என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்.
- கழகத்தில் புதிதாக இணைந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் டாக்டர் K.G. அருண்ராஜ், கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் Propananda & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.
இவர், எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின்படி கழகக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் புதிதாக இணைந்தவர்கள் பற்றிய விவரம்:-
1. திருமதி R. ராஜலட்சுமி, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்
2. S.டேவிட் செல்வன், முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்
3. டாக்டர் A. ஸ்ரீதரன், திராவிட முற்போக்கு மக்கள் கட்சி நிறுவனர், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்
4. டாக்டர் N. மரிய வில்சன், நிர்வாக அறங்காவலர், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை, தலைவர், ஜேப்பியார் இன்ஸ்டிப்பூட் ஆஃப் டெக்னாலஜி
5. சி.சுபாஷ், முன்னாள் நீதிபதி, தமிழ்நாடு மாநில ஜுடிசியல் சர்வீஸ், சென்னை.
கழகத்தில் புதிதாக இணைந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இவர்களுக்கும் கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+2
- வைகாசி விசாக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
- கடலில் புனித நீராடும் பக்தர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய விழாவான வைகாசி விசாகத் திருவிழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் ஆண்டு முழுவதும் சாமி தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று கோவிலில் குவிந்தனர்.

அவர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விசாகத்தை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடந்தது.மாலை 4 மணிக்கு சாயரட்ச தீபாராதனையும் தொடர்ந்து கோவில் சண்முக விலாசம் மண்டபத்தில் முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் வழங்கும் வைபவமும் நடக்கிறது.
வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராஜபாளையம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், பால் குடம் எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்தனர்.
அந்த வகையில் இன்று வைகாசி விசாக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். அவர்களின் அரோகரா கோஷம் விண் அதிர செய்தது.
சாமி தரிசனம் செய்ய வருகைதரும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பொது சுகாதார கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

கடலில் புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்புக்காக பைபர் படகுகளுடன் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். மேலும் கடலில் புனித நீராடும் பக்தர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர்.
பாதயாத்திரையாக தூத்துக்குடி மார்க்கமாக நேற்று காலை 8 மணியில் இருந்து நாளை மாலை 6 மணி வரை வரும் பக்தர்களுக்கு ஆறுமுகநேரி டி.சி.ட.பிள்யூ பஸ் நிறுத்தம் அருகில் கையில் அடையாள பட்டை அணிவிக்கப்படுகிறது. இந்த அடையாள பட்டை அணிவிக்கப்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் கோவிலுக்கு வந்து அவர்கள் தனியாக ஒதுக்கப்பட்ட தனி வரிசையில் சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான தனி வரிசை ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க அவர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் நேற்று காலை 6 மணியில் இருந்து நாளை மாலை 6 மணி வரை மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகத்தில் மூத்த குடிமக்களுக்கு கை பட்டை வழங்கப்படுகிறது.
கைப்பட்டை அணிந்த மூத்த குடிமக்கள் மட்டும் முதியோர்களுக்கான தனி வரிசையில் எளிதாக விரைவாக சென்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- சிறந்த முறையில் மக்கள் பணிகளை ஆற்றியவர் குணசேகரன்.
திருப்பூர்:
திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன்(வயது 58). இவர் அ.தி.மு.க.வின் மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளராக இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல் இன்று மதியம் 12 மணிக்கு திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரனின் மறைவு அ.தி.மு.க.வினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2001 முதல் 2006 வரை திருப்பூர் நகராட்சி கவுன்சிலராக இருந்த குணசேகரன், 2011 முதல் 2016 வரை திருப்பூர் மாநகராட்சி துணை மேயராக பதவி வகித்தார். 2016 முதல் 2021 வரை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார். தற்போது மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளராக பதவி வகித்து வந்தார். குணசேகரன் மறைவுக்கு அ.தி.மு.க., முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான குணசேகரன், உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
கழகத்தின் மீதும், கழகத்தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த அவர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப்பணிகளை ஆற்றி உள்ளார். சிறந்த முறையில் மக்கள் பணிகளை ஆற்றியவர். குணசேகரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
குணசேகரன் மறைவையடுத்து திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் வணிகர்கள் கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார், சி.மகேந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
- சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
- பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது.
பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமிகளைக் காக்க வேண்டிய காவலாளியே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது துளி கூட பயம் இல்லை என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளது.
இந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனரா? என்பதை காவல்துறையினர் தீர விசாரிக்க வேண்டும்.
தமிழ்நாடு டெல்லிக்கு Out Of Control-ஆக இருப்பதாக யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் பொம்மை முதல்வர் அவர்களே- உங்கள் ஆட்சியில் Out Of Control ஆக இருக்கும் பாலியல் "SIR"-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள்?
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு பணியில் இருந்த காவலராலேயே அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளதை ஏற்க முடியவில்லை.
- தைரியமாக மாணவி குற்றஞ்சாட்டியதால் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தாம்பரம் அருகே அரசு விடுதியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசு விடுதி காவலராலேயே நடந்த இந்த சம்பவத்தை ஏற்கவே முடியாது.
* இதுவரை காவலர் மேத்யூ மீது எந்த குற்றச்சாட்டும் பதிவாகவில்லை. இதுவே முதல்முறை.
* வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் குற்றச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
* பாதுகாப்பு பணியில் இருந்த காவலராலேயே அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளதை ஏற்க முடியவில்லை.
* விடுதி வார்டன் விடுப்பில் சென்றநிலையில் காவலாளி அத்துமீறலில் ஈடுபட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
* தைரியமாக மாணவி குற்றஞ்சாட்டியதால் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
* பெண்கள், பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஆண்கள் ஈடுபடுவதை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
* அன்னை சத்யா இல்லம் உள்ளிட்ட பெண்கள், பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பெண் காவலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
* அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் அனைத்து இல்லங்களிலும் பாதுகாப்பிற்கு பெண் காவலர்கள் நியமிக்கப்படுவர்.
* தாம்பரம் அருகே அரசு விடுதியில் மாணவியிடம் காவலாளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரையடுத்து அரசு புதிய முடிவு எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின் தி.மு.க.விலிருந்து விலகி த.வெ.க.வில் இணைகிறார்.
- ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் த.வெ.க.வில் இணைய உள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முன்னிலையில் முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள் அக்கட்சியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* திருவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின் தி.மு.க.விலிருந்து விலகி த.வெ.க.வில் இணைகிறார்.
* வால்பாறை முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் ஸ்ரீதரன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைகிறார்.
* ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் த.வெ.க.வில் இணைய உள்ளார்.
* நாகர்கோவிலை சேர்ந்த முன்னாள் மாஜிஸ்திரேட் சுபாஷும் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வி.சி.க.வில் இருந்து ஆதவ் அர்ஜுனா, அ.தி.மு.க.வில் இருந்து நிர்மல் குமார் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6,500 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் தலைமையில் துறைசார் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது
- நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை, வணிக வரி, பதிவுத்துறை, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துறைசார் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது.
முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் தலைமையில் துறைசார் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது.
நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை, வணிக வரி, பதிவுத்துறை, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சக்கரபாணி, பெரிய கருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
- அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று.
- தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
திருச்சி:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரீகம். 234 தொகுதிக்கும் இன்னும் 2 நாட்களில் கூட்டம் நடத்தப்பட்டு, பொறுப்பார்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை.
இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுப்பதை விட வாக்குறுதி தான் முக்கியம் என்று எடப்பாடி பழனிசாமி எங்களிடம் தெரிவித்துள்ளார். 2026-ல் தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து விஜய் கட்சியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, இந்தக் கேள்விக்கு விடையை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதற்கு அவர் தான் பதில் சொல்லவேண்டும்.
