என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • உங்கள் அர்ப்பணிப்பு, உழைப்பு, ஒழுக்கம், எளிமை அனைவருக்கும் முன்மாதிரி.
    • இன்னும் பல தசாப்தங்கள் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் வாழ்க.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திரையுலகின் மாபெரும் நாயகன்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள், திரை பயணத்தில் அரை நூற்றாண்டை கடந்த இந்த சிறப்பான தருணத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

    உங்கள் அர்ப்பணிப்பு, உழைப்பு, ஒழுக்கம், எளிமை அனைவருக்கும் முன்மாதிரி.

    சமூகப் பணியிலும், திரையுலகச் சேவையிலும் உங்களின் பங்கு மறக்க முடியாதது.

    இன்னும் பல தசாப்தங்கள் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் வாழ்க.

    நலமுடன் நீண்ட ஆயுள் பெற்று என்றும் பிரகாசிக்க வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 18 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டு இருந்தது.
    • ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது.

    தருமபுரி:

    கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

    இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது காணப்பட்டது. இதனால் அணைகளின் பாதுகாப்பை கருதி இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் அவ்வ பொழுது திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 18 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டு இருந்தது.

    தொடர்ந்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஆனாலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்த ருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது. மேலும், அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை எதுவுமில்லை.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் 2023 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
    • 2024 இல் பாஜகவில் இருந்து விலகி மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.

    அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

    அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் 2023 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் 2024 இல் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.

    தற்போது மைத்ரேயன் அதிமுகவில் இருந்தும் விலகி தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

    முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நேற்று சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 6-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதிக்கு பிறகு விலை சரிவடைந்து வந்த நிலையில் மீண்டும் இந்த உச்சத்தை தொட்டது.

    அதன் தொடர்ச்சியாகவும் விலை குறைந்தபாடில்லை. மீண்டும் ஏறுமுகத்திலேயே பயணித்தது. இதனால் கடந்த 8-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.75,760-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.

    இதனைத் தொடர்ந்து விலை சற்று குறையத் தொடங்கியது. அந்தவகையில் நேற்றும் விலை சரிந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

    11-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,000

    10-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560

    09-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560

    08-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-08-2025- ஒரு கிராம் ரூ.126

    11-08-2025- ஒரு கிராம் ரூ.127

    10-08-2025- ஒரு கிராம் ரூ.127

    08-08-2025- ஒரு கிராம் ரூ.127

    09-08-2025- ஒரு கிராம் ரூ.127

    • 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார்.
    • சகோதரர் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இப்பொன்விழா ஆண்டில் #Superstar நடிப்பில் நாளை வெளியாகவுள்ள #Coolie திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
    • அரசு அலுவலர்களுக்கான தொடர் விடுமுறை நாளாக உள்ளது.

    சென்னை சைதாப்பேட்டையில், தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்கள் வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் வாரத்தில் 44,418 பேரும், 2-வது வாரத்தில் 48,418 பேரும் பயன்பெற்றுள்ளனர். வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி அன்று அரசு விடுமுறை என்பதுடன், அரசு அலுவலர்களுக்கான தொடர் விடுமுறை நாளாக உள்ளது. எனவே, வரும் வாரம் சனிக்கிழமை அன்று, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

    அடுத்த வாரம் சனிக்கிழமை, 38 மாவட்டங்களிலும் முகாம் நடத்தப்படும். ஆறு மாதங்களில், 1,256 இடங்களில் முகாம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாட்டின் சுதந்திர தின விழா ஆகஸ்டு 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • தேசியக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது.

    சென்னை:

    பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாட்டின் சுதந்திர தின விழா ஆகஸ்டு 15-ந்தேதி (நாளை மறுதினம்) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும்.

    இதுதவிர ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், புரவலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்குபெற செய்ய வேண்டும். பிளாஸ்டிக் வகை தேசியக் கொடிகளை கண்டிப்பாக விழாவில் பயன்படுத்தக் கூடாது. அதேபோல், தேசியக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது.

