என் மலர்
உள்ளூர் செய்திகள்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு 9 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரூ.7,020 கோடி முதலீடு ஈர்த்து 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் 7 நிறுவனங்களில் ரூ.8,496 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 2,293 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
- அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.
- அனைவரும் ஒன்றாக வேண்டும். அ.தி.மு.க. வளர வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்.
கோவை:
டெல்லி செல்வதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரிடம், டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன்,
ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்கிறேன். பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்லவில்லை. நாளை முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிட போவதில்லை.
அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அனைவரும் ஒன்றாக வேண்டும். அ.தி.மு.க. வளர வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம் என்றார்.
- இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்தவரையும் அவர்கள் தாக்க முயன்றனர்.
- இதுதொடர்பான புகாரின்பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 63). இவரது சகோதரர்களான வைத்தியநாதன், சிங்காரவேல் ஆகிய 2 பேரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். விவசாயிகளான இவர்கள் 3 பேருக்கும் பொதுவான நிலம் உள்ளது.
இதை பாகப்பிரிவினை செய்து கொள்வது தொடர்பாக 3 பேரின் குடும்பத்தினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில் வைத்தியநாதனின் மனைவி சின்னையாள் (47), பிரச்சினைக்குரிய இடத்தில் வீடு கட்டுவதற்கான பணியை மேற்கொண்டுள்ளார்.
இதற்கு சிங்காரவேலின் மனைவி செல்வராணி (55) என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது சின்னையாள், அவரது மகள்கள் ஜெயசித்ரா, ஜெயந்தி, அனுராதா ஆகியோர் சேர்ந்து செல்வராணியை தாக்கினர். மேலும் அவரை மரத்தில் கட்டிவைத்து அடித்து, உதைத்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்தவரையும் அவர்கள் தாக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த சில பெண்கள் ஓடிவந்து செல்வராணியை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுதொடர்பான புகாரின்பேரில் சின்னையாள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுராதாவை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
- தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
- தமிழகத்தில்பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில்பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, தூத்துக்கடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- மண்ணூர்பேட்டை, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, எம்டிஎச் ரோடு, பாடி.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (09.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
மீஞ்சூர்: டி.எச்.ரோடு, தேரடி தெரு, சிறுவாக்கம், சூரியா நகர், பி.டி.ஓ., அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம், அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர். பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையன்மேடு.
அண்ணாசாலை: அங்கப்பன் தெரு, மூர் தெரு, II லேன் கடற்கரை சாலை, லிங்கிசெட்டி தெரு, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி, எர்ரபாலு தெரு, லேன் கடற்கரை சாலை, மூக்கர் நல்லமுத்து தெரு, அங்கப்பன் தெரு, பங்குச் சந்தை, இந்தியன் வங்கி I, II, இயேசு அழைக்கிறார், HSBC, UTI, தம்பு செட்டி தெரு, ஆர்மேனியன் தெரு, எஸ்பிளனேட் சாலை, NSC போஸ் சாலை, பத்ரியன் தெரு, பந்தர் தெரு, மலையபெருமாள் தெரு, ஆண்டர்சன் தெரு, ஸ்ட்ரிங்கர் தெரு, உம்பர்சன் தெரு, குறளகம், சட்டக் கல்லூரி பம்பிங் ஸ்டேஷன், MMC ஆண்கள் விடுதி.
கொரட்டூர்: மண்ணூர்பேட்டை, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, எம்டிஎச் ரோடு, பாடி, முகப்பேர் ரோடு, டிஎன்எச்பி, கேஆர் நகர், தில்லை நகர், கண்ணகி நகர், ஜம்புகேஸ்வரர் நகர்.
போரூர்: ஐயப்பன்தாங்கல், ஆர்.ஆர்.நகர், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர், வளசரவாக்கம், போரூர் கார்டன் முதல், இரண்டாம், ராமசாமி நகர், நகர மரம், ஆற்காடு சாலை, எம்.எம். எஸ்டேட், ஜி.கே. எஸ்டேட், சின்னபோரூர், சாமபுட் நகர், வானகரம், செட்டியாரகரம், பூந்தமல்லி ரோடு, பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகர், தெள்ளியராகரம்.
- உலக புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
- அம்பேத்கர் லண்டனில் தங்கியிருந்த இல்லத்துக்கு சென்று அங்குள்ள அரிய புகைப்படங்களை பார்த்து வியந்தார்.
சென்னை:
'தமிழ்நாடு வளர்கிறது' (டி.என்.ரைசிங்) என்ற பயணத்தின் கீழ் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந் தேதி சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு அவர், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.
பின்னர் அவர், ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 2-ந் தேதி லண்டன் சென்றார். அங்கு அந்நாட்டு மந்திரியும், நாடாளுமன்ற துணை செயலாளருமான (இந்தோ-பசிபிக்) கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாடும், இங்கிலாந்தும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார்.
