், புதுவண்ணாரப்பேட்டை, எழும்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர்.






