search icon
என் மலர்tooltip icon
    < Back
    800
    800

    800

    இயக்குனர்: எம்.எஸ். ஸ்ரீபதி
    எடிட்டர்:பிரவீன் கே.எல்
    ஒளிப்பதிவாளர்:ஆர்.டி.ராஜசேகர்
    இசை:ஜிப்ரான்
    வெளியீட்டு தேதி:2023-10-06
    Points:835

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை10310680
    Point35342161
    கரு

    இலங்கை அணியின் சுலர் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சிலர் தோட்ட வேலைக்காக சென்றிருக்கிறார்கள். அப்படி சென்றவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் முத்தையா முரளிதரன். இந்தியாவில் சென்றவர்களுக்கு இலங்கையில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    இப்படி இருக்கும் பட்சத்தில் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட முத்தையா முரளிதரன் எப்படி இலங்கை அணியில் சேர்ந்தார். கிரிக்கெட் அணியில் உள்ள பிரச்சனை மற்றும் இலங்கையில் உள்ள அரசியல் ஆகியவற்றை எப்படி கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையாளராக மாறினார் என்பதை இப்படத்தின் கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மதுர் மிட்டல் முடிந்த வரை முத்தையா முரளிதரனாக நடிக்க முயற்சித்துள்ளார். அவரது உடல் மொழி, முக வெளிப்பாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.

    நாயகியாக வரும் மகிமா நம்பியார் சிறிது நேரம் மட்டுமே வந்து மனதில் நிற்கிறார். நாசர், ஹரி கிருஷ்ணனின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நரேன், திரையில் வரும் போது விசில் பறக்கிறது.

    இயக்கம்

    படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை முடிந்த வரை சினிமா படமாக்கி இருக்கிறார். பலருக்கும் தெரியாத முத்தையா முரளிதரன் கடந்து வந்த பாதையை அழகாக சொல்லி இருக்கிறார். இலங்கை அணியில் அவர் சேர்வதற்கு ஏற்பட்ட பிரச்சனை, சேர்ந்த பிறகு விளையாட்டில் உள்ள அரசியல், பந்தை எரிகிறார் என்று புகார் வந்தவுடன் அவர் எதிர் கொண்ட சவால், போர் பிரச்சனையில் இருக்கும் போது அவரின் மனநிலை என திரைக்கதையை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்.

    இசை

    ஜிப்ரானின் இசை படத்திற்கு பெரிய பலம்.

    ஒளிப்பதிவு

    ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஏற்றார் போல் படம் பிடித்து இருக்கிறது.

    படத்தொகுப்பு

    பிரவீன் கே.எல். படத்தொகுப்பு நேர்த்தி.

    காஸ்டியூம்

    பூர்த்தி பிரவின் மற்றும் விபின் பி.ஆர். காஸ்டியூம் டிசைன் சிறப்பு.

    புரொடக்‌ஷன்

    மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘800’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×