என் மலர்tooltip icon

    இந்தியா

    மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி குறைப்பு? - மத்திய அரசு முடிவு
    X

    மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி குறைப்பு? - மத்திய அரசு முடிவு

    • தற்போது நடைமுறையில் உள்ள 5 %, 12 %, 18 % , 28% என்ற 4 அடுக்கு வரிமுறை உள்ளது.
    • மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கான தற்போதைய ஜிஎஸ்டி வரி 18% ஆக உள்ளது.

    பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், "இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது; ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்தகட்ட மாற்றங்களை இந்த தீபாவளிக்கு கொண்டு வர உள்ளோம்" என்று தெரிவித்தார்.

    அக்டோபர் 20 தீபாவளி வருகிறது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையே ஜிஎஸ்டி முறையில் என்ன மாதிரியான மாற்றங்களை மத்திய அரசு செய்ய உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 5 %, 12 %, 18 % , 28% என்ற 4 அடுக்கு வரி 2 அடுக்குகளாக குறைக்கப்பட உள்ளது.

    அதாவது, 12, 28 சதவீத அடுக்குகள் நீக்கப்பட உள்ளன. 12 சதவீதத்தில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத அடுக்குக்கும், 28 சதவீத அடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத அடுக்குக்கு மாற்றப்பட உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவ்வகையில், மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டியை தற்போதைய 18%-ல் இருந்து 5%-ஆக குறைக்க அல்லது முற்றிலுமாக ரத்து செய்ய நிதி அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×