    இதுசார்ந்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சீமான் மீதான வருண் குமார் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு.
    • சீமான் மனு மீதான இறுதி விசாரணை வருகிற 20ஆம் தேதி நடைபெறும்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கிற்கு தடைகோரி சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து சீமானுக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

    இந்த தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீட்டித்துள்ளது. மேலும், வழக்கின் இறுதி விசாரணை வரும் 20ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் நாளை மறுதினம் ரிலீசாக உள்ளது.
    • கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    கூலி திரைப்படம் நாளை மறுதினம் ரிலீசாக உள்ளது.

    இந்நிலையில், கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

    அதன்படி, ரிலீஸ் நாளில் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளைத் திரையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    • கூட்டணியில் இருப்பதால் தவறுகளை கம்யூனிஸ்டுகள் சுட்டுகாட்டாமலும் இல்லை. இதை நான் ஏற்க மறுப்பதும் இல்லை.
    • நமக்குள் இருப்பது தேர்தலுக்கான நட்பு அல்ல. கொள்கை நட்பு.

    சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது எனக்கு கிடைத்த பெருமை.

    * ஏகாதிபத்திய சதியை முறியடிக்க வேண்டிய தேவை தற்போது உருவாகியுள்ளது.

    * அமெரிக்கா விதித்த பொருளாதார தடையை மீறி கியூபாவில் ஆட்சி நடத்தினார் ஃபிடல் காஸ்ட்ரோ.

    * இந்தியா மீது 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்திருப்பதற்கு மத்திய அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.

    * இந்தியா- பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என டிரம்ப் கூறுகிறார். இதுகுறித்து பிரதமர் பதில் கூறவில்லை.

    * அடிமைத் தனத்தை பற்றி பழனிசாமி பேசலாமா?. இங்கு யாருக்கும் யாரும் அடிமையில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு தீக்கதிர் படிக்கும் பழக்கம் இருக்காது. நான் தினந்தோறும் தீக்கதிர் படிக்கிறேன்.

    * கூட்டணியில் இருப்பதால் தவறுகளை கம்யூனிஸ்டுகள் சுட்டுகாட்டாமலும் இல்லை. இதை நான் ஏற்க மறுப்பதும் இல்லை.

    * கம்யூனிஸ்டுகள் என்னில் பாதி, ஏனெனில் என்னுடைய பெயரே ஸ்டாலின்.

    * எடப்பாடி பழனிசாமிக்கு அண்மையில் கம்யூனிஸ்டுகள் மேல் பாசம் பொத்துக்கொண்டு வருகிறது.

    * நமக்குள் இருப்பது தேர்தலுக்கான நட்பு அல்ல. கொள்கை நட்பு.

    இவ்வாறு முலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

    • தமிழக வனப்பகுதிகளில் 3,063 யானைகள் உள்ளது.
    • யானைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக வனப்பகுதிகளில் 3,063 யானைகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது

    யானைகள் இருந்தாலும் ஆயிரம் பொன், செத்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் யானைகள் வாழ்வதற்கான உகந்த இடமாக உள்ளது. யானைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது

    இந்நிலையில், தண்டவாளத்தைக் கடக்கும்போது ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க உதவும் AI தொழில்நுட்பம் இணைக்கப்பட்ட கேமராக்கள் கொண்ட நுண்ணறிவு எச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த கேமராக்கள் பயன்பாடு தொடங்கிய நவம்பர் 2023-ம் ஆண்டு முதல் ஒரு யானை கூட உயிரிழக்கவில்லை என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.



    • நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் தலைவரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • தலைவர் பதவிக் காலத்தை நீட்டித்தது கட்சி விதிகளுக்கு முரணானது.

    பா.ம.க. பொதுக்குழுவை அன்புமணி ராமதாஸ் கூட்டியதற்கும், அதில் அவர் தலைவராக நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கும் எதிராக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

    கட்சியின் நிறுவனரான தனக்கு அழைப்பு விடுக்காமல் அன்புமணி பொதுக்குழுவை நடத்தியுள்ளார். அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதம். நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் தலைவரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக் காலத்தை நீட்டித்தது கட்சி விதிகளுக்கு முரணானது. அன்புமணி மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.

    ×