என் மலர்
நீங்கள் தேடியது "ஆயுள் காப்பீடு"
- இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும் வங்கிகள் வழங்கிடும் எனத் தெரிவித்தார்.
- அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன.
சென்னை:
அரசு ஊழியர்கள் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு போன்றவற்றிற்கு பெரும் தொகையைச் செலவழிப்பதைத் தவிர்த்து காப்பீடுகளை கட்டணமின்றிப் பெறும் வகையில் செய்திட அரசு உத்தேசித்ததன் அடிப்படையில் முன்னோடி வங்கிகளிடம் இதுகுறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக பல சலுகைகளை வங்கிகள் தர முன்வந்துள்ளன.
மேலும், இதுகுறித்து நிதி அமைச்சர் தற்போது நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது, அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினை வழங்க வேண்டும்.
விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம், இரண்டு மகள்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவியும், விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர் கல்வி பயின்றிடும் மகளின் உயர்கல்விக்கான உதவித் தொகையாக 10 லட்சம் ரூபாய் வரையும், அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும் வங்கிகள் வழங்கிடும் எனத் தெரிவித்தார்.
இச்சலுகைகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகள் அரசு ஊழியர்கள் தங்களது ஊதியக்கணக்கினைப் பராமரித்து வரும் பட்சத்தில் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கிட முன்வந்துள்ளன. மேலும், இச்சலுகைகள் மட்டுமின்றி தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன.
இந்த சலுகைகளை வங்கிகள் அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், அரசு சார்பில் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் மற்றும் முன்னோடி வங்கிகளின் உயர் அலுவலர்களால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடப்பட்டன.
இந்நிகழ்வில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளர் (செலவுகள்) எஸ்.நாகராஜன், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் தி.சாருஸ்ரீ, வங்கிகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தாயை கொன்று, அவரது உடலை யமுனை ஆற்றின் கரையில் அப்புறப்படுத்த முயன்றுள்ளார் ஹிமான்சு
- ஹிமான்சுவினுடைய தாயின் உடலை யமுனை ஆற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டெடுத்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் படேக்பூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் ₹4 லட்சம் வரை கடன் வாங்கிய ஹிமான்சு என்ற நபர், காப்பீடு பணம் கிடைக்கும் என்பதால் தாயைக் கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
ஹிமான்சு என்ற நபர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். குறிப்பாக அவர், ஸுபி (Zupee) என்ற செயலியில் சூதாட்டம் விளையாடி தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளார். இதன் விளைவாக நண்பர்களிடம் அவர் 4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதன்பின் நண்பர்கள், இவரிடம் கடன் தொகையை திருப்பி தரும்படி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அவரது தந்தை பக்கத்தில் உள்ள அனுமான் கோயிலில் வழிபாடு நடத்த சென்றிருந்த நேரத்தில், தாயை கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலை யமுனை ஆற்றின் கரையில் அப்புறப்படுத்த முயன்றுள்ளார் ஹிமான்சு.
இது தொடர்பாக ஹிமான்சுவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம், "தனது உறவினர் வீட்டில் நகை திருடிய ஹிமான்சு, அதன் மூலம் தனது பெற்றோருக்கு ₹50 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு வாங்கியதாகவும், அதனை பெறுவதற்காக தாயை கொலை செய்து அவரது உடலை யமுனை ஆற்றில் வீசியதாகவும்" அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 21-ம் தேதி ஹிமான்சுவினுடைய தாயின் உடலை யமுனை ஆற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டெடுத்தனர்.
- ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு பிரீமியங்கள் மீது மத்திய அரசு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது
- நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் இந்த வரி விதிப்பை தளர்த்த கோரிக்கை விடுத்துள்ளார்
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு பிரீமியங்கள் மீது மத்திய அரசு விதித்துள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வாரியானது மக்கள் விரோத வரி என்று மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இது முற்றிலும் மக்கள் விரோதமானது, உயிர்க் காப்பீடு திட்டங்களின் விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வாரியானது சாமானிய மக்களுக்கு சுமையாக அமையும். மேலும் இது அவர்களிடையே அச்சத்தை விளைவிக்கும்.
இது புதிதாக யாரும் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டடத்தில் சேர முடியாத நிலையை ஏற்படுத்தும். அவர்களின் சமூக பாதுகாப்பு கட்டமைப்பை இந்த வரி விதிப்பானது தகர்க்கும். எனவே என்ன விலை கொடுத்தும் இந்த வரியை உடனே ரத்து செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சரே இந்த வரி விதிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தது பேசுபொருளானதையும் பார்க்க வேண்டி உள்ளது. இதற்கிடையில் நேற்று மக்களவையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் இருந்து காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிரித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

