என் மலர்
தெலுங்கானா
- ஷாத்நகரில் உள்ள கண்ணாடி தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
- பல தொழிலாளர்கள் கைகால்கள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், ஷாத்நகரில் உள்ள கண்ணாடி தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 15 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தானது ஷாட்நகரில் உள்ள தொழிற்சாலையில் கம்ப்ரசர் டேங்க் மாலை 4.30 மணியளவில் வெடித்து சிதறியதாக போலீசார் தெரிவித்தனர்.
தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. வெடிவிபத்தின் தாக்கத்தால் பல தொழிலாளர்கள் கைகால்கள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்துக் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
At least five people were killed and 15 workers injured in a blast at a glass factory at Shadnagar, Rangareddy district, on Friday. pic.twitter.com/RHdepYszdD
— The Siasat Daily (@TheSiasatDaily) June 28, 2024
- மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- அஜ்மிரி பேகம் சமையலறைக்கு சென்று சமையல் வேலையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அத்தாபூரை சேர்ந்தவர் பர்சானா. இவரது மருமகள் அஜ்மிரி பேகம் (வயது 28).
மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை பர்சானா தனது மருமகளிடம் டீ போட்டு தரும்படி கேட்டார். அதற்கு அவரது மருமகள் டீ போட்டு தர முடியாது என மறுப்பு தெரிவித்தார். இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அஜ்மிரி பேகம் சமையலறைக்கு சென்று சமையல் வேலையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
தன்னுடன் அடிக்கடி சண்டையிடுவதால் ஆத்திரத்தில் இருந்த பர்சானா சமையலறைக்கு சென்று துப்பட்டாவால் மருமகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
இது குறித்து தகவலறிந்த அத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜ்மிரி பேகத்தின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பர்சானாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். டீ போட்டுக்கொடுக்க மறுத்த மருமகளை மாமியார் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இதை பைக்கில் வந்தவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
- அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் டிராபிக் போலீஸ் வாகனம் மற்றும் டிராபிக் போலீஸ் இருப்பதை பார்த்த 2 சக்கர வாகன ஓட்டி ஒருவர் தனது ஹெல்மெட்டை எடுத்து அவசரமாக தலையில் மாட்டுகிறார். பின்னர் பக்கத்தில் போன பின்புதான் அது உண்மையான போலீஸ் இல்லை போலீஸ் கட்அவுட் என்று தெரியவருகிறது.
இதை பைக்கில் வந்தவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாகன விபத்துக்கள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், அதை குறைப்பதற்காக போக்குவரத்துத்துறை மேற்கொண்டுள்ள இந்த வித்தியாசமான முயற்சியை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
- பல்வேறு வடிவங்களில் டம்ளர்களை அடுக்கி வைத்துள்ளனர். இந்த டம்ளர்களை எடுத்து குழாய்களைத் திறந்தால் பீர் கொட்டுகிறது.
- குழாய்களில் பிடித்து பீர் குடிக்கும் வசதியை கேள்விப்பட்ட குடிமகன்கள் தற்போது மதுபான கூடங்களில் குவிந்து வருகின்றனர்.
காய்ச்சிய உடனே குடிக்கும் சரக்கில் தான் மது போதை கிக் அதிகம் என மது பிரியர்கள் நினைக்கிறார்கள். மது பிரியர்களின் இந்த தீராத குறையை தீர்க்க ஐதராபாத்தில் குழாய்களில் பிடித்து பீர் குடிக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள மதுபான கூடங்களில் டேப் ரூம் என்ற பெயரில் புதிய பிரிவு திறக்கப்பட்டுள்ளன.
இந்த மதுபான கூடங்களில் நண்பர்கள், கூட்டாளிகள், தோழிகள் என யாராக இருந்தாலும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த டேப் ரூம் மதுபான கூடம் பீர் பிரியர்களுக்கு ஒரு தனித்துவமான புத்துணர்ச்சியை ஊட்டும் அனுபவத்தை வழங்குகிறது. அதாவது வரிசையாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே பல்வேறு வடிவங்களில் டம்ளர்களை அடுக்கி வைத்துள்ளனர். இந்த டம்ளர்களை எடுத்து குழாய்களைத் திறந்தால் பீர் கொட்டுகிறது. அதனை பிடித்து குடிமகன்கள் அப்படியே குடிக்கலாம்.
விட்டில், கோதுமை, ஜேம்ஸ் ப்ளாண்ட், அங்கிள் டங்கிள் உள்ளிட்ட உயர் ரக பீர் வகைகள் இந்த குழாய்களில் வருகின்றன. எந்த குழாயில் எந்த வகையான பீர் வரும் என்ற பெயர் குழாய்களுக்கு மேலே அச்சிடப்பட்டுள்ளன.
இதிலும் தனித்துவம் என்னவென்றால் இந்த குழாய்களில் வரும் பீர் ஆலைகளில் இருந்து காய்ச்சிய உடனே மதுபான கடைக்கு கொண்டுவரப்பட்டு அப்படியே குழாய் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் காய்ச்சிய உடனே பீர் குடிக்கும் அனுபவம் கிடைக்கிறது. குழாய்களில் பிடித்து பீர் குடிக்கும் வசதியை கேள்விப்பட்ட குடிமகன்கள் தற்போது மதுபான கூடங்களில் குவிந்து வருகின்றனர். பல்வேறு விதமான பீர்களை அவர்களே பிடித்து ருசித்து மகிழ்கின்றனர். இந்த புதிய திட்டத்தால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மதுபான கூட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்த்தி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.
