search icon
என் மலர்tooltip icon
    < Back
    Bade Miyan Chote Miyan
    Bade Miyan Chote Miyan

    படே மியான் சோட்டே மியான்

    இயக்குனர்: அலி அப்பாஸ் ஜாபர்
    இசை:விஷால் மிஸ்ரா
    வெளியீட்டு தேதி:2024-04-11
    Points:736

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை95122106
    Point42029818
    கரு

    மிகப்பெரிய பவர்ஃபுல்லான ஆயுதத்தை வில்லனிடம் இருந்து மீட்டெடுக்க இந்திய நாட்டுக்காக போராடும் 2 வீரர்களைப் பற்றிய கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ரா {RAW} ஏஜென்ட்டாக பணி புரிகிறார்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்களை சஸ்பெண்ட் செய்கின்றனர்.

    இந்தியன் ஆர்மி ஒரு மிகப்பெரிய பவர்ஃபுல்லான ஆயுதத்தை உருவாக்குகிறது. அதை இந்தியன் ஆர்மி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் போது முகமூடி போட்ட ஒருவன் அதை திருடிவிட்டு செல்கிறான். இதனால் இந்தியன் ஆர்மி ஸ்தம்பித்து நிற்கின்றனர். அடுத்து அவர்கள் என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கும் பொழுது, அந்த ஆயுதத்தை முகமூடி போட்டவனிடம் இருந்து கைப்பற்ற சஸ்பெண்டான நம் இரு கதாநாயகர்களை அணுகுகிறார்கள்.

    அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டார்களா? முகமூடி அணிந்த நபர் யார்? அந்த அச்சுறுத்தலான ஆயூதம் என்ன? அதை மீட்டார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    நடிகர்கள்

    அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். டைகர் ஷெராப் வழக்கம் போல் பறந்து பறந்து ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து இருக்கிறார். அக்‌ஷய் குமார் அவரால் என்ன செய்ய இயலுமோ அதை சிறப்பாக செய்துள்ளார். பிரித்விராஜ் சுவாரசியமான நெகடிவ் ஷேட் கதாப்பாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்.

    ஆர்மி நண்பர்களாக வரும் சோனக்‌ஷி சின்ஹா, மனுஷி சிலார், அலயா அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

    இயக்கம்

    படத்தின் இயக்குனர் அலி அபாஸ் இதற்கு முன் பல ஆக்‌ஷன் படங்களை எடுத்துள்ளார் என்பதற்காகவே இதில் முழுவதும் ஆக்‌ஷன் ஆக்‌ஷன் என அக்‌ஷய் குமார், டைகர் ஷெராப் நடிகர்களை வைத்து மிரட்டி இருக்கிறார். அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்டிரி ஒர்க்கவுட் ஆகியுள்ளது.

    இயக்குனர் படத்தின் நீளத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம். இரண்டு மணி நேர படமாக இருந்து இருந்தால் இன்னும் மக்களால் ரசிக்க பட்டிருக்கும். படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் இயக்குனர். படத்தில் முகமூடி கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பு மிக சுவாரசியமாக பொறுந்தி இருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் படத்தை இயக்கி இருக்கிறார். நீங்கள் ஒரு ஆக்‌ஷன் பட விரும்பி என்றால் இந்தப் படம் உங்களுக்கானது.

    படம் காண வந்தோமா இல்லை போர் களத்திற்கு வந்தோமா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சண்டை காட்சிகள் நிறைந்து இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    மார்சின் லஸ்காவிக் ஹாலிவுட் தரத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டை காட்சிகள் மிக நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் எடுத்துள்ளார்.

    படத்தொகுப்பு

    படத்தில் ஸ்டீவன் பர்னார்ட் - இன் படத்தொகுப்பு கூடுதல் பலம். திரைக்கதை விறுவிறுப்பாக செல்ல அவரின் படத்தொகுப்பு முக்கிய பங்கை வகிக்கிறது.

    இசை

    விஷால் மிஷ்ரா இசை கேட்கும் ரகம். பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறது.

    தயாரிப்பு

    ஹிமான்ஷு கிஷான் மெஹரா மற்றும் அலி அபாஸ் ஜாபர் இணைந்து இப்படத்தை அதிக பொருட் செலவில் தயாரித்துள்ளனர்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×