2026-ல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான். அப்போதுதான் தப்பு நடந்தால் ஒரு எதிர்க்கட்சியாக இருந்து சுட்டி காட்ட முடியும். கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை, 24 மணி நேரம் மது விற்பனை, கள்ள லாட்டரி விற்பனை, கனிமவளக் கொள்ளை அதிகமாக நடக்கிறது.
இதை முதல்வர் சரி செய்ய வேண்டும். குறிப்பாக தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வடக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணித்து விட்டார்கள்.
- சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 98.5% நிறைவேற்றி விட்டோம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அமித்ஷாவை பார்த்தால் எங்களுக்கு ஏன் ஷாக் அடிக்க வேண்டும். தி.மு.க.வை பார்த்து ஷாக் அடித்து தானே அமித்ஷா தமிழகம் வந்துள்ளார்.
* பிரதமர் எதற்காக 5 முறை தமிழகம் வர வேண்டும்.
* கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கையை திருப்பி அனுப்பியது ஏன்?
* தமிழ் குறித்து தமிழர்கள் குறித்தும் பேசும் மத்திய பா.ஜ.க. அரசு கீழடி ஆய்வை ஏற்க மறுப்பது ஏன்?
* வடக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணித்து விட்டார்கள்.
* இல்லாத சரஸ்வதி நதி, சமஸ்கிருதம் மொழிக்கு எதற்காக நிதி ஒதுக்கீடு.
* பா.ஜ.க.வின் இந்துமத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. அவர்களை பார்த்தால் எங்களுக்கு சிரிப்பாகத்தான் உள்ளது.
* நேரடி வரி வருவாய் மூலம் மத்திய அரசுக்கு 4 மடங்கு வருவாய் உயர்ந்துள்ளது.
* அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட வாக்குறுதி ஒன்றுதான் பாக்கி.
* பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஒரு திட்டம் உள்ளது.
* சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 98.5% நிறைவேற்றி விட்டோம்.
* மத்திய அரசு நிதி வழங்காத நிலையிலும் மாநில நிதியில் இருந்து வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அருவெறுப்பான, வஞ்சனம் நிறைந்த, மாநிலத்தை பிளவுப்படுத்தும் நோக்கத்துடன் அமித்ஷா பேசி உள்ளார்.
- அமித்ஷா வகிக்கும் பதவிக்கு அழகல்ல, அரசியல் சித்து விளையாட்டுகளை நிறுத்த வேண்டும்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து அப்பட்டமான பொய்களை அமித்ஷா பேசி உள்ளார்.
* தி.மு.க. அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமித்ஷா சுமத்தி உள்ளார்.
* அருவெறுப்பான, வஞ்சகம் நிறைந்த, மாநிலத்தை பிளவுப்படுத்தும் நோக்கத்துடன் அமித்ஷா பேசி உள்ளார்.
* தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டமிட்டு பேசி உள்ளார்.
* அமித்ஷாவின் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லது கிடையாது.
* அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் மதவாத பிளவை உண்டாக்கும் வகையில் அமித்ஷா பேச்சு உள்ளது.
* அமித்ஷா வகிக்கும் பதவிக்கு அழகல்ல, அரசியல் சித்து விளையாட்டுகளை நிறுத்த வேண்டும்.
* அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமாக பேசி உள்ள அமித்ஷாவின் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அணை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 64.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
- கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது.
சேலம்:
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் இந்த அணைகளில் இருந்து தமிழக காவிரியிலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மழையின் தீவிரத்தை பொறுத்து ஆற்றில் தண்ணீர் அதிகரித்தும், குறைந்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. அதே போல் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.16 அடியை எட்டியது. வழக்கமாக ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் தான் அணையில் இந்த அளவுக்கு தண்ணீர் இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் ஜூன் மாத தொடக்கத்திலேயே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் அணைக்கு இன்று காலை முதல் வினாடிக்கு 5 ஆயிரத்து 980 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 64.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 12-ந் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். இதனால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.






