என் மலர்
நீங்கள் தேடியது "கம்யூனிஸ்டுகள்"
- கூட்டணியில் இருப்பதால் தவறுகளை கம்யூனிஸ்டுகள் சுட்டுகாட்டாமலும் இல்லை. இதை நான் ஏற்க மறுப்பதும் இல்லை.
- நமக்குள் இருப்பது தேர்தலுக்கான நட்பு அல்ல. கொள்கை நட்பு.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
* ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது எனக்கு கிடைத்த பெருமை.
* ஏகாதிபத்திய சதியை முறியடிக்க வேண்டிய தேவை தற்போது உருவாகியுள்ளது.
* அமெரிக்கா விதித்த பொருளாதார தடையை மீறி கியூபாவில் ஆட்சி நடத்தினார் ஃபிடல் காஸ்ட்ரோ.
* இந்தியா மீது 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்திருப்பதற்கு மத்திய அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.
* இந்தியா- பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என டிரம்ப் கூறுகிறார். இதுகுறித்து பிரதமர் பதில் கூறவில்லை.
* அடிமைத் தனத்தை பற்றி பழனிசாமி பேசலாமா?. இங்கு யாருக்கும் யாரும் அடிமையில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு தீக்கதிர் படிக்கும் பழக்கம் இருக்காது. நான் தினந்தோறும் தீக்கதிர் படிக்கிறேன்.
* கூட்டணியில் இருப்பதால் தவறுகளை கம்யூனிஸ்டுகள் சுட்டுகாட்டாமலும் இல்லை. இதை நான் ஏற்க மறுப்பதும் இல்லை.
* கம்யூனிஸ்டுகள் என்னில் பாதி, ஏனெனில் என்னுடைய பெயரே ஸ்டாலின்.
* எடப்பாடி பழனிசாமிக்கு அண்மையில் கம்யூனிஸ்டுகள் மேல் பாசம் பொத்துக்கொண்டு வருகிறது.
* நமக்குள் இருப்பது தேர்தலுக்கான நட்பு அல்ல. கொள்கை நட்பு.
இவ்வாறு முலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
- பெண்ணாடம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்புக்கு, தமிழக கம்யூனிஸ்ட் கட்சியே பொறுப்பு.
- பொதுவுடைமை என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூட, தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எந்த விதத்தகுதியும் இல்லை.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
2018 முதல் 2022 வரை, தமிழகத்தில் மட்டும் 52 தூய்மைப் பணியாளர்கள், பணியில் இருக்கும்போது உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே உச்சகட்ட உயிரிழப்பு தமிழகத்தில் தான்.
பெண்ணாடம் பேரூராட்சியில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேரூராட்சி உறுப்பினர், ஒரு தூய்மைப் பணியாளரை மலம் கலந்த கழிவு நீரில் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்து, அவர் உடல் நிலை சரியில்லாமல் மரணமடையக் காரணமாக இருந்துள்ளார். குற்றம் செய்த அந்த பேரூராட்சி உறுப்பினர் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. ஆனால், இதைக் குறித்துக் கேள்வி எழுப்பியதற்கு, எங்கள் மாநிலச் செயலாளர் எ்ஸ.ஜி.சூர்யாவை கைது செய்துள்ளனர்.
பொதுவுடைமை என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூட, தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எந்த விதத்தகுதியும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, கம்யூனிஸ்ட்டுகள் திமுகவின் கிளை அலுவலகமாகத்தான் செயல்படுகின்றனர். வியர்வை சிந்தி வேலை செய்யும் தொழிலாளர்களிடம், பெயரளவில் சமூக நீதி பேசிக் காலம் காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்தக் காலாவதியான கம்யூனிஸ்ட்டுகள்.
பெண்ணாடம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்புக்கு, தமிழக கம்யூனிஸ்ட் கட்சியே பொறுப்பு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






