என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டது.
- 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரையில் ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் வெடிவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- நாளை காலை 9.30 மணிக்கு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று சேலம் புறப்பட்டார்.
ஈரோடு, சேலத்தில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்த விமானம் மூலம் கோவை புறப்பட்டார். கோவையில் இருந்து முதலமைச்சர் சாலைமார்க்கமாக பெருந்துறை செல்கிறார். ஈரோடு, சேலத்தில் கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.
இன்று மாலை 5 மணிக்கு சேலம்- ஈரோடு மாவட்ட எல்லையான பெரும்பள்ளம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கிருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் 'ரோடு ஷோ' வில் பங்கேற்கிறார். சாலையின் இருபுறமும் கூடியிருக்கும் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். அன்று இரவு மேட்டூரில் தங்குகிறார்.
நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலத்திற்கு வருகிறார். காலை 11 மணிக்கு சேலம் இரும்பாலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.
விழாவில் ரூ.1,500 கோடியில் நலத்திட்ட உதவிகள், கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரையாற்றுகிறார். சிறிது ஓய்வு எடுத்து விட்டு மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. இதன்பின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்தது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையாகிறது. இன்று தங்கம் விலை உயர்ந்ததும் மூலம் சவரன் மீண்டும் ரூ.72 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
10-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
09-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,640
08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
07-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
06-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
10-06-2025- ஒரு கிராம் ரூ.119
09-06-2025- ஒரு கிராம் ரூ.118
08-06-2025- ஒரு கிராம் ரூ.117
07-06-2025- ஒரு கிராம் ரூ.117
06-06-2025- ஒரு கிராம் ரூ.118
- தமிழகத்தில் ஏறக்குறைய 2750 சில்லறை விற்பனை கடைகள் மூலம் ’மது விற்பனை’ நடைபெறுகிறது.
- கள் உடம்புக்கு நல்லது என்றும் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பப்படுகிறது.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கள், சாராயம் அல்லது பீர், பிராந்தி உள்ளிட்ட மதுபானங்கள் எதுவாயினும் உடலுக்கும் உயிருக்கும் ஊறு விளைவிக்கக் கூடியது. தமிழகத்தின் தலைசிறந்த இலக்கிய மற்றும் தத்துவ நூல்கள் அனைத்தும் மதுவின் கொடுமையை எடுத்துரைத்துள்ளன. திருக்குறளில் 'கள் உண்ணாமை' குறித்து 10 குறள்கள் இயற்றப்பட்டுள்ளன. ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரத்தில் மது மற்றும் மாமிசம், கொலை, கொள்ளைக்கு எதிராகவே கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.
1937 முதல் 1971 வரை தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலிலிருந்தது. 1971 இல் தமிழகத்தின் மீண்டும் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. 1974 இல் மதுவிலக்கு மீண்டும் அமலுக்கு வந்தது. 1984க்கு பிறகு மீண்டும் அதிமுக, திமுக ஆட்சிகளில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு, மாநில அரசே மதுபான விற்பனையை நடத்துகிறது.
தமிழகத்தில் ஏறக்குறைய 2750 சில்லறை விற்பனை கடைகள் மூலம் 'மது விற்பனை' நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை மது விற்பனை செய்ய வேண்டும் என விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், சட்ட விரோதமாக அதிகாலை 6:00 மணி முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கப்படுகிறது; காலையில் வேலைக்குச் செல்வோர் குடிப்பதை அத்துறை அமைச்சரே நியாயப்படுத்துகிறார்.
தமிழ்நாட்டில் 60 லட்சம் பேர் மதுப் பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு பெருமளவு உயிரிழப்புகளுக்கு ஆளாகின்றனர். கட்டிடத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள் என அடிப்படை, நடுத்தர வர்க்கத்தினரும் தங்களது தினசரி வருமானத்தில் பெரும் பகுதியை டாஸ்மாக்கிலேயே தொலைத்து விடுகின்றனர். இதனால் பல குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
டாஸ்மாக் நிறுவனத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை, கள்ளத்தனமான விற்பனை என ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெறுகிறது. எனவே தமிழக மக்களின் நலன் காக்கப்பட வேண்டுமெனில் டாஸ்மாக் கடைகளை மூடி, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது ஒன்றே நிரந்தர தீர்வாகும்.
புதிய தமிழகம் கட்சியின் சார்பாக 'மது, போதை, புகையில்லா தமிழகம்' என தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்நிலையில் அண்மைக் காலமாக 'கள் உணவு' என்று ஒரு சிலர் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
கள் மதுவே தவிர, அது உணவாகாது. பதநீர் வேறு; கள் வேறு. கள் இறக்க அனைத்து கிராமப்புறங்களில் அனுமதி கொடுத்தால் விவசாயத் தொழிலாளர்கள், பனை, தென்னை தோப்புகளே கதி என மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வார்கள். கடந்த காலங்களில் அவ்வாறே நிகழ்ந்தன.