இதனையடுத்து உலக புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். லண்டன் ஆக்ஸ்போர்டு வால்டன் தெருவில் அமைந்துள்ள தமிழின் பெருமையை உலகறிய செய்த மேலைநாட்டு தமிழறிஞர் ஜி.யு.போப்பின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
'சட்ட மேதை' அம்பேத்கர் லண்டனில் தங்கியிருந்த இல்லத்துக்கு சென்று அங்குள்ள அரிய புகைப்படங்களை பார்த்து வியந்தார். 'தத்துவ ஞானி' என்று போற்றப்படும் கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தை பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.
தொழில் முதலீடுகள் ஈர்ப்பு, அயலக தமிழர்களுடன் சந்திப்பு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக்கொண்டு லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார்.
துபாய் வழியாக அவர் இன்று (திங்கட்கிழமை) காலை 8.05 மணியளவில் சென்னை விமானம் நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் வாயில் அருகே அவரை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் வரவேற்கிறார்கள். மேலும் அவருக்கு தி.மு.க. சார்பிலும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
வரவேற்பு நிகழ்வுக்கு பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்து, 'ஜெர்மனி, லண்டனில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீட்டு விவரங்களை பட்டியலிடுவார் என்று தெரிகிறது.
- ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
- ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.
விசிகவினர் சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தாக்குதலில் விசிகவினர் 2 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர் என்றும் ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் டிஜிபி அலுவலக வாசலில் விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்துள்ளனர்.
- லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
- இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 13 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக செனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், நீலகிரி, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய 13 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
- தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டியவர் தேவர் பெருமகனார்.
பசும்பொன் முத்துராமலிக்க தேவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசமி திண்டுக்கல்லில் உள்ள சின்னாளப்பட்டியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிக்க தேவரின் பெயரை வைக்கவும் இபிஎஸ் வலியுறுத்துவோம்.
தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டியவர் தேவர் பெருமகனார்" என்றார்.
- 2022-ம் ஆண்டுக்கு பிறகு மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரகணம் இதுவாகும்.
- டெலஸ்கோப் மற்றும் அல்லது பைனாகுலர்கள் ஆகியவற்றாலும் பார்த்து ரசிக்கலாம்.
சூரியனுக்கும் சந்திரனுக் கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது. இதனால் சந்திரன் மறைக்கப்படுகிறது.
இந்தியாவில் இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இரவு 8.58 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். டெலஸ்கோப் மற்றும் அல்லது பைனாகுலர்கள் ஆகியவற்றாலும் பார்த்து ரசிக்கலாம்.
பகுதி கிரகணம் இன்று இரவு 9.57 மணிக்கு ஆரம்பிக்கும். முழு கிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங் கும் என்று வானியல் நிபு ணர்கள் தெரிவித்து உள்ள னர். இன்று கிரகணத்தின் போது இரவு 11.01 மணி முதல் நள்ளிரவு 12.23 மணி வரை மொத்தம் 82 நிமிடங்கள், அதாவது 1.22 மணி நேரம் நிலா முழுமையாக மறைக்கப்படும்.
பகுதி கிரகணம் இரவு 1.26 மணிக்கு முடிவடையும். சந்திர கிரகணம் இரவு 2.25 மணிக்கு நிறைவடையும். இன்று சந்திர கிரகணத்தின் போது நிலா ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படும்.
2022-ம் ஆண்டுக்கு பிறகு மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரகணம் இதுவாகும்.
இந்நிலையில், இன்று இரவு நீண்ட நேரம் நடைபெறும் சந்திரகிரகணத்தை பொதுமக்கள் பார்க்க, சென்னை வானியல் குழுமம் சார்பில், 10 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூர் கடற்கரை, எண்ணூர் கடற்கரை, விருகம்பாக்கம். கோவூர், நாவலூர் உள்ளிட்ட 11 க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசமி திண்டுக்கல்லில் உள்ள சின்னாளப்பட்டியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அரசு ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்திருக்கிறதா ? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசமி திண்டுக்கல்லில் உள்ள சின்னாளப்பட்டியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது பேசிய அவர், " ஆத்தூர் தொகுதிக்கு ஏதாவது ஒரு நலத்திட்டத்தை அமைச்சர் செய்திருக்கிறாரா?" என்றார்.
- திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக்காவியம்.
- குறளிசைக்காவியம் எல்லோர் உள்ளங்களில் நிலைபெற்றிட வேண்டும்.
திருக்குறளை இசை வடிவில் மாற்றம் செய்து குறளிசைக் காவியம் என்ற பெயரில் உருவாக்கியுள்ள இசைக்கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பபதாவது:-
குறளிசைக்காவியம் படைத்துள்ள லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினிக்கு வாழ்த்துகள்;
திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக்காவியம்"
இசையில் தோய்ந்து, பல திறமைமிக்க குரல்களில் ஒலித்திடும் குறளமுதத்தை அனைவரும் கேட்க வேண்டும்; குறளிசைக்காவியம் எல்லோர் உள்ளங்களில் நிலைபெற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






