என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விளைச்சல் மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக பூண்டின் விலை உயர்ந்துள்ளது.
    • 70 சதவீதம் வரை பூண்டு வரத்து குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை கோயம்போடு காய்கறி சந்தையில் பூண்டு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    வழக்கமாக ஒரு கிலோ பூண்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், சமீபகாலமாக சற்று விலை உயர்ந்தது.

    இந்நிலையில் பூண்டின் விலை தற்போது 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உத்தரபிரதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டு, நடப்பாண்டில் விளைச்சல் குறைந்துள்ளது.

    விளைச்சல் மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக பூண்டின் விலை உயர்ந்துள்ளது. 70 சதவீதம் வரை பூண்டு வரத்து குறைந்திருப்பதாகவும் அடுத்த ஒரு மாத காலத்திற்கு விலை ஏற்றம் இருக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது.

    வண்டலூர்:

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

    நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி மற்றும் பல பகுதிகளை இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.


    இதனிடையே, பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து பேருந்து முனையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

    நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் இணைய வழி மூலமாக பெறப்படும். டெண்டருக்கு பிப்ரவரி 14-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    • பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
    • கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து வலுவான கூட்டணி அமைக்க அ.தி.மு.க. வியூகம் அமைத்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில் பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்வதில் அ.தி.மு.க. மும்முரமாக உள்ளது.

    அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சார்ந்த நிர்வாகிகள் பா.ம.க., தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    பா.ம.க., தே.மு.தி.க.வின் எதிர்பார்ப்புகளை அ.தி.மு.க. கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ம.க., தே.மு.தி.க.வுடனான கூட்டணியை உறுதி செய்யும் பணியில் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து வலுவான கூட்டணி அமைக்க அ.தி.மு.க. வியூகம் அமைத்துள்ளது.

    • கூட்டணியில் ஒரு தொகுதியில் ஒரு கட்சி தொடர்ந்து நின்றால், அந்த தொகுதியில் இன்னொரு கட்சிக்கு வாய்ப்பு கிடைக்காது.
    • சென்னை என்ன தி.மு.க.வுக்கு தான் கொடுக்க வேண்டுமா? என என்னிடமே பலர் கேட்டார்கள்.

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில், மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினத்தையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் தியாகிகளின் உருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டணியில் ஒரு தொகுதியில் ஒரு கட்சி தொடர்ந்து நின்றால், அந்த தொகுதியில் இன்னொரு கட்சிக்கு வாய்ப்பு கிடைக்காது. உடனே அங்குள்ள அந்த கட்சி தொண்டர்கள் நாங்கள் என்ன இவர்களுக்கு வேலை செய்து கொண்டே இருப்பதுதான் நமது வேலையா? என்று கேட்பார்கள். இது தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். காங்கிரஸ் கட்சியிலும் இது போல கேட்பார்கள். சென்னையில் ஒரு தொகுதி வாங்கி கொடுத்தால் என்ன? சென்னை என்ன தி.மு.க.வுக்கு தான் கொடுக்க வேண்டுமா? என என்னிடமே பலர் கேட்டார்கள். உங்களுக்காக நான் கேட்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். இது இயல்பு.

    இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

    • 60 வயது பூர்த்தியடைந்த மூத்தக் குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண அட்டை.
    • மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

    கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், வரும் பிப்.1ம் தேதி முதல் மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் செயல்படும் என மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், கடந்த 30.12.2023 அன்று புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், பொதுமக்கள் நலன் கருதி, 01.02.2024 முதல் மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் செயல்பட உள்ளது.

    இப்பயணச்சீட்டு விற்பனை மையத்தில், விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண அட்டை (ஒவ்வொரு மாதமும் 16-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை), மாதாந்திர சலுகை பயண அட்டை (மாதந்தோறும் 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை) மற்றும் 50% மாணவர் சலுகை பயண அட்டை (ஒவ்வொரு மாதமும் 11-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி வரை) பயணம் செய்யக்கூடிய பயணச்சீட்டுகள் மாதந்தோறும் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

    மேலும், 60 வயது பூர்த்தியடைந்த மூத்தக் குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையுடன் 10 எண்ணிக்கை கொண்ட டோக்கன்கள். மா.போ.கழக கிளாம்பாக்கம் பணிமனையிலும் வழங்கப்படும்.

    எனவே, பயணிகள் இதனை பயன்படுத்தி, கிளாம்பாக்கம் மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • குழுவில், மவுரியா, அருணாச்சலம், தங்கவேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக, பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு, வேட்பாளர் பட்டியல் என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணிகளை செய்து வருகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைத்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

    இந்த குழுவில், மவுரியா, அருணாச்சலம், தங்கவேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    • ராமர் கோவிலுக்கு கடந்த 23ம் தேதி முதல் பொது மக்கள் செல்ல அனுமதி.
    • அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விமான சேவையை தொடங்கி வைக்கிறார்.

    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 22ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    ராமர் கோவிலுக்கு கடந்த 23ம் தேதி முதல் பொது மக்கள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது.

    இதனையொட்டி சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை நாளை முதல் தொடங்கப்படுகிறது. இதற்கான விமான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்கனவே தொடங்கியது. சென்னையில் இருந்து அயோதிக்கு விமான சேவை கட்டணம் ரூ.6,499 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் இருந்து அயோத்திக்கு பகல் 12:40-க்கு புறப்படும் விமானம் மாலை 3:15-க்கு சென்றடையும். அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6:20-க்கு சென்னை வந்து சேரும்.

    இதேபோல், மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஜெப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அயோத்தியில் இருந்து நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது.

    மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விமான சேவையை தொடங்கி வைக்கிறார்.


    • திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் தலைமைச் செயலாளர்.
    • மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அதிகாரிகள் என அனைவரும் 24 மணி நேரம் தங்கியிருக்க அறிவுறுத்தல்.

    முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

    உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமானது ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் எந்த வட்டத்தில் முகாம் நடத்த வேண்டும் என்ற திட்டமிடலை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.

    அதில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி, முகாம் நடைபெறும் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அதிகாரிகள் என அனைவரும் 24 மணி நேரம் தங்கியிருக்க வேண்டும்.

    உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கண்டறிந்த அம்சங்களை ஆவணமாகத் தயாரித்து, வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவலை முன்கூட்டியே பொது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

    சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் செயல்படும்.

    மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் இந்த முகாமில் பங்கேற்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
    • உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில், மதுரை, தேனி நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    எ.வ.வேலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

    காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், இன்று மதுரை, தேனி நிர்வாகிகளுடன் நடைபெற்றது.

    • காய்கறிகள் சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
    • யானையை கண்ட வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் அரேப்பாளையம்-கொள்ளேகால் சாலை அமைந்துள்ளது.

    அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இச்சாலை வழியாக பஸ் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மிக முக்கியமாக கரும்புக்கட்டுகள், காய்கறிகள் சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அரேப்பாளையத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் கேர்மாளம் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டுயானை ஒன்று சாலை நடுவே நடமாடியது. யானையை கண்ட வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தினர்.

    இதையடுத்து வாகனங்களை வழிமறைத்த காட்டு யானை சரக்கு வாகனங்களில் காய்கறிகள், உணவு ஏதாவது உள்ளதா? என தனது தும்பிக்கையால் ஒவ்வொரு வாகனமாக சோதனையிட்டபடி அலைந்தது.

    இந்த காட்சியை அந்த வழியாக சென்ற அரசு பஸ்சில் இருந்த பயணிகள் செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர். சிறிது நேரம் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • பறவைகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • கிரிபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வந்து உள்ளன.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விலங்குகள் பரிமாற்றத்தின் படி நாட்டில் உள்ள மற்ற பூங்காவிற்கு தேவையான விலங்குகள், பறவைகளை கொடுத்து அங்கிருந்து விலங்குகளை பெறுவது வழக்கம்.

    அதன்படி உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள், பறவைகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள். ஒரு ஜோடி இமாலயன் கிரிபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வந்து உள்ளன.


    இந்த அனுமன் குரங்குள் மற்ற குரங்குகளை விட வித்தியாசமான முக அமைப்பை கொண்டது. அதன் வாய் பகுதி சற்று சிகப்பு நிறமாக இருக்கும். புதிதாக வந்து உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளின் உடல்நிலையை பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து தனிமைப்படுத்தி தனித்தனியாக அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தும் கால அவகாசம் முடிந்ததும் பூங்காவில் பொது மக்களின் பார்வைக்கு விடப்படும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே விலங்குகள் பரிமாற்றத்தின் படி வண்டலூர் பூங்காவில் இருந்து கான்பூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி கட்ட உடல் மலைப் பாம்புகள், இரண்டு ஜோடி சருகு மான்கள், 3 நெருப்புக்கோழிகள், ஒரு ஜோடி பச்சை உடும்புகள் மற்றும் ஒரு ஆண் சாம்பல் ஓநாய் ஆகிய விலங்குகள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ‘மக்களிடம் செல்’ என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் ஆகும்.
    • தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட கலெக்டர்களை சென்னைக்கு அழைத்து பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் ஒரு நாள் கிராமங்களில் தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

    "அரசு அறிவித்துள்ள திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகிறதா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றதா? என்பதை களத்திற்கு நேரடியாகச் சென்று, ஆய்வில் ஈடுபட்டு, அரசு எந்திரத்தை முடுக்கி விட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் களத்தில் முதல்வர் திட்டம்.

    இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் கூறுகையில்,

    "மக்கள் அரசு நலத்திட்டங்களின் முழுப்பலனையும் அடைவதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களைய வேண்டியதும் அரசு எந்திரத்தின் முதன்மையான பணி. அரசு இயந்திரம், கடமை, கண்ணியம், கட்டுப் பாட்டுடன், மக்களைத் தேடிச் சென்று பணியாற்ற வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

    மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வருபவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என்றும் ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கும் மக்களும் தங்கள் கிராம முன்னேற்றத்துக்கும் அரசு தொடர்பாக தனக்கிருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வை நாடிச் செல்லும் நபர் மாவட்ட ஆட்சித் தலைவர் தான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

    "தங்கள் அருகில் இருக்கும் பிற அதிகாரிகள் அன்புக்குரியவராக இருப்பினும், மக்களின் மகத்தான அன்புக்கும் ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களாக மாவட்ட ஆட்சியர்களைப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்திருந்த முதலமைச்சர் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர்," என்று தெரிவித்து இருந்தார்.

    இது, 'மக்களிடம் செல்' என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் ஆகும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும், ஒரு நாள் வட்ட அளவில் தங்கி ஆய்வில் ஈடுபட வேண்டும். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறை களை கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தங்கு தடையின்றி மக்களிடம் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

    நானும், அரசு எந்திரமும் களத்திற்கு வருகிறோம். குறைகளை கேட்டு, மக்களின் கவலையை போக்கி, மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்று தெரிவித்திருந்தது.

    அதன் அடிப்படையில் நாளை முதல் மாவட்ட கலெக்டர்கள் வட்ட அளவில் நேரடியாக கிராமத்துக்குச் சென்று 24 மணி நேரம் தங்கியிருந்து மக்களின் கருத்துக்களை கேட்டு அறிய உள்ளனர்.

    இது தொடர்பாக இன்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட கலெக்டர்களை சென்னைக்கு அழைத்து பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

    ×