கள் உடம்புக்கு நல்லது என்றும் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பப்படுகிறது. 'உப்பு கருவாடும் ஒத்த மரக் கள்ளும் உடம்புக்கு நல்லது' என்று சினிமாவில் தவறாகப் பாடி வைத்துள்ளனர். எல்லா மது வகைகளிலும் அடிப்படையாக இருப்பது ஆல்கஹால். கள்ளில் 8 முதல் 15 சதவீத வரை ஆல்கஹால் அளவீடு இருக்கும்; பிற மதுபான வகைகளில் 30 முதல் 40 சதவீதம் வரை ஆல்கஹால் இருக்கும்.
எனவே போதையை அதிகரிக்க லிட்டர் கணக்கில் கள்ளைக் குடித்து விடுவார்கள். கள் பிற மதுபானங்களை விட அதிகமான பாதிப்புகளை உருவாக்கும் மிக மோசமான மதுவாகும். ரத்தக்குழாய்கள்; உணவு ஜீரணத்தை ஒழுங்குபடுத்தவும், உடலுக்குத் தேவையான சக்தியைச் சக்தியை சேமித்து வைக்கும் ஈரல்கள் மது குடிப்பதால் பெரும் பாதிப்படையும். நல்ல திசுக்களுக்கு பதிலாக கொழுப்பு சத்து அதிகமாகி ஈரலின் செயல்பாட்டைக் குறைத்துவிடும். இன்சுலின் சுரக்கும் கணையத்தை பாதிப்படையச் செய்து சர்க்கரை நோய் மற்றும் கணைய புற்றுநோயை அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு; மூளை நரம்பு மண்டல பாதிப்பு என பலவிதமான நோய்களையும் வரவழைக்கும் மிகக் கொடிய மது ' கள்' ஆகும். '
'கள்' ஒரு உணவு என்று சொல்வதற்கு உண்டான புரோட்டின், விட்டமின்கள், மினரல்ஸ் போன்ற எந்த விதமான சத்துக்களும் அதில் இல்லை. கள்ளின் ஆபத்து தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியாக தவறான பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். கள் இறக்க அனுமதித்தால் கிராமம் தோறும் நாட்டுச் சாராயம் காய்ச்சுதல் அதிகரிக்கும். இதன் போக்கு எப்படி, எங்கு போய் முடியும்?
கள் இறக்கும் போராட்டம் நடத்துவது அதை பொது வழியில் குடித்துக் காட்டுவது அனைத்தும் சட்டவிரோதமே.
எனவே, வரும் 15 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கள் இறக்கும் போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்; தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 10 தளங்கள் வரை கார்ப்பரேட் அலுவலகங்கள், ஓய்வறை உள்ளிட்டவை அமையவுள்ளது.
- பேருந்து முனையத்தின் 5-வது தளத்தில் உணவு மையம், மாடியில் சோலார் பேனல் அமைகிறது.
சென்னை:
சென்னை வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், வணிக வளாக கட்டடத்திற்கு ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் கோரியுள்ளது.
6.65 ஏக்கரில் ரூ.800 கோடியில் வணிக வளாகத்துடன் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைகிறது. தரை தளத்தில் நவீன பேருந்துநிலையம், 1,475 பைக்குகள், 214 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி.
10 தளங்கள் வரை கார்ப்பரேட் அலுவலகங்கள், ஓய்வறை உள்ளிட்டவை அமையவுள்ளது. 11 மற்றும் 12ஆம் தளங்களில் அனிமேஷன், கேமிங், காமிஸ் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
பேருந்து முனையத்தின் 5-வது தளத்தில் உணவு மையம், மாடியில் சோலார் பேனல் அமைகிறது.
- சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
- 2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை:
பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், ரெயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், சில ரெயில் நிலையங்களில் புதிதாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க முதற்கட்டமாக 9 இடங்களை சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் தேர்வு செய்துள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்:-
1) பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவில் பார்க்கிங்,
2) பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங்,
3) அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங்,
4) தியாகராயர் நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங்,
5) தியாகராயர் நகர், சோமசுந்தரம் மைதானம்,
6) செம்மொழிப் பூங்கா, ஆயிரம் விளக்கு,
7) மெரினா கடற்கரை பார்க்கிங்,
8) அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா,
9) மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா.
சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- அமைச்சர் எ.வ.வேலுவை, பாரதிதாசன் 20 ரூபாய் நோட்டு மாலை அணிவித்து வரவேற்றார்.
