என் மலர்
உத்தரப் பிரதேசம்
- சேதன் குமார் என்பருக்கு பாக்கி (12), பிராச்சி (14), விஷிகா (16) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
- மூன்று பெரும் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் கேமிங் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் ஆன்லைன் கேம் விளையாடக்கூடாது என பெற்றோர் கண்டித்ததால் 3 சகோதரிகள் 9 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத்தில் சேதன் குமார் என்பருக்கு பாக்கி (12), பிராச்சி (14), விஷிகா (16) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூன்று பெரும் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் கேமிங் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.
இந்நிலையில், ஆன்லைன் கேமிங் விளையாடுவதை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனை மனா வருத்தம் அடைந்த 3 சகோதரிகளும் 9 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒருநாள் சிறுவனின் அத்தை வீட்டிற்கு வந்து நகை அலமாரியை திறந்து பார்த்துள்ளார்.
- அலமாரி காலியாக இருந்ததை தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்ததில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்து, கடந்த 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பதிவானது.
அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக சரிந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், 14 வயது சிறுவன் ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி மோமோஸ் சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் மோமோஸ் மீது தீரா காதல் கொண்ட சிறுவனிடம் வீட்டில் உள்ள நகைகளை திருடி கொண்டுவந்து கொடுத்தால் மோமோஸ் வாங்கி தருவதாக மோமோஸ் கடைக்காரர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த சிறுவன் மெல்ல மெல்ல தனது வீட்டில் உள்ள நகைகளை திருடி அவர்க்ளிடம் கொடுத்து மோமோஸ் சாப்பிட்டு வந்துள்ளான்.
ஒருநாள் சிறுவனின் அத்தை வீட்டிற்கு வந்து நகை அலமாரியை திறந்து பார்த்துள்ளார். அப்போது அலமாரி காலியாக இருந்ததை தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்ததில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிறுவனின் தந்தை போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.
- அவர்கள் கை கால்களைப் பிடித்துக் கொள்ள, ஜோதி அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
- மஃப்லரைப் பயன்படுத்தி அவரது உடலை ஜன்னல் கம்பியில் கட்டித் தொங்கவிட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் யாதவ் (33). இவர் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தார்.
இவர் ஜோதி என்ற பெண்ணை கடந்த 9 வருடங்களாக காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் பின் ஜோதிக்கும் ஜிதேந்திரனுக்கும் இடையே அடிக்கடி பணப் பிரச்சினை காரணமாகத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
ஜனவரி 26 அன்று ஏற்பட்ட தகராறின் போது, ஜோதி தனது பெற்றோர் மற்றும் சகோதரரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அவர்கள் ஜிதேந்திரனின் கை கால்களைப் பிடித்துக் கொள்ள, ஜோதி ஆவேசத்தில் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
ஜிதேந்திரன் இறந்தவுடன், இது தற்கொலை என்று நம்ப வைப்பதற்காக, ஒரு மஃப்லரைப் பயன்படுத்தி அவரது உடலை ஜன்னல் கம்பியில் கட்டித் தொங்கவிட்டுள்ளனர்.
பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி நாடகமாடியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து நடத்திய விசாரணையில் ஜோதி உண்மையை ஒப்புக்கொண்டார். ஜோதி மற்றும் அவரது பெற்றோரைக் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜோதியின் சகோதரர் தீபக்கைத் தேடி வருகின்றனர்.
- மேம்பாலம் மேலே ஏறி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
- இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினர் சமூகவலைத்தளத்தில் லைக்குகளை அள்ளும் ஆசையில் சாகச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதில் சில சமயம் உயிருக்கு ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
அவ்வகையில் உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் மேலே ஏறி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
மேம்பாலத்தின் மேலே கான்க்ரீட் Slabs மீது ஏறி நடனமாடியபோது, Slabs சரிந்து முகமது ஃபைசான் (22) என்ற இளைஞர் தலை மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- உறவினருடன் இளம் பெண்ணுக்கு தொடர்பு ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளார்.
- தகாத உறவை கண்டித்ததால், கணவனை தீர்த்துக்கட்டினார் மனைவி.
உத்தர பிரதேச மாநிலம் பத்பூரா கிராமத்தைச் சேர்ந்தவர் பல்ராம் (வயது 30). இவரது மனைவி பூஜா (25). பூஜாவுக்கும் அவருடைய மருமகன் ஆதேஷ்-க்கும் {nephew (வயது 22)} இடையில் தகாத உறவு இருந்துள்ளது. இது பல்ராமுக்கு தெரியவந்துள்ளது. அவர் இருவரையும் கண்டித்துள்ளார்.
