search icon
என் மலர்tooltip icon
    < Back
    E-Mail
    E-Mail

    இ-மெயில்

    இயக்குனர்: எஸ்.ஆர்.ராஜன்
    இசை:கவாஸ்கர் அவினாஷ்
    வெளியீட்டு தேதி:2024-02-09
    Points:245

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை169155
    Point111134
    கரு

    மொபைல் வீடியோ கேம்மால் விபரீதத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்ணின் கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த நாயகி ராகினி திவேதி, ஹாஸ்டலில் வளர்கிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மனோ பாலாவிடம் வேலை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் வேலை சரியாக செய்யாத காரணத்தால் வேளையில் இருந்து நீக்கப்படுகிறார். ராகினி திவேதி பிசினஸ் செய்து வரும் அசோக்கை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

    இந்நிலையில் மொபைல் கேமில் அதிக ஆர்வம் கொண்ட ராகினிக்கு கேம் மூலம் அதிக பணம் கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் பணத்தை இழக்க ஆரம்பிக்கிறார். மேலும் அந்த கேம் மூலம் ராகினிக்கு மிரட்டலும் மர்ம நபர் ஒருவர் கொல்லவும் முயற்சி செய்கிறார்.

    இறுதியில் இந்த மொபைல் கேம் மூலம் வரும் ஆபத்தில் இருந்து ராகினி திவேதி தப்பித்தாரா? ராகினி திவேதியை மிரட்டும் நபர் யார்? எதற்காக மிரட்டுகிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் வித்தியாசமான வேடம் ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ராகினி திவேதி, ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். ஆனால், மற்ற இடங்களில் நடிப்பே வரவில்லை. குறிப்பாக கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். மனோ பாலாவின் காமெடி பெரியதாக எடுபடவில்லை. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜன். முழு கதையும் ராகினி திவேதியை மையப்படுத்தியே நகர்த்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் யூகிக்க முடிந்தாலும் அதிலும் ஒரு திருப்பம் வைத்து இருப்பது சிறப்பு. பணம் ஒரு ஆளை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பதை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்.

    இசை

    கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஜூபினின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    செல்வம் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக அமைந்து இருக்கிறது.

    படத்தொகுப்பு

    ராஜேஷ் குமார் படத்தொகுப்பு ஓகே.

    புரொடக்‌ஷன்

    எஸ்ஆர் பிலிம் நிறுவனம் 'இ-மெயில்' திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×