- உமா ஹார்த்தி தனது தந்தை பணிபுரியும் தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வந்துள்ளார்.
தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் துணை இயக்குநராகப் பணியாற்றும் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்த்தி ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகி பயிற்சி பெற்று வரும் உமா ஹார்த்தி தனது தந்தை பணிபுரியும் தெலுங்கானா மாநில காவல்துறை அகாடமியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வந்துள்ளார்.
அப்போது ஐஏஎஸ் உமா ஹார்த்திக்கு அவரது தந்தை வெங்கடேஸ்வரலு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
- வாக்குவாதம் முற்றி இரு பிரிவினர் கடுமையாக மோதிக் கொண்டனர்.
- பிரச்சினை உள்ள பகுதிகளில் வன்முறை தலைதூக்குவதை தவிர்க்க முடியும்.
இஸ்லாமியர்கள் சார்பில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தெலுங்கானா மாநிலத்தின் மெடாக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மாடுகள் கொண்டு செல்லப்படுவதாக இரு சமூகத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு பிரிவினர் கடுமையாக மோதிக் கொண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் ஒரே இடத்தில் நான்கிற்கும் அதிகமானோர் ஒன்றுகூட அனுமதி இல்லை. இதன் மூலம் பிரச்சினை உள்ள பகுதிகளில் வன்முறை தலைதூக்குவதை தவிர்க்க முடியும்.
மோதல் தொடர்பாக ஏற்கனவே ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாக இரு பிரிவினரை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை அடுத்து, அந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
"மோதல் ஏற்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அந்த பகுதியை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறோம்," என்று மெடாக் பகுதிக்கான காவல் துறை கண்காணிப்பாளர் பி பால சுவாமி தெரிவித்துள்ளார்.
- தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் விரட்டி விரட்டி குத்திக் கொன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
- பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த சையத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் விரட்டி விரட்டி குத்திக் கொன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பாலாபபூர் பகுதியில் உள்ள ராயல் காலனியில் நேற்று [ஜூன் 13] இரவு நடந்த இந்த கொடூர சம்பவத்தில் சையத் சமீர் என்ற அந்த 28 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பாபேட் பகுதியைச் சேர்ந்த அலங்காரத் தொழிலாளர் சையத் நேற்று இரவு வேலை முடித்து வீடு திரும்பும்போது மர்ம நபர்கள் அவரைகொலை வெறியுடன் துரத்தியுள்ளனர். சுற்றிலும் அடுக்குமாடி கட்டிடங்கள் நிறைந்த ராயல் காலனி பகுதியில் சையதை துரத்திப் பிடித்த அவர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
அவர்களில் ஒருவன் தனது கையில் வைத்திருந்த கத்தியால் சையதை குத்தினான். சையத் சரிந்து கீழே விழுந்த நிலையிலும் அவரை கண்மூடிதனமாக அவர்கள் உதைத்ததை அப்பகுதியில் இருந்தவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
சையத்தை அவர்கள் தாக்கியபோது அருகே பலர் நடந்து சென்று கொண்டிருந்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த சையத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் மர்ம நபர்களை வீடியோ காட்சிகளின் உதவியுடன் தீவிரமாக தேடிவருகின்றனர்.
- ஐதராபாத்தில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானங்களை இயக்கியது.
- இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வேறு ஒரு விமானத்தில் அயோத்தி செல்ல வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு, அயோத்திக்கு முக்கிய நகரங்களில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விமானங்களை இயக்கத் தொடங்கியது. ஐதராபாத்தில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானங்களை இயக்கியது. இந்த இடைநில்லா விமானங்கள், வாரத்தில் மூன்று முறை இயக்கப்பட்டன.
இந்நிலையில், ஐதராபாத்- அயோத்தி நேரடி விமான சேவையை கடந்த 1-ம் தேதியில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களில் நேரடி விமான சேவை முடிவுக்கு வந்துள்ளது. டிக்கெட் விற்பனை குறைந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
தென்னிந்தியாவின் பரபரப்பான தொழில்நுட்ப மையமான ஹைதராபாத்தை வடக்கு மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள மத மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நகரமான அயோத்தியுடன் இணைக்கும் விமான சேவையை நிறுவனம் தொடங்கிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த பாதையில் செயல்பாடுகளை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஐதராபாத்தில் இருந்து அயோத்தி செல்ல வேண்டுமானால், ஐதராபாத்தில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வேறு ஒரு விமானத்தில் அயோத்தி செல்ல வேண்டும்.
இதற்கு முன்பு, சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் இருந்து அயோத்திக்கான நேரடி விமான சேவைகளையும் ஸ்பைஸ்ஜெட் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைக்கு, அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து மட்டும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நேரடி விமானங்கள் செல்கின்றன.