இதனால் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மருமகன் உடன் சேர்ந்து கொலை செய்ய முடிவு செய்துள்ளார் பூஜா. சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவனின் காலை மருமகன் ஆதேஷ் பிடிக்க, பூஜா மார்பில் ஏறி உட்கார்ந்து கூர்மையாக அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பல்ராம் கழுத்து அறுக்கப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்த நிலையில், அவரது சகோதரர் தனது அண்ணன் கொலையில் சந்தேகம் உள்ளது. அண்ணிக்கும், உறவினருக்கும் இடையில் தகாத உறவு இருந்தது. இதனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் அளித்திருந்தார்.
புகார் அடிப்படையில் போலீசார் பூஜாவிடம் நடத்திய விசாரணையில் அவர், தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- இரு மனைவிகளும் கணவர் மீது முழு உரிமை கோரி தினமும் சண்டையிட்டு வந்துள்ளனர்.
- காவல்துறையினர் இந்தப் பிரச்சினையை தீர்க்கும்படி கிராமப் பெரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
உத்தரப் பிரதேசதில் இரண்டு மனைவிகள் ஒரு கணவரை பிரித்துக்கொள்ள பஞ்சாயத்தில் வினோத தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராம்பூர் மாவட்டத்தில் அசிம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாக்லியா அகில் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.
ஒரு திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது, மற்றொன்று காதல் திருமணம். இரு மனைவிகளும் கணவன் மீது முழு உரிமை கோரி தினமும் சண்டையிட்டு வந்துள்ளனர்.
இந்தச் சண்டை முற்றி அசிம் நகர் காவல் நிலையத்திற்குச் சென்றது. காவல்துறையினர் இந்தப் பிரச்சினையை தீர்க்கும்படி கிராமப் பெரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடந்த பஞ்சாயத்தில், கணவரை இரு மனைவிகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு டைம் டேபிள் போடப்பட்டது.
அதன்படி, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய வாரத்தின் முதல் மூன்று நாட்கள் முதல் மனைவியுடன் இருக்க வேண்டும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய அடுத்த மூன்று நாட்கள் கணவன் இரண்டாவது மனைவியுடன் இருக்க வேண்டும்.
வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை கணவன் தனது விருப்பப்படி இருவரில் யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம்.
இந்த தீர்ப்பை கணவர் மற்றும் இரண்டு மனைவிகளும் ஏற்றுக்கொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த வினோத ஒப்பந்தம் அந்தப் பகுதி முழுவதும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
- இரண்டாவது மாடியில் இருந்த அந்த ஜோடி அங்கிருந்த ஜன்னல் வழியாக திடீரென கீழே குதித்தனர்.
- தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் இந்துத்துவா கும்பலின் அச்சறுத்தலால் பயந்துபோன ஒரு இளம் காதல் ஜோடி மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாஜஹான்பூரில் நேற்று ஒரு pizza கடை உணவகத்தின் இரண்டாவது மாடியில் அந்த இளைஞரும் இளம்பெண்ணும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு இந்துத்துவா கும்பலை சேர்ந்தவர்கள் அந்த ஜோடியைச் சூழ்ந்துகொண்டு கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர்.
அவர்கள் தங்களைத் தாக்குவார்களோ என்ற பயத்தில், இரண்டாவது மாடியில் இருந்த அந்த ஜோடி அங்கிருந்த ஜன்னல் வழியாக திடீரென கீழே குதித்தனர்.
கீழே விழுந்ததில் அந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
- பெண் ஒருவரை காதலித்து வந்ததால் நீட் தேர்வில் வென்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் மட்டுமே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும்
- சூரஜ்க்கு சிகிச்சை முடிந்ததும் அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
உத்தரப் மாநிலம் ஜான்பூரை சேர்ந்த 20 வயதான சூரஜ் பாஸ்கர் என்ற மாணவர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்காக படித்து வந்தார்.
ஏற்கனவே 2 முறை நீட் தேர்வில் தோற்ற அவர் அடுத்த முறை எப்படியும் வென்று விட வேண்டும் என தீவிரமாக இருந்துள்ளார்.
சூரஜ், பெண் ஒருவரை காதலித்து வந்ததால் நீட் தேர்வில் வென்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் மட்டுமே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிர்பந்தத்திலும் இருந்துள்ளார்.
எனவே நீட் தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண் குறைவாக இருந்தாலும், மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு இருந்தால் எளிதாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்று அவர் நினைத்துள்ளார்.
எனவே அவர் தனது ஒரு காலில் உள்ள 4 விரகலை அவரே துண்டித்துள்ளார். வலிக்காமல் இருக்க அனஸ்தீசியா மருந்து செலுத்திக்கொண்டு இந்த காரியத்தை அவர் செய்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரவு தன்னை யாரோ தாக்கியதில் அவ்வாறு ஆனதாக கூறியுள்ளார். இந்த விஷயம் காவல்துறை கவனத்துக்கு செல்லவே, அவர்கள் சூரஜ் உடைய போனை ஆராய்ந்ததில் அவருக்கு காதலி இருப்பதை அறிந்து அவரை தொடர்பு கொண்டுள்ளனர். இறுதியில் விசாரணையில் உண்மை வெளிவந்தது.
