search icon
என் மலர்tooltip icon
    < Back
    Moothakudi
    Moothakudi

    மூத்தகுடி

    இயக்குனர்: ரவி பார்க்கவன்
    வெளியீட்டு தேதி:2023-12-29
    Points:23

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை252
    Point23
    கரு

    குடி மற்றும் அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    கோவில் திருவிழாவில் சாராயத்தால் ஏற்பட்ட கலவரத்தில் பலர் உயிரிழக்கின்றனர். இதனால் கே.ஆர்.விஜயா தன் ஊரான மூத்த குடியில் யாரும் சாராயம் குடிக்கவோ விற்கவோ கூடாது என கட்டளை இடுகிறார். இதனை ஊர் மக்கள் பின்பற்றி வருகின்றனர். விபத்தில் இறந்தவர்களின் பிள்ளைகளான பிரகாஷ் சந்திரா மற்றும் தருண் கோபியை கே.ஆர்.விஜயா மற்றும் அவரது தம்பி வளர்த்து வருகிறார்.

    தருண் கோபி மாமன் மகளான அன்விஷாவை காதலிக்கிறார். ஆனால், அன்விஷா பிரகாஷ் சந்திராவை காதலிக்கிறார். இப்படி சென்று கொண்டிருக்க. அரசியல்வாதியான ராஷ் கபூர் மூத்த குடியில் யாரும் குடிக்காததால் ஓட்டு வாங்க முடியாது என நினைத்து மூத்த குடி மக்களை குடிகாரனாக மாற்றுவதாக கூறுகிறார்.

    இதற்கு தொடக்க புள்ளியாக மூத்த குடியில் ஒரு இடத்தை வாங்க நினைக்கிறார். ஆனால், அது நிறைவேறவில்லை என்றதும் தருண் கோபியை தன் பக்கம் இழுத்து குடிகாரனாக மாற்றுகிறார்.

    இறுதியில் ராஷ் கபூர் தான் நினைத்ததை சாதித்தாரா இல்லையா? பிரகாஷ் சந்திரா நிலை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    தருண் கோபிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஹீரோ வேடம் கிடைத்திருக்கிறது. கிளைமேக்ஸிற்கு முந்தைய காட்சியில் ஓவர் ஆக்டிங் செய்து கவனத்தைக் ஈர்க்க முயற்சித்திருக்கிறார். அவரது தம்பியாக வரும் பிரகாஷ் சந்திரா முகத்தில் எந்த ஒரு பாவனைகளும் இல்லை.

    நின்ற இடத்திலேயே நின்று வசனங்களை பேசினாலும் கே ஆர் விஜயா, கண்களிலேயே உணர்ச்சிகளையும் பாவங்களையும் காட்டி நடித்து இருக்கிறார். கதாநாயகியான அன்விஷா கொடுத்த வேலையை செய்துள்ளார்.

    இயக்கம்

    இயக்குனர் ரவி பார்க்கவன் குடி மற்றும் அரசியலை மையமாக வைத்து கதையை இயக்கியுள்ளார். திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பது வருத்தம்.

    இசை

    ஜே.ஆர் .முருகானந்தத்தின் இசை 90-களில் படம் பார்த்த அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

    ஒளிப்பதிவு

    கந்தா ரவிச்சந்திரன் ஒளிப்பதிவில் சில காட்சிகள் இருள் சூழ்ந்து இருக்கின்றன.

    படத்தொகுப்பு

    வளர் பாண்டி படத்தொகுப்பு சுமார் ரகம்.

    புரொடக்‌ஷன்

    தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனம் ‘மூத்தகுடி’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×