என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2 நாட்கள் சுற்றுப்பயணமாக சேலம் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    2 நாட்கள் சுற்றுப்பயணமாக சேலம் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • நாளை காலை 9.30 மணிக்கு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று சேலம் புறப்பட்டார்.

    ஈரோடு, சேலத்தில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்த விமானம் மூலம் கோவை புறப்பட்டார். கோவையில் இருந்து முதலமைச்சர் சாலைமார்க்கமாக பெருந்துறை செல்கிறார். ஈரோடு, சேலத்தில் கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.

    இன்று மாலை 5 மணிக்கு சேலம்- ஈரோடு மாவட்ட எல்லையான பெரும்பள்ளம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அங்கிருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் 'ரோடு ஷோ' வில் பங்கேற்கிறார். சாலையின் இருபுறமும் கூடியிருக்கும் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். அன்று இரவு மேட்டூரில் தங்குகிறார்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலத்திற்கு வருகிறார். காலை 11 மணிக்கு சேலம் இரும்பாலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

    விழாவில் ரூ.1,500 கோடியில் நலத்திட்ட உதவிகள், கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரையாற்றுகிறார். சிறிது ஓய்வு எடுத்து விட்டு மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.

    Next Story
    ×