என் மலர்
இந்தியா

Health, Life இன்சூரன்ஸ் காப்பீட்டு பிரீமியங்களுக்கு GST வரியை ரத்து செய்ய திட்டம் - அமைச்சர் குழு ஆதரவு
- இந்த முடிவால் அரசுக்கு சுமார் ரூ.9,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டார்.
- ஜிஎஸ்டியில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார்.
நாடு முழுவதும் ஆயுள் (Life) மற்றும் சுகாதார (Health) காப்பீட்டு பிரீமியங்கள் மீதான தற்போதைய 18 சதவீத ஜிஎஸ்டியை முற்றிலுமாக ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு அமைச்சர் குழு (GoM) பரிந்துரைத்துள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், பாலிசிகளின் பிரீமியங்கள் கணிசமாகக் குறையும்.
மறைமுக வரி முறையில் கொண்டு வரப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க புதன்கிழமை டெல்லியில் பீகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி தலைமையில் இந்த குழு கூடியது.
கூட்டத்திற்குப் பிறகு பேசிய சாம்ராட் சவுத்ரி, ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்திலிருந்து பூஜ்ஜிய சதவீதமாகக் குறைக்க முன்மொழிந்துள்ளதாகத் தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற தெலுங்கானா அமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்கா, இந்த முடிவால் அரசுக்கு சுமார் ரூ.9,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டார்.
மாநிலங்கள் இந்த 15 சதவீத ஜிஎஸ்டியை நீக்க தயாராக இருப்பதாகவும், இது குறித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த ஜிஎஸ்டியில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர்கள் குழுவால் வழங்கப்பட்ட இந்த பரிந்துரைகள் குறித்த இறுதி முடிவு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அடுத்த மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.