சூரஜ்க்கு சிகிச்சை முடிந்ததும் அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கின்றன.
- தை அமாவாசைக்குப்பிறகு வரும் ‘வசந்த பஞ்சமி’ நாளில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
பிரயாக்ராஜ்:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா மேளா நடைபெற்று வருகிறது. நேற்று 'வசந்த பஞ்சமி' தினத்தையொட்டி அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கின்றன. இந்த சங்கமம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் கும்பமேளா போன்ற புனித யாத்திரைகளின் மையமாகும் திகழ்கிறது.
இங்கு ஆண்டுக்கொருமுறை நிகழும் 'மகாமேளா' கடந்த 3-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. அங்கு இதுவரை லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று 'வசந்த பஞ்சமி'யையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பிரயாக்ராஜுக்கு பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
தை அமாவாசைக்குப்பிறகு வரும் 'வசந்த பஞ்சமி' நாளில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதன்படி நேற்று லட்சக்கணக்காணோர் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். காலை 8 மணி வரையில் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பிரயாக்ராஜ் மேளா ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணி வரை சுமார் 1.04 கோடி பேர் புனித நீராடினர்'' என்றார்.
பிரயாக்ராஜில் மட்டுமல்லாது வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், ராமர் ஜென்ம பூமியான அயோத்தியிலும் திரளான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
- இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காஜலின் 3 சகோதரர்கள் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- அர்மான் மற்றும் தங்கை காஜலின் கைகால்களைக் கட்டி வைத்து, அவர்களை வெட்டிக்கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் மதம் கடந்து காதலித்ததற்காக முஸ்லிம் இளைஞர் மற்றும் இந்து காதலி கைகால்கள் கட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த அர்மான் (27) சவுதி அரேபியாவில் வேலை பார்த்துவிட்டு 3 மாதங்களுக்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரும் அதே ஊரை சேர்ந்த காஜல் (22) என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காஜலின் 3 சகோதரர்கள் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 3 நாட்களாக இருவரையும் காணவில்லை என்று அர்மானின் தந்தை புகார் அளித்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் காஜலின் சகோதரர்களைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கொலையை ஒப்புக்கொண்டனர்.
அர்மான் மற்றும் தங்கை காஜலின் கைகால்களைக் கட்டி வைத்து, அவர்களை வெட்டிக்கொலை செய்ததாகவும், உடல்களை நதிக்கரையில் குழிதோண்டிப் புதைத்துள்ளதாகவும்அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
அவர்கள் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து போலீசார் புதன்கிழமை மாலை, உடல்களைத் தோண்டி எடுத்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
காஜலின் 3 சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் மத ரீதியான பதற்றம் ஏற்படாமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- 6 மாதங்களுக்கு முன்பு விபின் குமார் என்பவருக்கும் இஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது
- இஷா சமைத்த முட்டை குழம்பு நன்றாக இல்லை என்று விபின் குறை சொல்லியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் தான் சமைத்த முட்டை குழம்பை `சுவையாக இல்லை' என்று கூறியதால், கணவனின் நாக்கை கடித்து மனைவி துண்டாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 மாதங்களுக்கு முன்பு விபின் குமார் என்பவருக்கும் இஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் அவ்வப்போது சண்டை வந்த நிலையில், இஷா சமைத்த முட்டை குழம்பு நன்றாக இல்லை என்று விபின் குறை சொல்லியுள்ளார்.
இதனை ஆத்திரமடைந்த இஷா , கணவனின் நாக்கை கடித்து துண்டாக்கியுள்ளார். நாக்கு 2.5 செ.மீ அளவுக்கு துண்டிக்கப்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சை செய்தாலும் மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என மருத்துவர்கள் கைவிரித்தனர். இதனால் விபின் குமரன் பேசமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து இஷாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சந்தேகமடைந்த அண்டை வீட்டார் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
- ஐந்து பேரின் தலைகளிலும் மிக நெருக்கமான தூரத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களின் தலைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள சர்சாவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கௌஷிக் விஹார் காலனியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று காலை அந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த அண்டை வீட்டார் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, நில அளவையாளராக பணியாற்றி வந்த அசோக் ரதி (40), அவரது மனைவி அஜந்தா (37), தாய் வித்யாவதி (70) மற்றும் மகன்கள் கார்த்திக் (16), தேவ் (13) ஆகிய ஐந்து பேரும் ஒரே அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
ஐந்து பேரின் தலைகளிலும் மிக நெருக்கமான தூரத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து மூன்று கைத்துப்பாக்கிகளை போலீசார் மீட்டுள்ளனர்.
இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.