- குளத்தில் இருந்த நபர் நெல்லூரை சேர்ந்த கூலி தொழிலாளி என்று தெரியவந்தது.
- களைப்பாக இருந்ததால் குளிர்ந்த நீரில் ஓய்வெடுக்க சென்றேன்.
தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டா பகுதியில் உள்ள ஒரு குளத்தில் நீண்ட நேரமாக ஒரு ஆணின் உடல் எவ்வித அசைவும் இல்லாமல் இருந்ததால் அவர் இறந்து விட்டதாக சந்தேகப்பட்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அப்பகுதிக்கு வந்த காவலர் அந்த ஆணின் உடலை குளத்தில் இருந்து இழுக்கும் பொழுது அந்த ஆண் உயிருடன் எழுந்து வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குளத்தில் இருந்த நபர் நெல்லூரில் உள்ள காவாலி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி என்று தெரியவந்தது.
போலீசாரிடம் பேசிய அந்த நபர், "நான் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கிரானைட் குவாரியில் வேலை செய்து வருகிறேன். எனக்கு சம்பளம் கொடுத்தாலும், என் உழைப்பை அவர்கள் துஷ்பிரயோகம் செய்கின்றனர். இவ்வளவு வெயிலில் ஒருவரால் எப்படி நீண்ட நேரத்திற்கு வேலை செய்ய முடியும். களைப்பாக இருந்ததால் குளிர்ந்த நீரில் ஓய்வெடுக்க சென்றேன்" என்று தெரிவித்தார்.
- மேன்ஷன் ஹவுஸ் ஆப்பிள் பிராந்தி என்ற பெயரில் அறிமுகம்.
- ஆப்பிள் சுவை மது பிரியர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
திருப்பதி:
பச்சை ஆப்பிள் சுவை கொண்ட பிராந்தியை தெலுங்கானாவில் அறிமுகம் செய்து உள்ளனர். மேன்ஷன் ஹவுஸ் ஆப்பிள் பிராந்தி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிராந்தி மதுப்பிரியார்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து பிராந்தி உற்பத்தி நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கூறுகையில், இந்த ஆண்டில் எங்கள் மேன்சன் ஹவுஸ் பச்சை ஆப்பிள் பிளவர் பிராந்தி வகை எங்களது நிறுவனத்தின் முதல் கண்டுபிடிப்பு ஆகும். ஏற்கனவே எங்களது நிறுவனம் பல்வேறு வகையான சுவைகளில் பிராந்தி அறிமுகம் செய்துள்ளது.
அந்த வகை மதுபானங்களை காட்டிலும் ஆப்பிள் சுவை மது பிரியர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.
- ராமோஜி ராவின் மறைவுக்கு தெலுங்கானா பாஜக தலைவரும், அக்கட்சியின் எம்பியுமான ஜி கிஷன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டி, ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமேஜி ராவ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.
மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.
ராமோஜி ராவ் ஒரு பெரிய வணிகப் புகழ் பெற்றவர். ஊடகங்களுடன், ராமோஜி ராவ் பல வணிகங்களில் பணியாற்றியுள்ளார். இன்று மார்கதர்ஷி சிட்ஃபண்ட்ஸ், பிரியா ஃபுட்ஸ் போன்ற தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பலருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகின்றன. மேலும், ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவியதன் மூலம் ஐதராபாத் மற்றும் திரைப்படத் துறையின் வளர்ச்சியில் ராமோஜி ராவ் ஒரு பகுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமோஜி ராவின் மறைவுக்கு தெலுங்கானா பாஜக தலைவரும், அக்கட்சியின் எம்பியுமான ஜி கிஷன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Telangana BJP chief and party MP G Kishan Reddy condoles the demise of Eenadu & Ramoji Film City founder Ramoji Rao. pic.twitter.com/LvwfF1rBE7
— ANI (@ANI) June 8, 2024
- குடோனில் இருந்த பல பொருட்கள் காலாவதியாகி இருப்பது கண்டறியப்பட்டது.
- ராகி மாவு மற்றும் துவரம் பருப்பை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சொமோட்டோவிற்கு சொந்தமான பிளிங்கிட் குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். குடோனில் இருந்த பல பொருட்கள் காலாவதியாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக தெலுங்கானா மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் கூறுகையில்,
குடோனில் இருந்த பல பொருட்கள் காலாவதியாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குடோனில் விதிமீறல் நடந்து இருப்பது அதிகாரிகளின் சோதனையில் கண்டறியப்பட்டது.
ராகி மாவு மற்றும் துவரம் பருப்பை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
உணவு கையாளுபவர்கள் தலைக்கவசங்கள், கையுறைகள் மற்றும் கவச உடை அணியாமல் இருந்தனர். உணவு கையாளுவோரின் மருத்துவ தகுதிச் சான்றிதழ்கள் கிடைக்கவில்லை.
உணவு பொருட்களுடன் அழகுசாதனப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ஹோல் ஃபார்ம் பிராண்டின் உற்பத்தியாளர்களில் ஒன்றான கன்குரூன்ஸ் டிரேட் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் உரிமம் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டத்தின்படி இல்லை.
நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.






