என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- 5-ந்தேதி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு செல்கிறார்.
சென்னை:
துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த 12-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிற 4-ந்தேதி, முதல் முறையாக தமிழகம் வருகிறார். அவர் தமிழகத்தில் 2 நாட்கள் தங்கி இருக்கிறார். அப்போது பல முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) சி.பி.ராதாகிருஷ்ணன் விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அன்று அவர் சென்னையில் தங்கி இருக்கிறார். அப்போது பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணுக்கு சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள அரங்கம் ஒன்றில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, பொதுமக்கள் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
மறுநாள் 5-ந்தேதி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு செல்கிறார். கோவை விமான நிலையத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோவையில் அவர் தனது வீட்டுக்கும் செல்கிறார். அன்று முழுவதும் அவர் கோவையில் தங்கி இருக்கிறார். அப்போது அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் பலரையும் அவர் சந்திக்கிறார். 5-ந்தேதி இரவு அல்லது 6-ந்தேதி காலையில் அவர் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் தமிழக சுற்றுப்பயண திட்டம் தயாராகி வருகிறது. இன்று அல்லது நாளை அவரது சுற்றுப்பயண திட்டம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
- எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!
- உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழா மேடையில், 'நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெற்று தனது முதல் மாத சம்பளத்தை தந்தையிடம் வழங்கிய பிரேமா பேசுகையில், தந்தை ஒழுகும் வீட்டில் இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்!
எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!
உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- பா.ஜ.க.வும் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.
- வருகிற 11-ந்தேதி முதல் மக்கள் சந்திப்பு யாத்திரையை தொடங்குகிறார்.
நெல்லை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை மேற்கொண்டார்.
நயினார் நாகேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று வந்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் இன்று தனது இல்லத்தில் பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க.வும் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுவதும் வருகிற 11-ந்தேதி முதல் மக்கள் சந்திப்பு யாத்திரையை தொடங்குகிறார். தொடக்க விழாவானது மதுரை கிழக்கு தொகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அதனை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த யாத்திரையை தொடங்குவது குறித்தும், அதில் கூட்டணி கட்சித் தலைவர்களை பங்கேற்க செய்வது குறித்தும், சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்துதல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில் இந்த யாத்திரையில் என்னவெல்லாம் திட்டங்களை கொண்டு வரலாம், கூட்டணியில் புதிய கட்சிகளை இழுப்பது எப்படி என்பது குறித்தும் மூத்த தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டமானது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
- விஜய் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர்:
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை (சனிக்கிழமை) அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கரூரில் விஜய் பிரசாரம் செய்வதற்கான இடத்தை தேர்வு செய்து அனுமதி பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கரூர் வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையாவை சந்தித்து மனு அளித்தார். அதில் விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
தமிழக வெற்றி கழகத்தினர் கொடுத்த 3 இடங்களிலும் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அதற்கு பதிலாக நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்வதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு காரில் வரும் விஜய் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் விழாவில் கலந்து கொண்டனர்?
- பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் எழுத தெரியவில்லை.
சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னையில் நேற்று அரசு நடத்திய விழா கல்வி சாதனை விழாவாக தெரியவில்லை, சினிமா பாடல் வெளியீட்டு விழா போல் இருந்தது.
* கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் விழாவில் கலந்து கொண்டனர்?
* மாநிலம் முழுவதும் பல இடங்களில் அரசு பள்ளிகளை மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு என விழா நடத்துகிறீர்கள்.
* தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல, விளம்பர மாடல் அரசு.
* பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் எழுத தெரியவில்லை.
* தாய் மொழியான தமிழ்த்தேர்வு எழுதுவதற்கு 60,000 பேர் வராத அவலநிலை தமிழ்நாட்டில் தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- செப். 27 முதல் அக்.5-ந்தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
- விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கு சுமை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது.
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது. நாளை முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. செப். 27 முதல் அக்.5-ந்தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. விதிமுறைகளை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கு சுமை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் விதிமுறைகளை மீறிச் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
- சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிப் பாதையில் 1964 - 2000 வரை நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்தார்.
- மந்தைவெளியில் எஸ்.வி.வெங்கடராமன் தெரு என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ் சினிமாவின் "ஜேம்ஸ்பாண்ட்" என்று அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கர், சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிப் பாதையில் 1964 - 2000 வரை வசித்து வந்தார்.
நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை 'ஜெய்சங்கர் சாலை' என மாற்ற வேண்டும் என்று நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இதையடுத்து சாலையின் பெயரை மாற்ற மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதைக்கு ஜெய்சங்கர் சாலை என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதேபோன்று சென்னை மந்தைவெளி 2-வது குறுக்கு தெருவிற்கு எஸ்.வி.வெங்கடராமன் தெரு என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகையையும் அவர் திறந்து வைத்தார்.
- சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனை முடிவில் புரளி என தெரியவந்தது.
- வெடிகுண்டு புரளியால் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணை சற்று தாமதமாக தொடங்கியது.
மதுரை:
மதுரை ஐகோர்ட்டில் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள 14 மாவட்டகளுக்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே வழக்கு தொடர்பாக வரும் பொதுமக்கள், பல்வேறு மாவட்ட வழக்கறிஞர்கள் மதுரை ஐகோர்ட்டிற்கு வந்து செல்வதுண்டு. இதனால் ஐகோர்ட்டு வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் இன்று காலை ஐகோர்ட்டு பணிகள் வழக்கம் போல் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது ஐகோர்ட்டு மின்னஞ்சலில் ஒரு மெயில் வந்திருந்தது. அதில் ஐகோர்ட்டு வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஐகோர்ட்டு அலுவலர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஐகோர்ட்டில் வந்திருந்த நீதிபதிகள், பொதுமக்கள், வக்கீல்கள், ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வளாகத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டு வளாகத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் ஐகோர்ட்டு வளாகம், நீதிபதி குடியிருப்பு, நீதிமன்ற அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனை முடிவில் புரளி என தெரியவந்தது. இதனால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். வெடிகுண்டு புரளியால் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணை சற்று தாமதமாக தொடங்கியது.
இதற்கிடையில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
- தமிழக வெற்றிக்கழகத்தினர் கொடுத்த 3 இடங்களிலும் காவல்துறை அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.
கரூர்:
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை (சனிக்கிழமை) அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கரூரில் விஜய் பிரசாரம் செய்வதற்காக லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, கரூர் பஸ் நிலைய மனோகரா கார்னர் ரவுண்டானா ஆகிய 3 இடங்களில் ஒன்றை ஒதுக்குமாறு காவல்துறையினரிடம் அனுமதி கோரினர். லைட் ஹவுஸ் கார்னர் ஒதுக்குவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அந்த இடத்தை ஒதுக்க இயலாது என காவல்துறை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து இடத்தை தேர்வு செய்து அனுமதி பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கரூர் வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையாவை சந்தித்து மனு அளித்தார். அதில் விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
ஆனால் காவல்துறையினர் பிரசாரக் கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை, எத்தனை வாகனங்கள் உள்ளிட்ட விவரங்களை கூறினால் மட்டுமே அதற்கேற்றவாறு இடம் ஒதுக்கப்பட்டு அனுமதி வழங்க இயலும் எனக் கூறினர். அதைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் காவல்துறையினர் கேட்ட விபரங்களை நிர்வாகிகள் மூலம் அளிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இன்று காலை வரை விஜய் பிரசாரம் செய்யும் இடம் இறுதி செய்யப்படவில்லை. தமிழக வெற்றிக்கழகத்தினர் கொடுத்த 3 இடங்களிலும் காவல்துறை அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் நின்று பேசுவதற்கு விஜய்க்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
அவ்வாறு வேலுச்சாமிபுரம் ஒதுக்கப்படும பட்சத்தில் நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாமக்கல்லில் பிரசாரம் செய்யும் இடம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கரூரில் இதுவரை இறுதி செய்யப்படாமல் உள்ளது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று மதியத்துக்குள் விஜய் பேசும் இடம் உறுதி ஆகும் என காவல்துறை மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த 3 தினங்களாக தொடர்ந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் நீடித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்குபாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சேர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார்.
- அ.தி.மு.க.விலிருந்து விலகிய மருது அழகுராஜ் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். இவர் அ.தி.மு.க.வின் தீவிரப் பேச்சாளர் ஆவார்.
அ.தி.மு.க.வில் உட்கட்சி மோதல் ஏற்படவே எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இரு தரப்பினராகப் பிரிந்தனர். அப்போது மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சேர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அவர் சமீப காலமாக அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க.விலிருந்து விலகிய மருது அழகுராஜ் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்த நிலையில் மருது அழகுராஜூக்கு தி.மு.க. செய்தித் தொடர்பாளர் துணைத் தலைவராக தி.மு.க. தலைமை நியமித்துள்ளது.
- தனது சென்னை பயணம் குறித்து வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர்.
- மனைவி மருத்துவமனையில் இருப்பதால்தான் சென்னைக்கு சென்றேன்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தனது சென்னை பயணம் குறித்து வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர்.
* யாரையும் அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை என கூறிய பின்னரும் வதந்தி பரப்புகின்றனர்.
* மனைவி மருத்துவமனையில் இருப்பதால்தான் சென்னைக்கு சென்றேன்.
* வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது.
* அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காக பேசி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






