த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக அருண்ராஜ் நியமனம் - விஜய் அறிவிப்பு

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். கழகத்தில் புதிதாக இணைந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக அருண்ராஜ் நியமனம் - விஜய் அறிவிப்பு
Published on

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் டாக்டர் K.G. அருண்ராஜ், கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் Propananda & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.

இவர், எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின்படி கழகக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் புதிதாக இணைந்தவர்கள் பற்றிய விவரம்:-

1. திருமதி R. ராஜலட்சுமி, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்

2. S.டேவிட் செல்வன், முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்

3. டாக்டர் A. ஸ்ரீதரன், திராவிட முற்போக்கு மக்கள் கட்சி நிறுவனர், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்

4. டாக்டர் N. மரிய வில்சன், நிர்வாக அறங்காவலர், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை, தலைவர், ஜேப்பியார் இன்ஸ்டிப்பூட் ஆஃப் டெக்னாலஜி

5. சி.சுபாஷ், முன்னாள் நீதிபதி, தமிழ்நாடு மாநில ஜுடிசியல் சர்வீஸ், சென்னை.

கழகத்தில் புதிதாக இணைந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இவர்களுக்கும் கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com