- திருவண்ணாமலையில் நான் கட்டியிருக்கும் புதிய வீட்டு புதுமனை புகுவிழா கடந்த 8-ந்தேதி நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலர் பாரதிதாசன் கடந்த 8-ந்தேதி புதுமனை புகுவிழா நடத்தினார்.
விழாவிற்கு அழைப்பு விடுத்து இருந்த நிலையில் அமைச்சர் எ.வே.வேலு கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் எ.வ.வேலுவை, பாரதிதாசன் 20 ரூபாய் நோட்டு மாலை அணிவித்து வரவேற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
தி.மு.க.வையும் தமிழக அரசையும் மிகக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்யும் நடிகர் விஜய் கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் ஒருவர், தி.மு.க. அமைச்சரை வீட்டுக்கு வரவழைத்து, நோட்டு மாலை அணிவிப்பதா எனக்கேட்டு, கட்சியில் இருக்கும் சிலர் த.வெ.க. தலைவர் விஜய்க்கு கடிதம் அனுப்பினர்.
இந்த விவகாரம் தொடர்பாக கட்சி தலைமை பாரதிதாசனிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவண்ணாமலை தெற்கு செயலாளர் பாரதிதாசன் த.வெ.க. தலைவர் விஜய்க்கு மன்னிப்பு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலையில் நான் கட்டியிருக்கும் புதிய வீட்டு புதுமனை புகுவிழா கடந்த 8-ந்தேதி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நண்பர்கள், கட்சியினர் உள்ளிட்டோரை அழைத்தது போல், என்னுடைய குடும்ப நண்பரான அமைச்சர் வேலுவையும் அழைத்தேன். அவரும் வருகை தந்தார்.
அமைச்சர் என்பதால், அவருக்கு மரியாதை செய்யும் வகையில் 20 ரூபாய் நோட்டு மாலையும், மலர் மாலையும் அணிவித்தேன். அச்செயலுக்காக வருந்துகிறேன். அதற்காக தலைவரிடம் மன்னிப்பு கோருகிறேன்.
இனி வரும் காலங்களில் என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்கள் தவிர வேறு எந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மோட்டேன்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சேலம் சரக டிஐஜி உமா விழுப்புரம் சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டள்ளனர். 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
* சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார் தமிழக கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நாகை எஸ்.பி. அருண் கபிலன் சென்னை தலைமையக துணை ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* குடிமை பொருள் வழங்கல் துறை மதுரை மண்டல எஸ்.பி. செல்வகுமார், நாகை எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* விழுப்புர சரக டிஐஜி திஷா மிட்டல் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சேலம் சரக டிஐஜி உமா விழுப்புரம் சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* தாம்பரம் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையர் பிரபாகர் சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* குளச்சல் ஏஎஸ்பி சாமுவேல் பிரவீன் கவுதம் திருப்பூர் நகர் வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார் பதவி உயர்வு பெற்று நெல்லை மேற்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
- புகாரை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நீலாங்கரை:
சென்னை நீலாங்கரையில் பிறந்து 43 நாட்களே ஆன பெண் குழந்தையை 2-வது மாடியில் இருந்து வீசிக் கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
கார் ஓட்டுநர் அருண் - பாரதி தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனிடையே இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் தாய் பாரதி போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குழந்தைகளை கவனிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்ததால், 2-வது மாடியில் இருந்து ஒரு குழந்தையை மட்டும் கீழே வீசியதாக பாரதி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
- விபத்தில் உயிரிழந்தவர்கள் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசத்தில் பாத யாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேல் நாரியப்பனூரில் உள்ள அந்தோனியார் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பலத்த காயமடைந்த மேலும் 4 பேர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- சென்னையிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை:
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும், சென்னையிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் காலை 10 மணிவரை 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- "சாப்பிட்டுவிட்டு பேருந்தை ஓட்டலாமே?" என்று பயணி கேட்டார்.
- "நேரமில்லை, இது எனக்குப் பழக்கம்" என்று பதிலளித்துள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சென்னைக்கு 40 பயணிகளுடன் புறப்பட்ட ஆம்னி பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை ஓட்டிக்கொண்டே உணவருந்தும் அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஓட்டுநர் ஸ்டியரிங்கின் நடுவில் உணவு பார்சலை வைத்துக்கொண்டு சாப்பிட்டபடி பேருந்தை இயக்கியுள்ளார்.
இதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு பயணி, "சாப்பிட்டுவிட்டு பேருந்தை ஓட்டலாமே?" என்று கேட்டதற்கு, ஓட்டுநர், "நேரமில்லை, இது எனக்குப் பழக்கம்" என்று பதிலளித்துள்ளார்.
இந்தப் பொறுப்பற்ற செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.






